Monday, 5 October 2009

அற்புத நடிகர் அல் பசினோ (வீடியோ)






  • தந்தை ஸல்  பசினோ. ஒரு இத்தாலிய அமெரிக்க இன்சூரன்ஸ் எஜன்ட். தாய் ரோஸ் பசினோ.




  • 17 வயதிலேயே பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறிவிட்டார். பின்பு நடிப்புப் பள்ளியில் சேர்ந்துப் படிக்க ஆரம்பித்தார்.




  • அவருடைய தாத்தாப் பாட்டி, 'காட்பாதர் புகழ்' சிசிலி நாட்டின் கோர்லேஒனே என்ற இடத்தில இருந்து வந்தவர்கள். காட்பாதர் ரசிகர்களுக்கு இந்தப் பெயர் மிகவும் பரிச்சியம்.




  •  இதுவரை திருமணமே செய்யாத ஹாலிவுட் நடிகர்களில் இவரும் ஒருவர்.




  • இவர் முதல் முதலாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது 1973 இல் காட்பாதர் படத்துக்காக.




  • ஆனால் அதன் பிறகு அவர் இந்த விருதை வாங்கியது இருபத்தொரு வருடங்கள் கழித்து.... 1992 இல் Sent of a women என்றப் படத்துக்காக .




  • இதற்க்கு நடுவில் இவர் இந்த விருதிற்காக ஐந்து முறைப் பரிந்துரைக்கப்பட்டார்.




  •  காட்பாதர் படத்தில் மார்லன் பிராண்டோவின் மகனாக வரும் மைகேல் கோர்லேஒனே பாத்திரத்தில் நடிக்க, அதன் இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கப்போலா இவரைத் தேர்ந்தேடுத்தப்போது, படத் தயாரிப்பாளர்கள் இவரை பலமுறை வேண்டாம் என்று நிராகரித்தது விட்டனர். ஆனால் இயக்குனர் பிடிவாதமாக இருந்ததால் அந்த மாப்பெரும் வாய்ப்பைப் பெற்றார்.




  • ஆனால் காட்பாதர் II இல் நடிக்க, நிறையப் ஊதியம் கேட்டு கப்போலாவை வெறுப்படைய வைத்தார். பிறகு சாமதானமடைந்து தான் ஊதியத்தை குறைத்துக் கொண்டார்.




  • பின்னர் காப்போலோவின் Apocalypse Now (1979) பட வாய்ப்பை உதறிவிட்டார். இப்படி அவர் வேண்டாம் என்று விலகிய வெற்றிப்படங்கள் பல.




  •  அறுபது வயதில் இரட்டைக் குழந்தைகளுக்கு தகப்பனானார்.




  • தன்னுடைய குரலைப் பாதுகாக்க, தினமும் குறைந்தது நாற்பது முதல் அறுபது சிகரட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டார். இப்போதெல்லாம் என்றாவது ஒரு மூலிகை சிகரட் மட்டும்.




  • அவரின் உயரம் 5' 7''.




  • அவரின் முக்கியமானப் படங்கள்....


  •           Panic in Needle Park.
              Godfather I,II,&III,
              Serpico,
              Dog Day Afternoon.
              And Justice for all,
              Scarface,
              Sea of love,
              Dick Tracy,
              Glengarry Glen Ross,
              Scent of a women,
              Carlito's way,
              Heat,
              Donnie Brasco,
              Devil's advocate.....

    மற்றும் பல. இதில் எனக்கு மிகவும் பிடித்தவைகளில் Dog Day afternoon ஒன்று. மிஸ் பண்ணவே கூடாத படங்களில் ஒன்று. பார்க்கவிரும்பினால்  கேளுங்கள் லிங்க் தருகிறேன்.

    இப்போது அவரைப் பற்றிய ஒரு காணொளியைப்  பார்க்கலாம்.

    No comments:

    Post a Comment

    ஊக்க உரைகள்