Monday 26 October 2009

Grizzly Man



2005 இல் வெளிவந்த இந்த ஆவணப்படம் Grizzly Man, ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக்குவித்து, பார்த்தவர்களை எல்லாம் தடுமாற வைத்தது. 'திமோத்தி ட்ரெட்வெல்' (Thimothy Treadwell - 1957-2003) என்ற மனிதனைப் பற்றியது. 'க்ரிஸ்லி கரடிகள் (Grizzly Bears) அல்லது கொடுங்கரடிகள்' என்று அழைக்கப்படும், அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள அலஸ்கா மற்றும் கனடா மலைப் பிரதேசங்களில் வாழும் கரடிகளை பற்றியே நினைத்து தன் வாழ்நாளை அர்பணித்தவர். அத்தோடு நின்றிருந்தால் பரவாஇல்லை.... ஆனால், பரிதாபம்! தான் நேசித்த கரடிகளுக்கு தான் மட்டுமல்லாமல், தன் பெண் நண்பரின் உயிரையும், உடலையும் பலியாகக் கொடுக்க வேண்டி இருந்தது!



இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற இயக்குனரான 'வெர்னர் ஹெர்ஸாக்' (Werner Herzog) என்பவர். ஆனால் இவர் பயன்படுத்தியது எல்லாம், திமோத்தியால் எடுக்கப்பட்ட வீடியோக்களே! இந்த கரடிகள் அதன் சாம்பல் நிறத்தால் அந்தப் பெயரைப் பெற்றன. The Edge என்றப் படத்தை பார்த்தவர்களுக்கு இதன் பயங்கரம் புரியும். சுமார் 7 முதல் 8 அடி உயரம் வரை வளரும் இவை, சுமார் 400 கிலோ வரை எடை இருக்கும். திமோத்தி சுமார் பதிமூன்று வருட கோடை நாட்களில். அலஸ்கா காடுகளில் இக்கரடிகளின் பின்னே அலைந்துத் திரிந்து எடுத்தவை. காலப்போக்கில், அந்த பயங்கரமான கரடிகள் இவரை நம்பி, அன்பாக பழக ஆரம்பித்துவிட்டன என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்! அங்கு இருந்த வனக்காவலர்களின் எச்சரிக்கையும் மீறி, அவைகளின் மிக அருகேச் சென்று, அவைகளைத் தொடவும் முற்பட்டார். அவைகளை படமாகவும் எடுத்து, இந்த கரடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தினார்.


 ஆனால் 2003 ஆம் வருடம், தன் 13 வது வருட விஜயத்தின் போது, அவரும் அவரின் பெண் நண்பரான ஆமி என்பவரும், ஒரு படப்பிடிப்பின் போது, ஒரு கரடியால் கொடுரமாகத் தாக்கப்பட்டு, பாதி தின்னப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதுதான் மனிதவாழ்வு! இந்த கொடுர சம்பவத்தின் வீடியோ கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஆடியோ கிடைத்திருக்கிறது! ஆனால் அதைக்கேட்ட இயக்குனர், மனம்கலங்கி, அதை இந்தப் படத்தில் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அதை அழித்துவிடவும் சிபாரிசு செய்தாராம்! இந்தப் படத்தின் மூலமாக மரணமும்,அழிவும் தவிர்கமுடியாதவை .... இயற்கையில் நமக்கென்று சில வரைமுறைகள் உள்ளன என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, அதன் தாக்கத்திலிருந்து என்னால் விடுப்பட சிலநாட்கள் ஆயிற்று! பரிதாப உணர்ச்சியோடுக் கூடிய சோகம் என்னைத் தழுவிக்கொண்டது. அறிவுரையை கேட்காமல் தன் வழியே சென்ற ஒரு புத்திசாலி நண்பனை இழந்ததுப்போல் உணர்ந்தேன்! என்னால் ஒரு கனத்த பெருமூச்சுத்தான் விடமுடிந்தது. உங்களுக்கு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

  RIP, ... Grizzly Man.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]




Thursday 8 October 2009

ஆஸ்திரேலிய அருவருப்பு ! (வீடியோ)


 ஒரு மறைந்த,  மாபெரும்,  உலக மகாக் கலைஞனை இப்படி கேவலப் படுத்துகிறார்கள் என்றால், சாதாரண மக்களின் கதி?

Jackson Jive Racist Outrage
Posted Thu 8 Oct 2009 4:30PM BST by Johnny Famethrowa in Touching The Void

The Michael Jackson news just keeps on coming. The difference here being it's got nothing to do with the deceased King of Pop. In fact, the latest drama took place many miles from his spiritual home of California. Because producers on an Australian TV show are caught-up in an engulfing furore after allowing a Jackson 5 "tribute" act to appear, outraging judge Harry Connick Jr and, we assume, many more the world over.



Bucking international awareness stretching back years, the Jackson Jive appeared with blacked-up faces in an act that visibly upset their guest, who awarded them zero stars. Host Daryl Somers was forced to apologise, while Connick Jr (pictured) pointed to the fact his nation have "spent so much time trying to not make black people look like buffoons", insisting: "If I knew that was going to be part of the show I definitely wouldn't have done it". Famethrowa doubts the programme makers have heard the last of this...
Courtesy: Yahoo Music.
http://new.uk.music.yahoo.com/blogs/touchingthevoid/9794/jackson-jive-racist-outrage/














இது எப்படி இருக்கு....? ( எச்சரிக்கை: கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் உள்ளன)



We Love You Jackson!

நேட். ஜியோவின் போட்டோகிராபர்கள்.(வீடியோ)


















Coutresy: National Geographic Magazine.

