Monday, 16 November 2009

கங்கை நதியின் இன்றைய கதி!




இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன் சிங், 2008 நவம்பர் 4 ஆம் தேதி, கங்கை நதியை இந்தியாவின் தேசிய நதியாக அறிவித்தார்! அப்படி அறிவிக்கவேண்டி என்ன நிர்பந்தம்? கங்கையை விட்டால் வேறு  எந்த ஆறுக்கு அந்தப் பெருமை வரும்?  இந்த நதி பலகோடி மக்களின் நம்பிக்கையில், வாழ்க்கையில் பின்னிப்பிணைந்தது அல்லவா? இந்தியாவின் பெரும்பாலான மக்களால் மிகவும் புனிதமாகவும், கங்கைத்தாய் என்றும் கங்காதேவி என்றும் கடவுளாகவே கருதப்பட்டு வணங்கப்படும் இந்த மாபெரும் நதிக்கு தற்போது நேர்ந்திருக்கும் வருந்தக்கூடிய நிலையே அவரின் அறிவிப்புக்கு முதல் காரணம். அப்படி அறிவித்தது மட்டுமல்லாமல், மாசுப்பட்டு இருக்கும் அந்த புண்ணிய நதியை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.


இமய மலையில் இருந்து நிஜமாகவே மிகவும் புனிதமாக வெளிப்பட்டு, மனிதனின் பேராசையாலும், மூடநம்பிக்கைகளாலும், அரசாங்கத்தின் மெத்தத்தனத்தினாலும் மாசுப்பட்டு  கலங்கி நிற்கும் அந்த கங்கையின் கரைகளிலே ஒரு பயணம் போவோமா? நேஷனல் ஜியாகரபி நிறுவனத்தின் ' Rivers and Life ' என்ற தலைப்பில் வெளிவந்த இந்தியாவின் கங்கை, எகிப்தின் நைல் , சீனாவின் யாங்சி ஆறுகளைப்பற்றிய ஆவணப் படங்களில், (மற்ற இரு நதிகளைப் பற்றிய வீடியோ, சுற்றுப்புற  மாசு பற்றியது இல்லை!) நமது நாட்டின் கங்கையைப் பற்றிய வீடியோவை உங்களுடன்  பகிர்ந்துக் கொள்ளுகிறேன்.  பார்த்து விட்டு நீங்களும் வருந்துங்கள்.




இதில் ஒரு சின்ன ஆறுதல் என்னவென்றால், உலகின் 'மிகவும் கப்படித்த' ஆறு என்ற பெருமையை தற்போது  தட்டிச் செல்வது, இந்தோனேசியாவின் சிட்டாரம்  என்ற ஆறு!
(படம்) . ஆனால் அங்கு பிணங்கள் மிதப்பதாகத் தெரியவில்லை. இனி வருங்காலத்தில் விட்ட அந்த முதல் இடத்தை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கையோடு  காத்திருப்போம்!

No comments:

Post a Comment

ஊக்க உரைகள்