Saturday 15 May 2010

பாடல் எனும் Time Machine !


சில காலமாகவே உலகம் முழுவதும் Time Machine எனப்படும் கால இயந்திரத்தைப் பற்றி பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிகழ்க்காலத்திளிருந்து எதிர் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் நம்மி அழைத்துச் செல்லும் இயந்திரம் அது. ஆனால் அது உடனேடியாக சாத்தியப்படாது என்றும் கூறுகின்றனர். ஆனால் நம்மால் அப்படி பிரயாணிக்க முடியும்! ஆமாங்க ! என்னோடு வாங்க, நான் அழைத்துச் செல்லுகிறேன். நான் வழக்கமாக போய் வந்துக்கொண்டுத்த்தான் இருக்கிறேன்! வால்வு ரேடியோக்களும், ட்ரான்ஸ்சிஸ்டர்களும், ரெக்கார்ட் ப்ளேயர்களும், டேப் ரேக்காடர்களும் இருந்த காலத்திற்கு செல்லலாமா ?  அந்த நாட்களில், ரெக்கார்டிங் கடைகளில் தவமிருந்து ஆடியோ கேசட்டுகளை  வாங்கி வந்து நம்ம கேசட் பிளேயர்களில் பெருமையோடு போட்டு, கேட்டு  மகிழ்ந்த காலங்களுக்கு போகலாம் வாங்க. ( என்ன ஃப்ரீயா ஜெகன்! வாங்க போகலாம்!)

கண்களை மூடிக்கொண்டு நம்ம இளவயது நினைவுகளை அசைப்போடுங்கள்.... நிறைய உள்ளது ... சிலப் பாடல்கள் உங்களின் ரசிப்புக்கு....
எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் சுவை அதிகம் என்பதால், ஒரு சஸ்பேன்சுக்காக வெறும் பாடல்கள் மாத்திரம்.....
































.

Friday 14 May 2010

பாடல்கள் ஒரு கால இயந்திரம்...A Time Machine ! (1)


சில காலமாகவே உலகம் முழுவதும் Time Machine எனப்படும் கால இயந்திரத்தைப் பற்றி பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிகழ்க்காலத்திளிருந்து எதிர் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் நம்மி அழைத்துச் செல்லும் இயந்திரம் அது. ஆனால் அது உடனேடியாக சாத்தியப்படாது என்றும் கூறுகின்றனர். ஆனால் நம்மால் அப்படி பிரயாணிக்க முடியும்! ஆமாங்க ! என்னோடு வாங்க, நான் அழைத்துச் செல்லுகிறேன். நான் வழக்கமாக போய் வந்துக்கொண்டுத்த்தான் இருக்கிறேன்! வால்வு ரேடியோக்களும், ட்ரான்ஸ்சிஸ்டர்களும், ரெக்கார்ட் ப்ளேயர்களும், டேப் ரேக்காடர்களும் இருந்த காலத்திற்கு செல்லலாமா ?  அந்த நாட்களில், ரெக்கார்டிங் கடைகளில் தவமிருந்து ஆடியோ கேசட்டுகளை  வாங்கி வந்து நம்ம கேசட் பிளேயர்களில் பெருமையோடு போட்டு, கேட்டு  மகிழ்ந்த காலங்களுக்கு போகலாம் வாங்க. ( என்ன ஃப்ரீயா ஜெகன்! வாங்க போகலாம்!)

கண்களை மூடிக்கொண்டு நம்ம இளவயது நினைவுகளை அசைப்போடுங்கள்.... நிறைய உள்ளது ... சிலப் பாடல்கள் உங்களின் ரசிப்புக்கு....
எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் சுவை அதிகம் என்பதால், ஒரு சஸ்பேன்சுக்காக வெறும் பாடல்கள் மாத்திரம்.....
































.

Saturday 8 May 2010

சாப்ளின் எனும் ஜீனியஸ்! (வீடியோ)







உலகம் முழுதும்,  சினிமா என்று எடுத்துக்கொண்டால், சிலரைத்தான் ஜீனியஸ் என்றுக் குறிப்பிட முடியம் . அந்த வகையில் உலகமே போற்றும் சார்லி ஸ்பென்சர் சாப்ளின் என்ற நகைச்சுவை மேதையும் ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர், யாரோ சொல்லிக் கொடுத்து, யாரோ தயாரித்து , யாரோ இயக்கி படம் பண்ணியவரில்லை. அவர் படத்துக்கு அவரேத்தான் எல்லாம்.


