Tuesday 4 August 2009

மைகேல் ஜாக்சனின் நிஜப் பேய் (வீடியோ)


சும்மா 'நெவெர் லாண்டில்' மைகேல் ஜாக்சனின் ஆவி சுத்துது, பேய் கத்துது, அப்படி,.... இப்படி,.... என்று வீடியோக்கள் வந்தவண்ணம் உள்ளன. அவையெல்லாம் சும்மா டுபாகூர்! இதுதான் அவரின் உண்மையான பேய் வீடியோ. இந்த வீடியோவைப் பற்றி நான் முன்பே கேள்விப் பட்டிருந்தாலும், முழுதாகப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்ததால் உங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.

சுமார் 40 நிமிடங்கள் ஓடும் இசைப்படம். Michael Jackson's Ghosts' என்றப் பெயரில் 1996 ஆம் வருடம் கான்ஸ் திரைவிழாவில் வெளியானது. மறுபடியும் VHS வீடியோவாக 1997 வெளியிடப்பட்டது. அவரின் மூன்றுப் பாடல்கள் வெவ்வேறு ஆல்பங்களில் இருந்து எடுக்கப்பட்டு ஒரே இசை வீடியோவாக தயாரிக்கப்பட்டது. இதன் மூலக் கதை, திகில் கதை மன்னன், ஸ்டீபன் கிங்கும், மைகேல் ஜாக்சனும் சேர்ந்து உருவாக்கி இருந்தனர். நடன அமைப்பு மைகேல் ஜாக்சன். படத்தை இயக்கியது ' ஸ்டான் வின்ஸ்டன்'. இவர் வேறு யாருமில்லை...
Terminator I,II,III, Predator I,II, Jurassic Park I,II,III, Aliens, The Ghost and the Darkness, End of Days, Congo, Lake Placid, Artificial Intelligence, Iron Man, The Entity(!), The Thing, Edward Scissorhands, Batman Returns, Pearl Harbour, போன்ற புகழ்ப் பெற்றப் படங்களுக்கு special makeup, special effect,மற்றும் special sound போன்றத் துறைகளில் பணிப்புரிந்து இதுவரை நான்கு ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச் சென்றவர். அவரிடம் ஒரு அரைமணி நேரப் படத்தை இயகித் தாருங்கள் என்று கூறினால், எப்படி அமர்கள்ளப்படுத்துவார் என்று இந்த வீடியோயைப் பார்த்தல் தெரியும். இதில் இந்த நடனப் புயல் ஐந்து வேடங்களில் நடித்து, உண்மையிலேயே, தான் பாட்டிலும் நடனத்திலும் மட்டுமல்ல நடிப்பிலும் சோபிக்க முடியும் என்று நிருபித்துள்ளார்.

கதையில் ஒரு ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள திகில் மாளிகையில் வச்சிக்கும் 'மாஸ்ட்ரோ' (ஜாக்சன்) எல்லோரயும் பயகாட்டுவதில் திறமைசாலி. அந்த ஊர் சிறுவர்களுக்கு அவரைப் மிகவும் பிடிக்கும். ஆனால் அவர்களின் பெற்றோர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அதனால் அந்த ஊரின் மேயரோடு (ஜாக்சன்) சேர்ந்து அவரைத் துரத்த அந்த மாளிகைக்கு வருகின்றனர். அப்போது அங்கு நடக்கும் அட்டகாசங்கள் தான் இந்தப் படம். படம் வந்த வருடத்தில் இதன் தொழில் நுட்பங்கள் எல்லோரயும் வாயை பிளக்க வைத்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மைகேல் ஜாக்சன் ரசிகர்கள் மட்டுமல்லாது எல்லோரும் பார்க்கவேண்டிய வீடியோ இது.

ஜாக்சன் .... ஜாக்சன்தான்!