Monday, 9 November 2009

மைகேல் ஜாக்சனின் கதை(கள்) [வீடியோ(க்கள்)]


ஆமாம்! மைகேல் ஜாக்சனின் கதைகள்தான். அவர் இறந்ததில் இருந்து, இன்றுவரை எத்தனை விதங்களில் வீடியோக்கள் தயாரிக்கப்பட்டனவோ தெரியவில்லை. நான் இதுவரை நான்கு வீடியோக்களை பார்த்து இருக்கிறேன். அவர் இறப்பதற்கு முன் அவரின் மீதான சர்ச்சைகளைப் பற்றிய வீடியோக்களை நாம் ஏற்கனவேப் பார்த்துள்ளோம்.  இப்போது புதிதாக வெளிவந்துள்ள அந்தக் காணொளிகளை
காண்போமா? எல்லாமே முழுநீள வீடியோக்கள். ஆகவே நேரம் ஒதுக்கி முழுமையாகப் பார்க்கவும்.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


MICHAEL JAKSON: LIFE OF A SUPER STAR



THE TRUE STORY OF MICHAEL JAKSON




MICHAEL JAKSON UNMASKED




THE  MICHAEL JAKSON - STORY 1958 - 2009



இந்தத் தொகுப்பில் கடைசியாக நாம் பார்க்கப்போவது , தன் மாளிகையான நெவர் லேண்டில், தானே முன் வந்து, மார்டின் பஷீர் என்ற BBC , ITV மற்றும் ABC தொலைகாட்சி நிறுவனங்களில்  வேலை செய்தவனிடம்,(ஏக வசனத்தில் அழைப்பதற்கு வருந்தவில்லை) அப்போதைய களங்கங்களிலிருந்து தன்னை, குற்றமற்றவன் என்று நிரூபிக்க, அவனை மிகவும் நம்பி தன்னையே  ஒப்படைத்தார். ஆனால் அவனோ, அதற்கு மாறாக, அவர் பேட்டியில் கூறியதைத் திரித்து, நம்பிக்கை துரோகம் செய்தான் அந்த மார்டின் பஷீர்.  அந்த தொலைகாட்சி தொடர் வந்த இரவே அவர் இறந்துவிட்டார் என்றேக் கூறவேண்டும். மறுபடியும் திருத்தப்படவேமுடியாத அப்படி ஒரு பச்சைத் துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது... இதுப்பற்றி Topix வலைத்தளத்தில் ஜாக்சனின் ரசிகர்களின் கருத்துக்களைக் காண இங்கே.
இவ்வளவையும் செய்துவிட்டு அவரின் மரணத்துக்குப்பின் பஷிர்  கூறியது இதுதான்,

என்ன சொல்லி என்ன பயன்? அருமையான ஒரு மனித நேயம்மிக்க மகாக் கலைஞனை இழந்துவிட்டோம். ஈடு செய்யவே முடியாத இழப்பு.

சரி, அந்த வீடியோவைப் பார்க்காதவர்களுக்காக, இதோ....

LIVING WITH MICHAEL JACKSON



என்ன நண்பர்களே, எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டதா?
சரி , இப்போது இதே பஷிரின் கயமை வெளிப்பட ஜாக்சனின் சொந்த கேமராமேனால் கூடவே எடுக்கப்பட்ட வீடியோக்களைக் காண...


வீடியோ 1, வீடியோ 2, வீடியோ 3, வீடியோ 4, வீடியோ 5, வீடியோ 6,

வீடியோ 7, வீடியோ 8, வீடியோ 9.

இப்போது ' We Are the World ' என்ற மைகேல் ஜாக்சனால்( கூட எழுதியவர் லியோனெல் ரிச்சி) எழுதிப் பாடவும் செய்த புகழ்ப்பெற்ற பாடலைப் பார்ப்போமா? இந்தப் பாடலின் பின்னணிக் கதை இதுதான்.
1984-1985 ஆம் ஆண்டுகளில், ஆப்பிரிக்காவில், குறிப்பாக எத்தியோப்பாவில் மிகக்கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. ஏறக்குறைய  ஒரு மில்லியன் மக்கள் உணவின்றி மாண்டனர். அப்போது ஜமைக்கா நாட்டில் பிறந்து, அமேரிக்காவில் வாழ்ந்துக் கொண்டிருந்த, புகழ்ப் பெற்ற கறுப்பினப் பாடகரான ஹேரி பெலாஃபாண்ட் ( Beetlejuice படத்தில் வரும்  அவரின் பிரபல  பாடலான Banana Boat  பாடலைக் கேட்க) அவர்களின் முதல் முயற்சியால் உருவானப் பாடல் இது. 21 முக்கியப் பாடகர்களும், 22 கோரஸ் பாடகர்களாலும் பாடப்பட்டது. இந்த கோரஸில் ஜாக்சனின் சகோதர , சகோதரிகளும், மற்றும் ஹேரி அவர்களும் அடங்குவர்.
நடத்துனர், ஜாக்சனின் முக்கிய, புகழ்ப்பெற்றஆல்பங்களைத் தயாரித்த க்யுன்சி ஜோன்ஸ்.(மேலும் விவரங்களைக் காண)

இதோ அந்தப் பாடல்....


சும்மா ஏதாவது எழுதிவிட்டுப் போங்களேன்!

2 comments:

  1. I am a great michael Jackson fan. Really a great article. After reading and hearing the pains MJ had gone through, i really felt very bad. MJ has a Guinness Record for donating huge amount of money in the celebrity category. Still he did not have a good life.
    Really great information about MJ. Keep up the good work.

    ReplyDelete
  2. Thank you for your valuable feedback on my effort,when everybody just entered and left. May be they must have been too upset on seeing the sufferings of our beloved MJ. Keep watching my blog. You will have surprises in future!

    ReplyDelete

ஊக்க உரைகள்