சாப்ளின் என்றவுடன், அவரின் 'Little Tramp' எனப்படும், வீடு வாசலில்லா நாடோடிக் கதாப் பாத்திரத்தை நினைப்தாலே  மூக்குக்கு கீழே மட்டும் உள்ள மீசையும், கருப்புத்தொப்பியுடன், டைட்டான கொட்டுடன், தொளதொள என்று பெரிய அளவில் பேகி பேண்டும், கையில் மூங்கில் வாக்கிங் ஸ்டிக்கும், பெரிய சைஸ் காலணிகளும் தான் நினைவுக்கு வரும். இந்த சின்ன நாடோடி உருவத்தை வைத்துக்கொண்டு உலகையே சிரித்து மகிழ வைத்தவர், அன்றும் சரி இன்றும் சரி. இவை எல்லாம் வழக்கமாக எல்லோரும் சொல்லுவதுத்தான். நாமும் அரைத்த மாவையே அரைக்கவேன்டாம். துவைத்த ... சரி.. சரி ...  மேலே போகலாம் வாங்க.


சார்லி சாப்ளின் : சில பல தகவல்கள்.


  • படங்கள் எடுத்து கோடீஸ்வரரானப்போதும், ரொம்ப நாள் தான் தங்கியருந்த பழைய அழுக்கு ஹோட்டலை விட்டு வெளியே வரவில்லை.
  • பின்பு  ஹாலிவுடில் தன் ஸ்டுடியோ தச்சர்களை வைத்தே 'ப்ரிவர்லி ஹில்ஸ்' பகுதியில் பெரிய வீட்டைக் கட்டினார். அதன் பெயர் 'Break Away House'
  • வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான்கு பெண்டாட்டிகள்.  முதல் மனைவி மில்ட்ரெட் ஹேரிஸ், மணமகன்  29, மணமகள் 16, ஒரு ஆண் பிள்ளை, மூன்று நாட்கள் மட்டும் வாழ்ந்தது.
  • ரெண்டாவது   மனைவி லிட்டா க்ரே,  35 - 16 ... இரண்டு ஆண பிள்ளைகள்,
  • மூணாவது பவுலேட் கோட்டெர்ட்,  47 - 28 ... குழந்தைகள்    இல்லை,
  • நாலாவது ஓனா ஓ'னில், 54 - 18 ... மூன்று ஆண், ஐந்து பெண் பிள்ளைகள்
           இப்படி வாழ்வாங்கு வாழ்ந்தவர் சாப்ளின்!


  • சாப்ளின் போல் உருவம் படைத்தவர் - போட்டியில் இவரும் கலந்துக்கொண்டு, இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வந்தார் என்றுக் கூறப்படுகிறது!
  • இங்கிலாந்தில் மேடை நாடகங்களில்  இருக்கும் போது ஸ்டேன் லாரல், இவருக்கு கீழ் பயிற்சியில் இருந்தவர்!
  • இருவரும் அமெரிக்கா வந்து, ஒன்றாகத் தங்கியருந்த ஹோட்டலில், சமைக்க அனுமதி இல்லை. அப்போது லாரல் சமைக்கும்போது சத்தம் வராமல் இருக்க, சாப்ளின் வயலின் வாசிப்பாராம்!
  • அந்த 'Tramp' எனப்படும் நாடோடிக் கதாப்பாத்திரத்தின் உருவத்தை வடிவமைக்க அவர் சுயமாக உபயோகித்தது அவரின் கைத்தடி ஒன்றுதான்! மற்ற உடமைகள் எல்லாம் நண்பர்களிடமிருந்து....! தொளதொளா பேன்ட்  Roscoe `Fatty` Arbuckle  சீனியர் நடிகரிடமிருத்தும், அவரின் மாமனாரிடமிருந்து அந்தத் தொப்பியும், Chester Conklin என்ற சக நடிகரின் கொட்டும், Ford Sterling  என்ற அமெரிக்க அந்தநாள் காமெடி நடிகரின் 14 சைஸ் ஷூ வும், சக நடிகர்  Mack Swain  வைத்திருந்த கருப்பு நிற கிரேப் பேப்பர், அந்த புகழ்ப்பெற்ற துண்டு மீசைக்கும் உதவியது.
  • அவரின் கைத்தடியும், தொப்பியும் 1987 ஆம் வருடம், 1,50,000 டாலர்களுக்கு ஏழாம் விடப்பட்டது.
  • இதுப் பரவாயில்லைங்க... அவர்  சுவிசர்லாந்தில்  1977 ஆம் வருடம் கிறிஸ்மஸ் தினத்தன்று இறந்து  அடக்கம் செய்யப்பட்டபின், மூன்று மாதம் கழித்து, அவரின் குடும்பத்தாரிடம் பணம் பிடுங்கவேண்டும் என்று எண்ணி, அவரின் பிணத்தை தோண்டி கடத்திப் போய்விட்டது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து, அந்த பிணந்திருடரகள் பிடிப்பட்டனர். அவரின் உடல் ஜெனிவா நகர் ஏரிக்கரையோரம் கைப்பற்றப்பட்டது! 'இறந்தாலும் ஆயிரம் பொன்'[ என்பது இதுதானா? வேறென்ன மறுபடியும் சிமென்ட் பூசி புதைக்கப்பட்டார்!
  •  அவர் இறந்தப் பிறகு உலகம் முழுதும் நிறைய நாடுகள் அவரின் நினைவாக தபால் தலைகள் வெளியிட்டன. நம்ம இந்தியா உட்பட! பார்க்கவேண்டும்மா ? நம்ம ஊர்க்காரர் திரு. சா. விஜயக்குமார் என்ற நண்பரின் வலைப்பூவுக்கு சென்றால் அத்தனை நாடுகளின் சாப்ளின் தபால் தலைகளையும் பார்க்கலாம். Chaplin's hats off to SA. VEJEYKUMMAR ! ( அவர்ப் பெயரை அப்படித்தான் அவர் எழுதி இருக்கிறார்) 
  • 'The Great Dictator' படத்தில் அவர் ஹிட்லரை நக்கலடித்து படம் பண்ணியதால், அந்தப்படம் ஜெர்மெனியில் தடை செய்யப்பட்டது. ஆனாலும் அந்தப்  படத்தை ஹிட்லர் பலமுறைப் பார்த்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றி அவர் என்னக்  கருத்துக்கள் கூறினார் என்று தெரியவில்லை. 
  • சாப்ளின் ஒரு யூதர் இல்லை என்றாலும், அவர் ஹிட்லரின் ஹிட் லிஸ்டில் இருந்தார். அவருக்கு சமமாக லிஸ்டில் இருந்த இன்னொரு விஐபி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் !

