Monday, 21 September 2009

புனித மெக்கா: ஒரு பார்வை.(வீடியோ)


மெக்கா! புனித நகரம். முகமது நபி அவர்களின் பிறப்பிடம். இறைவனால் மிகவும் நேசிக்கப்படும் இடம். இறை தூதர் இப்ராகிம் அல்-கலீல் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். இஸ்லாமியர்களின் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் தலம். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெக்காவின் 'காபா' இருக்கும் திசையை நோக்கி, தினமும் ஐந்து முறை பிராதிக்கவேண்டும். அந்த வணக்கத்துக்குரிய காபா - 'இறைவனின் இல்லம்', ஆபிரகாமின் புதல்வர், இஸ்மாயில் அவர்களால் கட்டப்பட்டு, தங்க சரிகைகளால் வேயப்பட்ட கறுப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த மசூதிக்குள் மாத்திரம் அல்ல மெக்கா நகருக்குள் இஸ்லாமியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் காபாவை ஏழுமுறை சுற்றி வருவர். அங்குள்ள மூலைகல்லான கருப்புக்கல்லை தொடவோ முத்தமிடவோ செய்தால், அது அவர்களில் பெரும் பேறாக கருதப்படுகிறது. மெக்காவிற்கு செல்லும் புனித யாத்திரை இஸ்லாமியரின் ஐந்து நம்பிக்கைத் தூண்களில் ஒன்றாகும். அங்குள்ள ஜம் ஜம் என்ற கிணற்றில் உள்ள நீர் ஆசிர்வதிக்கப்பட்ட புனித நீராகக் கருதப்படுகிறது. அதற்க்கு நோய்களை குணமாக்கும் சக்தியும் இருப்பதாக நம்பப்படுகிறது.

மெக்கா நகர் 2008 ஆம் வருடக் கணக்கின் படி 1.7 மில்லியன் மக்கள்தொகைக் கொண்டதாக இருந்தது. இது ஜெட்டா நகரில் இருந்து 73 கி மி, தொலைவில் அமைந்துள்ளது. இது சவூதி அரேபிய நாத்தி அரசாங்கத்தின் கீழ், மெக்கா நகராட்சியின் மேயரால் (அமின்) நிர்வாகிக்கப்படுகிறது.

இந்த நகரைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள நேஷனல் ஜியாகரபி நிறுவனம் படைத்துள்ள 'Inside Mecca' என்ற அருமையான ஆவணப்படம் உறுதுணையாக இருக்கும். பார்த்துப் பரவசமடையுங்கள். நன்றி. அனைவருக்கும் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்!



3 comments:

  1. Really a rare documentary to have. It's best to see it now! I applaud your efforts & it's my pleasure. Happy Ramzan!

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி ஜெகன்.
    நீங்கள் சொல்லுவதுப் போல் மிகவும் அரிதான வீடியோதான் இது. அங்கு செல்பவர்களே முழுதாக பார்க்க முடியாத காட்சிகள். மற்ற மதத்தவர் நகருக்குலேயே போகமுடியாது! இந்த வீடியோவைப் பார்த்தவர்கள் நூற்றுகணக்கில். ஆனால் நீங்கள் ஒருவர்த்தான் கருத்துக் கூறிஉள்ளீர்கள். நன்றி. நமக்கு நாமே வாழ்த்க்களைப் பரிமாறிக் கொள்வோம். உங்களுக்கும் என் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். பிரியாணி கிடைத்ததா? இங்கு இங்கிலாந்தில் குடும்பத்தை விட்டு வந்து தனியே வந்து தங்கி இருக்கும் ஒரு பாகிஸ்தான் சகோதரனுக்கு என்கையால் பிரியாணி செய்துக் கொண்டுப்போய்க் கொடுத்தேன். கண்களில் நீர் மல்க தழுவிக்கொண்டான். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் வேண்டும் என்று இப்போதே சொல்லிவிட்டான். கிறிஸ்துமஸ் என்ன?... தீபாவளிக்கும் தோசை & கறிக்குழம்பு உண்டு என்று சொல்லிவிட்டு வந்தேன்.

    ReplyDelete
  3. உருக்கமான பின்னூ உங்களது! உங்கள் பாக்-சகோதரனுக்கு என் ரமலான் வாழ்த்துகள்! எனக்கு இந்தவாட்டி பிரியாணி கி​டைக்கவில்​லை! ஆனால் பிரயாணி ​செய்யத் ​தெரிந்த நப​ரை நண்பராக ​வைத்திருப்பதில் ​​பெரு மகிழ்ச்சி! நண்பரின் அட்வான்ஸ்ட் புக்கிங்​கைப் பார்த்தால் உங்கள் ​கைமணம் புரிகிறது! ஜமாயுங்கள்!!
    NatGeoவின் இது ​போன்ற சில அசத்தல்க​ளை மறக்கவே முடியாது. இ​தை இங்கு இச்சமயத்தில் பகிர்ந்ததிற்கு மிக்க நன்றி!!!

    ReplyDelete

ஊக்க உரைகள்