'அர்நால்ட்' என்றால் 'கழுகின் சக்தி' என்றுப் பொருள்.' ஸ்வார்செனேகர்' என்றால் ஆஸ்திரிய மொழியில் 'கருப்பு ஏர் உழவன்' என்று பொருள் படுமாம்.
ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், ஆஸ்திரியா நாட்டில் 1947 ஆம் வருடம் பிறந்தவர்.
தாய் மொழி ஜேர்மன் மொழி. அமெரிக்கா வந்தப்போது ஆங்கிலம் அவருக்கு ஒரேக் களேபரம்.
அமெரிக்காவிற்கு வந்தது 1968 ஆம் வருடம், அதாவது 21 ஆம் வயதில். அவரின் கண்டிப்பான தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.
சிறுவயதில் அவருக்கிருந்த மூன்று ஆசைகள்: அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும், நடிகராக ஆகவேண்டும்,கென்னடி குடும்பப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்று லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொண்டார்.
இவரின் மனைவி கென்னடி குடும்பத்தின் வழிவந்த மரியா ஷிரிவர். இவர்களுக்கு நான்குப் பிள்ளைகள்.
1968 இல் அமெரிக்கா வந்தாலும், 1983 இல் தான் அமெரிக்க குடிஉரிமைப் பெற்றார்.
1997 இல் அவருக்கு பிறக்கும்போதே இருந்த இதய வால்வு கோளாறுக்கு, இதய அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டார். அதுமட்டுமல்லாது தன் தாடை எலும்பை பின்னோக்கி நகர்த்த, அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டார்.
13 முக்கிய ஆணழகு விருதுகளைப் பெற்றுள்ளார். 1 - மேற்கு ஐரோப்பா ஆணழகன், 7 - ஒலிம்பியஸ் ஆணழகன், 5 - உலக ஆணழகன்.
சிறு வயதில் அவர் வீட்டில் கழிவறை, தொலைப்பேசி மற்றும் குளிர்ப்பதனப் பெட்டி கிடையாது. அவர்கள் வீட்டில் குளிர்ப் பதனப்பெட்டி வாங்கிய நாளை தன் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத நாளாகக் கருதுகிறார்.
அவரின் மூன்றுப் படங்கள் 'Day' என்று முடியும். End of days, 6th day, Terminator 2: Judgementday.
2004 இல் ஹவாய் தீவுகளில் விடுமுறைக்காக சென்றிருந்தப்போது, கடலில் மூழ்கித் தத்தளிதுக்கொண்டிருந்த ஒரு நபரைக் காப்பற்றி நிஜவாழ்விலும் ஹீரோவானார்.
ப்ருஸ் வில்லிஸ், சில்வெஸ்டார் ஸ்டாலோன், டெம்மி மூர், ஆகியோரோடு சேர்ந்து Planet Hollywood என்ற சங்கிலித் தொடர் ஹோட்டல்களைத் தொடங்கினார். பின்னேர் நல்ல லாபம் இல்லை என்றுக் கூறி வெளியேறிவிட்டார்.
2003 மற்றும் 2006 வருடங்களில் தொடர்ந்து கலிபோர்னியாவின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் கலிபோர்னியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நடிகர். முதலாமவர் ரொனால்ட் ரீகன்.
அவரின் முதல் வெற்றிப்படமான 'Cannon the Barbarian' படத்தில்(1982) அவர் உபயோகித்த வாள், இன்றும் அவரின் கவர்னர் அலுவலகத்தை அலங்கரிக்கிறது.
அங்கங்கே படித்தவைகளை தொகுத்து சில விவரங்களைப் பார்த்துவிட்டோம். இனி நாம் பார்க்கவிருப்பது அவரின் புகழ்பெற்ற 'Pumping Iron' காணொளியை.
வந்தவர்கள் நன்றாக வோட்டுப் போடுகிறார்கள்.நன்றி. பதிவைப் பற்றிய நிறைக் குறைகளைப்பற்றி ஏதாவது எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம். [72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]
Very good post!
ReplyDeleteKeep up the good work!
super
ReplyDeleteputhiyavann.blogspot.com