Friday 14 May 2010

பாடல்கள் ஒரு கால இயந்திரம்...A Time Machine ! (1)


சில காலமாகவே உலகம் முழுவதும் Time Machine எனப்படும் கால இயந்திரத்தைப் பற்றி பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிகழ்க்காலத்திளிருந்து எதிர் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் நம்மி அழைத்துச் செல்லும் இயந்திரம் அது. ஆனால் அது உடனேடியாக சாத்தியப்படாது என்றும் கூறுகின்றனர். ஆனால் நம்மால் அப்படி பிரயாணிக்க முடியும்! ஆமாங்க ! என்னோடு வாங்க, நான் அழைத்துச் செல்லுகிறேன். நான் வழக்கமாக போய் வந்துக்கொண்டுத்த்தான் இருக்கிறேன்! வால்வு ரேடியோக்களும், ட்ரான்ஸ்சிஸ்டர்களும், ரெக்கார்ட் ப்ளேயர்களும், டேப் ரேக்காடர்களும் இருந்த காலத்திற்கு செல்லலாமா ?  அந்த நாட்களில், ரெக்கார்டிங் கடைகளில் தவமிருந்து ஆடியோ கேசட்டுகளை  வாங்கி வந்து நம்ம கேசட் பிளேயர்களில் பெருமையோடு போட்டு, கேட்டு  மகிழ்ந்த காலங்களுக்கு போகலாம் வாங்க. ( என்ன ஃப்ரீயா ஜெகன்! வாங்க போகலாம்!)

கண்களை மூடிக்கொண்டு நம்ம இளவயது நினைவுகளை அசைப்போடுங்கள்.... நிறைய உள்ளது ... சிலப் பாடல்கள் உங்களின் ரசிப்புக்கு....
எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் சுவை அதிகம் என்பதால், ஒரு சஸ்பேன்சுக்காக வெறும் பாடல்கள் மாத்திரம்.....
































.

3 comments:

  1. இசையை நம் வாழ்வோடு பொருத்திக் கொள்ள வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம். காரண-காரிய ஏதுமற்று தன்னிச்சையாக நம்முள் இணைந்து கொள்ளும் சாத்தியம் கொண்டதும் இசைதான்.

    நம் தலைமுறையினருக்கு சினிமா பாடுவதே இசையாக அறிமுகமாகி விட்டது ஒரு கலாச்சார மாற்றம் என்றளவில் ஏற்புடையதாக இருக்கிறது. நம் ஒவ்வொரு காலத்திற்கும், பருவத்திற்கும் ஒரு பாடலை மைல்கல் போல நிறுத்தி வைத்திருக்கிறோம். பால்ய காலத்தில் புத்தகத்துள் ஒளித்து வைக்கும் மயிலிறகு, பிற்காலத்தில் நம் நினைவுகளின் புக்-மார்க்காக மாறிவிடக் காண்கிறேன்.

    சினிமாப் பாடல்கள் அப்படித்தான். நம் தனிப்பட்ட ஒரு அனுபவத்தை பருவத்தை அல்லது நினைவை மீட்டெடுக்கும் சிறப்பு பெற்றதாக சில பாடல்கள் அமைந்து விடுகின்றன.

    கூர்ந்து கவனித்தீர்களேயானால் தெரியும். சில பாடல்களில் அப்படியொன்றும் பெரிய விசேஷம் இருக்காது ஆனால் அப்பாடல் நம்மைக் கவர்ந்திருக்கும். காரணம் அந்தப்பாடலோடு ஒட்டிய, நமக்கு மட்டும் தெரிந்த சம்பவங்களின் பின்புலன்தான் காரணம். வாழ்வின் முதல் காதலி பாட்டிசைத்த பாடல் எல்லாக் காலங்களிலும் நினைவில் இருக்கும். இரவு.. கூட்டமற்ற பேருந்துப் பயணம்.. ஜன்னலில் சின்ன மழை... நீருக்குள் நீலம் போல மனம் மழையில் கரைந்து கொண்டிருக்கும் போது.. பேருந்து இசை நாடா இசைக்கும் ஒரு பாட்டு.... சட்டென மனதில் பதிந்து கொள்ளும். நம் வாழ்வுக்கு மிக நெருக்கமாக அமைந்த படத்தின் மையப்பாடல் அல்லது நமக்கே நமக்காக எழுதப்பட்ட பாடல்வரிகளைக் கொண்ட பாடல் என பதிந்து கொள்ளப் பாடல்கள் நிறைய இருக்கின்றன. கேட்க நமக்குத்தான் காதுகளும் பொழுதுகளும் இல்லையோ?

    ReplyDelete
  2. உடல் இறுகி மனம் இளகித் திரியும் கல்லூரிக் காலத்தில்தான் எத்தனைப் பாடல்கள் நம்மைக் கைப்பற்றிக் கொள்கின்றன. சிகரெட் புகைக்கும் போது, உண்ணும்போது, வகுப்பறையில், சாலையில் திரியும்போது, கோயில் வாசலில், நடுநிசிகளில் என எப்போதும் பாடல்களால் சூழப்பட்டவர்களாய் இருந்திருப்போம். இளமை எனும் பூங்காற்று அல்லவா? எத்தனைப் பாடல்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும் ஏதோ ஒரு பாட்டை மட்டுமே நாம் அந்த மொத்தப் பருவத்தின் பாடலாக தேர்ந்தெடுக்கிறோம். அல்லது அந்தப் பாடல் நம்மைத் தேர்ந்தெடுத்து விடுகிறதா?

    பாடல்கள் அவைகளாக நம் வாழ்வில் புகுகின்றன. ஏதோ ரொம்பப் பழக்கப்பட்ட நண்பன் போல. அப்படி புகும் சில பாடல்களின் ஆதிமூலம், ரிஷிமூலம் நாம் பார்ப்பதில்லை. அந்த பாடல் நமக்கு மீட்டுக்கொடுக்கும் சம்பவங்களே முக்கியமாகப் படுகின்றன. அந்த மனதுக்கு நெருக்கமான சம்பவத்தை அசைபோட்டுக் கொள்ளும் முயற்சியாகவே மீண்டும் மீண்டும் அந்தப் பாடலை இசைத்துக் கொள்கிறோம்.

    காலத்தின் மைல்கற்களாகப் பாடல்களை காட்டியிருப்பது அருமை. எனக்கான பாடல் தொகுதி தன்னிச்சையாக எனக்குள் ஒலிக்கத் துவங்கி விட்டது. அதுவொட்டிய பழைய நினைவுகளும் சுழல்கின்றன.
    இந்த 'காலஇயந்திரம்' எப்போதும் பின்னோக்கியே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் கியர் மட்டுமுள்ள ஒரு வாகனத்தில் பயணிப்பதாக கற்பனைத்துக் கொள்கிறேன்.

    ஆம்... பாடல்கள் சுமந்த எல்லா காலமும் வசந்த காலம்தான் நண்பரே!

    ReplyDelete
  3. ஆஹா ...! உண்மையில் என் கண்களில் நீர்த் தழும்ப ஆமோதிக்கிறேன் நண்பா! வீரியம் மிகுந்தவை உன் வார்த்தைகள். 'எழுத்துக்கள்' என்று சொல்லவில்லை கவனித்தாயா?.... நம் இருவரும் தனியே உரையாடியதுப்போல் இருந்ததால்.... 'வார்த்தைகள்' என்று சொன்னேன். இன்னும் என்னை சிலாகிக்கவைத்துவிட்டாய் நண்பா!

    ReplyDelete

ஊக்க உரைகள்