  • சார்லி சாப்ளினும் காந்தியடிகளும் லண்டனில் ஒரு முறை சந்தித்துக்கொண்டார்கள். வட்ட மேசை மாநாட்டுக்காக அவர் இங்கிலாந்து வந்திருந்த நேரம். அவருக்கு அளிக்கப்பட நட்சத்திர ஹோட்டல் வசதியை நிராகரித்துவிட்டு, முரில் லெஸ்டர் என்ற கிறிஸ்த்தவ சமாதான விரும்பி (pacifist) நடத்தும் Kingsley Hall Community Centre இல் தங்கி இருந்தபோது, சாப்ளின்னிடமிருந்து காந்தியை சந்திக்க விரும்பி விண்ணப்பித்து ஒரு தந்தி வந்ததாம். அதை வைத்துக்கொண்டு தந்தியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த காந்தியிடம் யாரோ ஒருவர், 'அவர் வெறும் ஒரு கோமாளி, அவரி சந்திப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை' என்று கூறினாராம். அப்போது அங்கு வந்த முரில் ' பாபு , இந்த தந்தியில் உள்ள பெயரை உங்களுக்கு  தெர்யுமா? என்று கேட்டதற்கு காந்தியிடம் இருந்து 'இல்லை'(!) என்று பதில் வந்ததாம். அதற்க்கு முரில் ' அவர்தான் சார்லி சாப்ளின், உலகத்தில் அவரும் ஒரு ஹீரோ.அவரின் கலை உலக ஏழை உழைக்கும் மக்களின் வேரிலிருந்து வந்தது. அவரின் படங்களில் அவர்களை எப்போதும் கவுரவித்திருக்கிறார். உங்களைப்போலவே அவரும் ஏழைகளை  புரிந்து வைத்திருப்பவர். நீங்கள் கண்டிப்பாக அவரி சந்திக்கவேண்டும்' என்று கூறியதற்கு பின்னர் அந்த வரலாற்று சந்திப்பு நிகழ்ந்ததாம்.இது நடந்தது 21 செப்டெம்பர், 1931, லண்டனில் வாழ்ந்த இந்திய மருத்துவர் கட்டியால் என்பவரின் இல்லத்தில் நடந்தது! (படத்தின் வலது மூலையில் நின்ருக்கொண்டிருப்பது  இருப்பது யார் என்றுத் தெரிகிறதா?)
  • அவருக்கு 75 வயதாகும்போது அவரின் கடிசீப் பையனான கிறிஸ்டோபர் பிறந்தார்!
  • தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அமெரிக்காவில் சினிமாக்களை எடுத்து கழித்த சாப்ளின் ஒரு அமெரிக்க பிரஜை இல்லை! அதுவுமில்லாமல் கடைசியில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்!
  • 1940 களில் ஜோன் பெரி என்ற நடிகையோடு தொடர்பு இருந்தது. பிறகு பிரிந்து விட்டனர். ஆனால் அதன் பிறகு சிலகாலம் கழித்து தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சாப்ளின்தான் தந்தை என்று வழக்குத் தொடர்ந்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் அந்தக் குழந்தைக்கு தோப்பனார் இல்லை என்று உறுதி செய்யப்பட்டும் கூட நீதிபதியால் நம்பத்தகாத ஆதாரம் என்று நிராகரிக்கப்பட்டு, யாரோ போட்ட கோலத்திற்கு அவர் வாரம்  £75 தண்டம் அழ வேண்டிஇருந்தது. அந்தக் காலத்தில் அது பெரிய அமவுண்ட்!
