யாராவது ஒரு சினிமா இயக்குனரை நிறுத்தி, ' உங்களை கவர்ந்தசிறந்த படங்களைக் கூறுங்கள்' என்று கேட்டால், அதில் இந்த 'Bicycle Thieves' (1948)என்ற திரைப்படமும் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ கண்டிப்பாக இப்படத்தைப் பற்றி தெரிந்தாகவது வைத்திருப்பார்கள். எது எப்படி இருப்பினும் நாம் இந்தப் படத்தை முழுவதுமாகப் பார்ப்போமா? அதற்கு முன் சில விஷயங்கள்.
1944 ஆம் வருடம், இத்தாலி நாட்டில், 'Neorealism' என்ற திரைப்பட தொடங்கியது. அதில் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, இத்தாலி நாட்டில் வறுமை,வேலை இல்லாத் திண்டாட்டாம், போன்ற உண்மைகளை தத்ரூபமாக, தொழில் முறை நடிகர்கள் இல்லாமல், நேரடியாக கதை நடக்கும் இடத்திற்கே சென்று படமாக்கும் முறை பிரபலமாகியது. ( நம்ம பாரதிராஜா, நம்ம ஊருக்கு முன்னோடியோ? வேறு யாராவது உள்ளனரோ? தெரிந்தவர்கள் சொல்லவும்.)
இந்தப்படத்தின் கதை ரோம் நகரில், இரண்டாம் உலகப்போர் முடிந்த காலக்கட்டத்தில், ஒரு இளம் தகப்பனையும் அவன் மனைவி மகனையும், சுற்றி பின்னப்பட்ட மனதை நெகிழ வைக்கும் ஒரு அழகான கவிதை. இதுப் போன்ற ஒரு நாவலை செயற்கைத் தனம் இல்லாமல் படமாக்க முடியுமா என்று நம்மை எல்லாம் வியக்க வைத்து விடும்.

படத்தின் இயக்குனர் விட்டோரயோ டி சில்கா. படத்தின் நாயகனான அண்டோநீயோ ரிச்சி ஆக நடித்த லம்பர்டோ மாக்யோரணி, ஒரு தொழில் முறை நடிகர் அல்ல. மாறும் அதில் படத்தின் அனைவரும் சாதரண மக்களே. களவு போன ஒரு மிதிவண்டியை தேடிச் செல்லும் நாயகனும் அவனின் மகனும் எதிர் நோக்கும் பல்வேறு நிகழ்வுகளை,
மனித அவலங்களை பதிவு செய்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிணைப்பை மிக நுணுக்கமாக காண்பிக்கிறது. மகனாக நடித்த என்சோ ஸ்டேயோலா படம் முடிந்தாலும் நம் மனதில் நிழலாடுவான் எனபது நிச்சயம்.
மனித அவலங்களை பதிவு செய்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிணைப்பை மிக நுணுக்கமாக காண்பிக்கிறது. மகனாக நடித்த என்சோ ஸ்டேயோலா படம் முடிந்தாலும் நம் மனதில் நிழலாடுவான் எனபது நிச்சயம்.
மொத்தத்தில் இந்த நூற்றாண்டில் படைக்கப்பட்ட ஈடு இணையற்ற ஒரு திரைக் காவியம் இது. சினிமா உள்ளவரை இப்படம் பேசப்படும்.
நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
நீங்களே பார்த்து சொல்லுங்கள்.
என்ன நண்பர்களே. பிடித்திருந்ததா? கருத்தை கூறுங்கள்.நன்றி.
ஜெமினி பிக்சர்ஸ் அந்த நாளே படத்தை ரிலீஸ் செய்தார்கள் என்று நினைக்கிறேன். எங்களூர்
ReplyDeleteபாலஸ்-டி-வேல்ஸ் தியேட்டரில் நான் பார்த்திருக்கிறேன்.
நல்ல படம். நன்றி
சகாதேவன்
நேற்று தான் இந்த அற்புதத்தைப் பார்த்தேன்.
ReplyDeleteஎன்ன அருமை, நம்பவே முடியாத எளிமை.
ஆனால் அப்படியே நம்மைக் கவர்ந்துவிடும்
உண்மையான போராட்டம்.
அந்தப் பையனின் கண்கள் அவை காவியம்.