Monday 26 October 2009

Grizzly Man



2005 இல் வெளிவந்த இந்த ஆவணப்படம் Grizzly Man, ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக்குவித்து, பார்த்தவர்களை எல்லாம் தடுமாற வைத்தது. 'திமோத்தி ட்ரெட்வெல்' (Thimothy Treadwell - 1957-2003) என்ற மனிதனைப் பற்றியது. 'க்ரிஸ்லி கரடிகள் (Grizzly Bears) அல்லது கொடுங்கரடிகள்' என்று அழைக்கப்படும், அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள அலஸ்கா மற்றும் கனடா மலைப் பிரதேசங்களில் வாழும் கரடிகளை பற்றியே நினைத்து தன் வாழ்நாளை அர்பணித்தவர். அத்தோடு நின்றிருந்தால் பரவாஇல்லை.... ஆனால், பரிதாபம்! தான் நேசித்த கரடிகளுக்கு தான் மட்டுமல்லாமல், தன் பெண் நண்பரின் உயிரையும், உடலையும் பலியாகக் கொடுக்க வேண்டி இருந்தது!



இந்தப் படத்தை இயக்கியவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த புகழ்ப்பெற்ற இயக்குனரான 'வெர்னர் ஹெர்ஸாக்' (Werner Herzog) என்பவர். ஆனால் இவர் பயன்படுத்தியது எல்லாம், திமோத்தியால் எடுக்கப்பட்ட வீடியோக்களே! இந்த கரடிகள் அதன் சாம்பல் நிறத்தால் அந்தப் பெயரைப் பெற்றன. The Edge என்றப் படத்தை பார்த்தவர்களுக்கு இதன் பயங்கரம் புரியும். சுமார் 7 முதல் 8 அடி உயரம் வரை வளரும் இவை, சுமார் 400 கிலோ வரை எடை இருக்கும். திமோத்தி சுமார் பதிமூன்று வருட கோடை நாட்களில். அலஸ்கா காடுகளில் இக்கரடிகளின் பின்னே அலைந்துத் திரிந்து எடுத்தவை. காலப்போக்கில், அந்த பயங்கரமான கரடிகள் இவரை நம்பி, அன்பாக பழக ஆரம்பித்துவிட்டன என்று நம்ப ஆரம்பித்துவிட்டார்! அங்கு இருந்த வனக்காவலர்களின் எச்சரிக்கையும் மீறி, அவைகளின் மிக அருகேச் சென்று, அவைகளைத் தொடவும் முற்பட்டார். அவைகளை படமாகவும் எடுத்து, இந்த கரடிகளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்தினார்.


 ஆனால் 2003 ஆம் வருடம், தன் 13 வது வருட விஜயத்தின் போது, அவரும் அவரின் பெண் நண்பரான ஆமி என்பவரும், ஒரு படப்பிடிப்பின் போது, ஒரு கரடியால் கொடுரமாகத் தாக்கப்பட்டு, பாதி தின்னப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இதுதான் மனிதவாழ்வு! இந்த கொடுர சம்பவத்தின் வீடியோ கிடைக்கப்பெறவில்லை. ஆனால் ஆடியோ கிடைத்திருக்கிறது! ஆனால் அதைக்கேட்ட இயக்குனர், மனம்கலங்கி, அதை இந்தப் படத்தில் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் அதை அழித்துவிடவும் சிபாரிசு செய்தாராம்! இந்தப் படத்தின் மூலமாக மரணமும்,அழிவும் தவிர்கமுடியாதவை .... இயற்கையில் நமக்கென்று சில வரைமுறைகள் உள்ளன என்ற கருத்து தெரிவிக்கப்படுகிறது. இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு, அதன் தாக்கத்திலிருந்து என்னால் விடுப்பட சிலநாட்கள் ஆயிற்று! பரிதாப உணர்ச்சியோடுக் கூடிய சோகம் என்னைத் தழுவிக்கொண்டது. அறிவுரையை கேட்காமல் தன் வழியே சென்ற ஒரு புத்திசாலி நண்பனை இழந்ததுப்போல் உணர்ந்தேன்! என்னால் ஒரு கனத்த பெருமூச்சுத்தான் விடமுடிந்தது. உங்களுக்கு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.

  RIP, ... Grizzly Man.

[ 72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]




No comments:

Post a Comment

ஊக்க உரைகள்