Thursday 12 November 2009

CHILDREN OF GOD.



நேபாளம் நாட்டின் தலை நகரம் காட்மண்டு. அதன் நடுவே ஓடும் பாக்மதி நதி. அதன் கரையில் இருக்கும் பசுபதிநாத் கோவில். மிகவும் புனிதமாகக் கருதப்படும் இடம். இது ஒரு சிவன் கோவில். ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் மிகவும் முக்கியமான தளங்களில் இதுவும் ஒன்று. இங்கு என்ன விசேஷமென்றால், இறந்துப் போனவர்களின் உடலை இந்த பாக்மதி நதியில் மூழ்கவைத்து, பின்பு எரித்தால் இறந்தவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று நம்பப்படுகிறது. அதனால் இந்த இடம் எப்போதும், நம்ப நாட்டின் காசி மற்றும் வாரணாசி கோவில்களைப்போல் எப்போதும் பிசியாகவே இருக்கும்.

ஆனால் இப்போது நாம் பார்க்கப் போவது இவைகளைப்பற்றி இல்லை! இந்த பாக்மதி நதிக்கரையில் வசிக்கும் நிராதரவான, தன் போக்கில் திரியும் சிறுவர்களைப் பற்றியது. அவர்கள் வாழுவது இறுதிச்சடங்கு செய்யவரும் பக்தர்களின் பூஜைக் கழிவுகள்  மற்றும் பிண சாம்பல்களின் கழிவுகளில் கிடைப்பவற்றை கொண்டு எப்படி ஜீவிகிறார்கள் என்பதுப்பற்றி மனித நேயத்தோடு எடுக்கப்பட்ட ஒரு
 காணொளி. இப்படத்தில் நாம் பின்தொடரப்போவது அலேஷ் என்ற சிறுவனையும் அவனின் தம்பி மற்றும் தங்கையை. அவனின் பிச்சை எடுக்கும்,  குடிக்கார தாயையும் சந்திக்க இருக்கிறோம். இவர்களின் வாழ்க்கை சொர்கத்துக்கும் நரகத்துக்கும் நடுவே ஊசலாடுவதைக் காணமுடியும். இவ்வளவு இருந்தும் அவர்கள் எவளவு மகிழ்சியாக இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது! ஆனால்  இப்படியும் சிறுப் பிள்ளைகள்  வாழுகிறார்கள் என்பதைப் பார்க்கும்போது நம் நெஞ்சு கனக்கிறது. இந்தப் படம் முடிந்ததும், மனிதநேயம் உள்ளவர்கள் கண்டிப்பாக அதன் தாக்கத்தை  உணருவார்கள்.

இந்தப் காணொளியை இயக்கியவர் தென்  கொரியாவைச் சேர்ந்த Yi Seung-jun என்பவர். (யார் யாருக்கு எப்படி முடியுமோ அப்படி வாசித்துக் கொள்ளவும்!). சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை இரண்டுமுறைப் பெற்றது. அதற்கு தகுதியானதும் கூட என்று பார்பவர்களுக்கு புரியும்.

ஆகவே நண்பர்களே, இதோ அந்த படம் உங்களின் பார்வைக்கு..... Children of God.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]


 


இந்த வாரம் நேபாள வாரம்  போலுள்ளது! நேற்றுத்தான் நேபாளம் குறித்த இரண்டு பதிவுகளைப் பார்த்தேன்.தற்போது நான்!  இதற்கு அடுத்து, உலகையே உலுக்கிய 'நேபாள அரசக் குடும்பப்  படுகொலை' பற்றிய வீடியோப் பதிவு. என்ன பார்க்கலாமா?

No comments:

Post a Comment

ஊக்க உரைகள்