ஆம். நாம் பார்த்த அனைத்துப் புகைப்படங்களும் அவர்கள் எடுத்துத்தான்! இது கடலின் ஒருத்துளி. எல்லாவற்றையும் பார்க்க வேண்டுமென்றால் ஒரு நூற்றாண்டுவரை பின்னே செல்லவேண்டும். கடந்த நூறு ஆண்டுகளாக நேஷனல் ஜியாகரபிக் நிறுவனம் செய்து வரும் எண்ணற்ற சேவைகள், மனித வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. அதிலும் அந்நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர்களைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை. அவர்கள் அளித்துள்ள ஒவ்வொரு புகைப்படங்களுமே, நம்மை பரவசப்படுத்தும், துணுக்குறச்செய்யும், வாயடைத்துப் போகவைக்கும், கண்கலங்க வைக்கும்...!  அத்தகைய சிறப்பு மிக்க கலைஞர்களைப் பற்றிய ஒரு காணொளியைப் பார்ப்போமா?

Tuesday 6 October 2009

இரட்டைக் கோபுரங்களுக்கு இடையே.....(வீடியோ)










இன்னும் எத்தனைக் துயரக் கதைகள் உள்ளதோ? 9/11- 2001, உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் தகர்க்கப் பட்ட நாளன்று, அதன் காலடியில் இருந்த ஹோட்டல் மேரியோட் என்ற கட்டிடத்தினுள் 940 பேர்கள் இருந்தனர் என்று நம்மில் எதனைப் பேர் அறிவோம்? அந்த இருந்தக் கட்டிடங்களுமே இடிந்து இந்த ஹோட்டலின் மேல்தான் விழுந்து! அப்போது இந்த ஹோட்டலில் இருந்த உயிர்களின் கதி? இதற்க்கு விடை கீழுள்ள 'Hotal Ground Zero' என்ற காணொளியில் உள்ளது. சில்லிட வைக்கும் சம்பவங்கள் என்றுக் கூறுவார்களே, அதுதான் இது! வாருங்கள் பாப்போம்.


Monday 5 October 2009

அற்புத நடிகர் அல் பசினோ (வீடியோ)






  • தந்தை ஸல்  பசினோ. ஒரு இத்தாலிய அமெரிக்க இன்சூரன்ஸ் எஜன்ட். தாய் ரோஸ் பசினோ.




  • 17 வயதிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிட்டார். பின்பு நடிப்புப் பள்ளியில் சேர்ந்துப் படிக்க ஆரம்பித்தார்.




  • அவருடைய தாத்தாப் பாட்டி, 'காட்பாதர் புகழ்' சிசிலி நாட்டின் கோர்லேஒனே என்ற இடத்தில இருந்து வந்தவர்கள். காட்பாதர் ரசிகர்களுக்கு இந்தப் பெயர் மிகவும் பரிச்சியம்.




  •  இதுவரை திருமணமே செய்யாத ஹாலிவுட் நடிகர்களில் இவரும் ஒருவர்.




  • இவர் முதல் முதலாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது 1973 இல் காட்பாதர் படத்துக்காக.




  • ஆனால் அதன் பிறகு அவர் இந்த விருதை வாங்கியது இருபத்தொரு வருடங்கள் கழித்து.... 1992 இல் Sent of a women என்றப் படத்துக்காக .




  • இதற்க்கு நடுவில் இவர் இந்த விருதிற்காக ஐந்து முறைப் பரிந்துரைக்கப்பட்டார்.




  •  காட்பாதர் படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக வரும் மைகேல் கோர்லேஒனே பாத்திரத்தில் நடிக்க, அதன் இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கப்போலா இவரைத் தேர்ந்தேடுத்தப்போது, படத் தயாரிப்பாளர்கள் இவரை பலமுறை வேண்டாம் என்று நிராகரித்தது விட்டனர். ஆனால் இயக்குனர் பிடிவாதமாக இருந்ததால் அந்த மாப்பெரும் வாய்ப்பைப் பெற்றார்.




  • ஆனால் காட்பாதர் II இல் நடிக்க, நிறையப் ஊதியம் கேட்டு கப்போலாவை வெறுப்படைய வைத்தார். பிறகு சாமதானமடைந்து தான் ஊதியத்தை குறைத்துக் கொண்டார்.




  • பின்னர் காப்போலோவின் Apocalypse Now (1979) பட வாய்ப்பை உதறிவிட்டார். இப்படி அவர் வேண்டாம் என்று விலகிய வெற்றிப்படங்கள் பல.




  •  அறுபது வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தகப்பனானார்.




  • தன்னுடைய குரலைப் பாதுகாக்க, தினமும் குறைந்தது நாற்பது முதல் அறுபது சிகரட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் என்றாவது ஒரு மூலிகை சிகரட் மட்டும்.




  • அவரின் உயரம் 5' 7''.




  • அவரின் முக்கியமானப் படங்கள்....


  •           Panic in Needle Park.
              Godfather I,II,&III,
              Serpico,
              Dog Day Afternoon.
              And Justice for all,
              Scarface,
              Sea of love,
              Dick Tracy,
              Glengarry Glen Ross,
              Scent of a women,
              Carlito's way,
              Heat,
              Donnie Brasco,
              Devil's advocate.....

    மற்றும் பல. இதில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் Dog Day afternoon ஒன்று. மிஸ் பண்ணவே கூடாத படங்களில் ஒன்று. பார்க்கவிரும்பினால்  கேளுங்கள் லிங்க் தருகிறேன்.

    இப்போது அவரைப் பற்றிய ஒரு காணொளியைப்  பார்க்கலாம்.