  • 131 விண் பாறைகளைக் கண்டுப்பிடித்த, ரஷிய பெண் வானவியலாலரான  Ms.Lyudmila Karachkina (தமிழில் படித்துக்கொள்ளவும்) தான் கண்டுப்பிடித்த ஒரு விண்பாறைக்கு , சாப்ளில் மேல் உள்ள அளவுக்கடந்த மரியாதையால் அதற்க்கு '3623 சாப்ளின்' என்றுப் பெயர் வைத்தார்.
  • கடைசி மனிவி ஒன்னவின் மகளான ஜெரால்டின் சாப்ளின், 1992 இல் சாளினின் வாழ்க்கை படமாக்கப்பட்டபோது, அந்தப்படத்தில் அவரின் தாயாக நடித்தார்!   
  • அவர் 500 க்கும் மேற்ப்பட்ட பாடல்களை இயற்றி இசை அமைத்துள்ளார். அதில் புகழ்ப்பெற்ற 'Smile' பாடலும் அடங்கும். அதை மைக்கேல் ஜாக்சன் பாடி கேளுங்கள்.
  •             அதேப்பாடல் ஜாக்சனின் இறுதிச் சடங்கின்போது, 
                அவரின் சகோதரர் 
                ஜெர்மைன்     ஜாக்சன் 
            மனமுருகப்பாடினார். அதைக்காண இங்கே...
  • முழுத் திரைக்கதை எழுதிக்கொண்டு படமெடுக்கும் பழக்கமெல்லாம் அவரிடம் கிடையாது. ஆனால் 100% திருப்தி ஏற்ப்படும் வரை படம் ரிலீசும் கிடையாது!
  • அவரின் கடைசிப் படமான ' A Countess from Hong Kong (1967) படம் வெளிவந்தப்பின்பே, அவரின் பழையப் படங்களுக்கு இசை சேர்த்தார்!
  • அவரின் ட்ரேட் மார்க் கதாப்பாத்திரம் 'Tramp' ஏறக்குறைய எழுபது துண்டு, மற்றும் முழுப் படங்களில் வலம் வந்தது!
  • அவர் விரும்பி விளையாடிய  விளையாட்டு... டென்னிஸ்!
  • மிகவும்  ஏழ்மை நிலையில், இங்கிலாந்தில், அவரின் தாய், சாப்ளினின்  துணிகளை விற்று விட்டு பணம் கொண்டுவர நிர்பந்திப்பாராம்!
  • மனநோய்க்கு ஆளான அவரின் தாயார் மருத்துவமனையில் அடிக்கடி சேர்க்கப்பட்டார். அதனால் மன வேதனைப்பட்ட சாப்ளின் அவரைப் பார்ப்பதையே தவிர்த்து வந்தாராம்.
  • ஹிட்லரைவிட நான்கு நாட்கள் பெரியவர் சாப்ளின்! 
  • அவர் கடைசியாக பர்ர்த்து ரசித்த படம் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'Rocky- (1976)'
  • அவர் மகளின் கூற்றுப்படி சாப்ளின், அவரின் கடைசிக் காலங்களில் வருங்காலத்தில் தான் மறக்கப்பட்டு விடுவோம் என்று வருந்தினாராம். அதனாலேயே விளம்பரங்களுக்கு தன் உருவத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாராம். 





