Friday, 13 November 2009

Michael Jakson's 'Captain EO'.



நம்மில் பலருக்கு தெரியாது, மைகேல் ஜாக்சன், ஒரு 3D படத்தில் நடித்துள்ளார் என்று! அந்தப் படத்தின் பெயர் CAPTAIN EO . 17 நிமிடங்களே ஓடக்கூடிய இந்தப் படம் டிஸ்னி பார்க்குகளில் மட்டும் பிரத்தியேகமாக காண்பிக்கப்பட வேண்டி,  'ஸ்டார் வார்ஸ்' புகழ் ஜார்ஜ் லுகாஸ் அவர்களால் தயாரிக்கப்பட்டு, 'காட் ஃபாதர்' புகழ் பிரான்சிஸ் போர்ட் கப்போலா அவர்களால் இயக்கப்பட்டது. முதலில் ஸ்டீபன் ஸ்பில்பேர்க் அவர்களால்தான் இயக்கப்பட இருந்தது. ஆனால் அவர் அந்த நாட்களில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பு கப்போலாவிற்கு சென்றது.



1986 ஆம் வருடக் கணக்கின்படி ஒரு 17 நிமிடப் படத்திற்கு $30 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்டது மிகப்பெரும் தொகையாகக் கருதப்பட்டது! அதாவது ஒரு நிமிடப் படத்திற்கு $1.76 மில்லியன் டாலர் செலவிடப்பட்டு உள்ளது!
இந்தப் படத்தில் இரண்டுப் பாடல்கள் உள்ளன. இசை ஜேம்ஸ் ஹார்னர் (Die Hard, Aliens, Braveheart, Titanic,...). 'Another part of me' என்றப் பாடல், சில காலத்திற்கு பின், ஜாக்சனின் புகழ்பெற்ற 'BAD' ஆல்பத்தில் இன்னும் மெருகூட்டப்பட்டு சேர்க்கப்பட்டது. இன்னொரு பாடலான ' We Are Hear to Change the World', அவரின் 'Ultimate Collection' ஆல்பத்தில் வந்துள்ளது.




வேற்று கிரகத்தில் நடப்பதுப்போல் உள்ள காமிக் கதையை மூலமாகக் கொண்டு கதைக்களம் அமைந்துள்ளது. இதில் கதாநாயகன் கேப்டன் EO வாக மைகேல் ஜாக்சனும், நாயகி/வில்லியாக அஞ்சலிகா ஹட்சனும் நடித்துள்ளார்கள். நாகனுடன் கூட வரும் பாத்திரங்களான ஃபஸ் பால், இரட்டைத்தலை இடி & ஒடி, மேஜர்  டெமோ என்கிற இயந்திர பாதுகாப்பு அதிகாரி, அதைப்போலவே சிறிய டெமோ, யானைப் போன்ற உருவமுடைய ஹூடர் போன்ற பாத்திரங்கள் மறக்கமுடியாதவை.





ஜாக்சனின் மரணத்திற்குப்பின் வால்ட் டிஸ்னி நிறுவனத்தார், இப்படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். அப்படி இருக்கும் படசத்தில், அவரின் ரசிகர்கள் இப்படத்தை  மீண்டும் ஒருமுறை அட்டகாசமான 3D தொழில்நுட்பத்தில் கண்டு மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!  

நாமும்  அதை ஒருமுறைப் பார்ப்போமா?

Captain EO

sd | MySpace Video

No comments:

Post a Comment

ஊக்க உரைகள்