] http://youtu.be/tMOkNJmnCj0
>சாப்ளினின்  மறக்கப்பட்ட வருடங்கள்..... வீடியோ கீழே....

Wednesday 5 May 2010

சிகப்பு விளக்கு சிறார்கள் (வீடியோ)

<div class="separator" style="clear: both; text-align: center;">

பிராத்தல்: ஆண்கள் தம் செக்ஸ் தேவைகளை,(மனைவியல்லாத) பெண்களிடம், பணம் கொடுத்து பூர்த்தி செய்துக்கொள்ளும் கட்டிடம் அல்லது இடம்!
சோனாகாச்சி! கொல்கொத்தா நகரின் மிகப்பெரிய சிவப்புவிளக்கு பகுதி. மகா நதி திரைப்படத்தில், கமலின் மகள் விபசாரத்தில் இருந்து மீட்கப்படும் காட்சி நினைவுக்கு வருகிறதா? அதே இடம் தான்!

இப்போது நாம் காணப்போகும் காணொளி 'Born into Brothels' என்ற பெயருடையது. நம்மில் நிறையப்பேர் ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும். 200
5 வருடத்தின் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கார்  விருதை தட்டிச்சென்றப் படம். அது மட்டுமல்லாது பல சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.  இதன் இயக்குனர்கள் சானா பிரிஸ்கி & ராஸ் கவுஃப்மேன்.  சோனாகாச்சி பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளைச் சுற்றி வரும் கேமராக் கவிதை! ஆனால் இந்தக் கவிதை நம்மை கண்கலங்கவைக்கும்... தடுமாறவைக்கும்.... நேழ்ச்சியுறவைக்கும் அதுமட்டுமல்லாது, புன்னகைக்கவும் வைக்கும்! என்னதான் நம்ம நாடு வளரும் நாடுகளிலேயே முன்னணி நாடு என்று சொன்னாலும், இதுப்போன்ற சமுதாயத்தின் கரும்பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. காணும்போது நம் மனது கஷ்டப்படுகிறது.


பிரிட்டனில் பிறந்து, நியூ யார்க் நகரில் வாழும் புகைப்படக் கலைஞரான சானா பிரிஸ்கி (Zana Briski) 1997 ஆம் வருடம், கொல்கத்தாவின் பாலியல் தொழிலாளிகளை புகைப்படமெடுக்க வந்தார். வந்தவர் அந்தப் பகுதியிலேயே தங்கி வாழ்ந்து வரும்போது, அங்கு அவரை 'சானா ஆண்ட்டி' என்று அன்போடு அழைத்து, அவரை  சுற்றி வந்த சிறுவர், சிறுமிகளிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதோடு நில்லாமல், அவர்களில் எட்டு பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'Point & shoot - 35 mm' கேமராக்களை வாங்கிக்கொடுத்து, அவர்களுக்கு அடிப்படை புகைப்பட தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதற்காக Kids with Cameras என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அவர்களின் படிப்பு மற்றும் பயிற்சி போன்றவற்றை  கவனித்துக்கொண்டார். அந்த பிள்ளைகளை வைத்து, கொல்கத்தா நகரின் தினசரி வாழ்கையை, மனிதர்களை புகைப்படங்களாக மாற்றினார். ஆஹா! அந்த சொப்புப்பெட்டிக் கேமராக்களில், அந்தக் குழந்தைகள் வடித்துள்ள வண்ணக் கலவைகளை , இன்றுள்ள லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராக்கள் கொடுக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்! இப்படி ,அதன் பின்னணியை, அந்த பிள்ளைகளின் அன்றாட வாழ்கையை , தன் சக இயக்குனரான ராஸ்  கவுஃப்மேனோடு (Ross Kouffman) சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த காணொளியை காவியமாகியுள்ளார்,
இந்த காணொளியை பார்த்தபிறகு, எவ்வளவு  கோபம் வந்தாலும், துரோகிகளையும், வேண்டாத  யாரையும் 'தே... பயல் ' என்று தீந்தமிழிலோ, அல்லது போம்ப டீசண்டாக ஆங்கிலத்திலேயோ, மறந்தும் திட்டக்கூடாது  என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி திட்டுவது அந்த பாவமறியா, அற்புத குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அவமானமாக, அநீதியாக  கருதுகிறேன்.

அந்த படைப்பைத்தான் இப்போது நாம் காணப்போகிறோம். ரெடியா நண்பர்களே. உங்களின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிதானமாக வந்தால் நல்லது.

சானா பிரிஸ்கியின் சோனாகாச்சி புகைப்படங்கள்.
சிறுவன் அவ்ஜீத் ஹல்தர் இன்று  (2008)..... [ காணொளியை பார்த்த பிறகு வந்தால்தான் புரியும்]



DivX  Player இருந்தால் இன்னும் சிறந்த  குவாலிட்டியில் காணலாம். முயன்றுப் பாருங்களேன்.
DivX Player டவுன்லோட் செய்ய இங்கே. for Windows , for Mac

Install This Version & DO NOT UPDATE