Friday 17 July 2009

பண்டைய உலகின் ஏழு அதிசயங்கள் (வீடியோ)


உலகின் அதிசயங்கள் என்ன என்று எல்லோரயும் கேட்டால், நிறையப் பேருக்கு எல்லாவற்றையும் சரியாகச் சொல்லத் தெரியாது. அதிலும் இதில் உள்ள இருப் பிரிவுகளைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

ஒன்று பண்டைய அதிசயங்கள். இன்னொன்று தற்கால அதிசயங்கள். இதில் தான் நம்ம தாஜ் மஹால் வருகிறது. பண்டைய அதிசயங்களில் ஒன்றே ஒன்றுத்தான் இப்போதும் உள்ளது. அது எகிப்த்தில், கிசா பகுதியில் உள்ள பிரமீடு. மற்ற ஆறு அதிசயங்களும் காலப்போக்கில் அழிந்து போயின. இந்த அதிசயங்களை வரிசைப் படுத்தித் தொகுத்து கி.மு இரண்டாம் நூற்றாண்டில். அதைப் பற்றி எழுதி வைத்து ஐந்தாம் நூற்றாண்டில் அழிந்துப் போன அலெக்ஸ்சாண்ட்ரியா பட்டணத்தின் நூலகத்தின் தலைவர். இது மீண்டும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் பகுக்கப்பட்டது

சரி. வீடியோ இருக்க சும்மா பேசி பொழுதைக் கழிக்க வேண்டாம். போய்ப் பாருங்கள். மாணவர்களுக்கு பரிந்துரை செய்யுங்கள். தமிளிஷிலும், தமிழ் 10 திலும் வோட்டுப் போடுங்கள். எல்லோருக்கும் பொய் சேரட்டும். அப்படியே மறக்கமால் கருத்துக் கூறுங்கள்.
இது முன் குறிப்பு.....

இது மெயின் குறிப்பு.....










Saturday 11 July 2009

Bicycle Thieves - உலகின் தலைச் சிறந்தப் படங்கள்.(வீடியோ)



யாராவது ஒரு சினிமா இயக்குனரை நிறுத்தி, ' உங்களை கவர்ந்தசிறந்த படங்களைக் கூறுங்கள்' என்று கேட்டால், அதில் இந்த 'Bicycle Thieves' (1948)என்ற திரைப்படமும் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் பார்த்தார்களோ இல்லையோ கண்டிப்பாக இப்படத்தைப் பற்றி தெரிந்தாகவது வைத்திருப்பார்கள். எது எப்படி இருப்பினும் நாம் இந்தப் படத்தை முழுவதுமாகப் பார்ப்போமா? அதற்கு முன் சில விஷயங்கள்.
1944 ஆம் வருடம், இத்தாலி நாட்டில், 'Neorealism' என்ற திரைப்பட தொடங்கியது. அதில் இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, இத்தாலி நாட்டில் வறுமை,வேலை இல்லாத் திண்டாட்டாம், போன்ற உண்மைகளை தத்ரூபமாக, தொழில் முறை நடிகர்கள் இல்லாமல், நேரடியாக கதை நடக்கும் இடத்திற்கே சென்று படமாக்கும் முறை பிரபலமாகியது. ( நம்ம பாரதிராஜா, நம்ம ஊருக்கு முன்னோடியோ? வேறு யாராவது உள்ளனரோ? தெரிந்தவர்கள் சொல்லவும்.)

இந்தப்படத்தின் கதை ரோம் நகரில், இரண்டாம் உலகப்போர் முடிந்த காலக்கட்டத்தில், ஒரு இளம் தகப்பனையும் அவன் மனைவி மகனையும், சுற்றி பின்னப்பட்ட மனதை நெகிழ வைக்கும் ஒரு அழகான கவிதை. இதுப் போன்ற ஒரு நாவலை செயற்கைத் தனம் இல்லாமல் படமாக்க முடியுமா என்று நம்மை எல்லாம் வியக்க வைத்து விடும்.

படத்தின் இயக்குனர் விட்டோரயோ டி சில்கா. படத்தின் நாயகனான அண்டோநீயோ ரிச்சி ஆக நடித்த லம்பர்டோ மாக்யோரணி, ஒரு தொழில் முறை நடிகர் அல்ல. மாறும் அதில் படத்தின் அனைவரும் சாதரண மக்களே. களவு போன ஒரு மிதிவண்டியை தேடிச் செல்லும் நாயகனும் அவனின் மகனும் எதிர் நோக்கும் பல்வேறு நிகழ்வுகளை,
மனித அவலங்களை பதிவு செய்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிணைப்பை மிக நுணுக்கமாக காண்பிக்கிறது. மகனாக நடித்த என்சோ ஸ்டேயோலா படம் முடிந்தாலும் நம் மனதில் நிழலாடுவான் எனபது நிச்சயம்.

மொத்தத்தில் இந்த நூற்றாண்டில் படைக்கப்பட்ட ஈடு இணையற்ற ஒரு திரைக் காவியம் இது. சினிமா உள்ளவரை இப்படம் பேசப்படும்.
நீங்களே பார்த்து சொல்லுங்கள்.











































































































என்ன நண்பர்களே. பிடித்திருந்ததா? கருத்தை கூறுங்கள்.நன்றி.

Friday 10 July 2009

மைகேல் ஜாக்சனின் சூப்பர் ஹிட் பாடல்கள்(வீடியோ)



சொல்வதற்கு ஒன்றுமில்லை. எனக்கு பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து ரசியுங்கள்.



















இதையெல்லாம் பார்த்து விட்டு you tube இல் ஒன்று கண்டெடுத்தேன். இந்தியன் த்ரில்லர் என்று கூறி, நம்ம சிரஞ்சீவி படப்பாடலை கிண்டலடித்து இருக்கிறான் யாரோ தெலுங்கு தெரியாத வெளிநாட்டவர்,(எனக்கும் தெரியாது எனபது ஒரு பக்கம் இருக்கட்டும்). அந்த பாடலுக்கு ஆங்கிலத்தில் அவனுக்கு புரிந்தவரையில் சப் டைட்டில் வேறு போட்டு கலாய்துள்ளான். நீங்களும் பாருங்களேன்.




Tuesday 7 July 2009

Adios & RIP - மைகேல் ஜோசப் ஜாக்சன்.


தங்கத் தகடுகளால் வேயப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெட்டியினுள், உலகத்திலேயே அதிக ரசிகர்களைக் கொண்ட, மின்னல் வேக நடனத்துடன், அருமையான குரல் வளத்தோடு பாடி, கோடானுக் கோடி ரசிக ரசிகைகளை மகிழ்வித்த மைகேல் ஜாக்சன் என்கிற சகாப்தம், தன் நாவையும், கைக் கால்களயும் மவுனமாக்கி , உறைந்த அமைதியால் ஓய்வு கொண்டிருந்தது.


ஸ்டபாடியும், ப்பெல்ஸ் மையம், லாஸ் எஞ்சிலிஸ்நகரில் உள்ள 20, 000 பேர்களை உள்ளடக்கக்கூடிய மிகப்பெரிய பன்னோக்கு அரங்கம். ஜாக்சன் தன்னுடைய மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக, இங்குத்தான் தன்னுடைய கடைசி ஒத்திகையை நடத்தினார்.

அரங்கமே நிறைந்து இருந்தது. வழக்கமாக அவர் பாட ஆரம்பித்தாலே, முக்கியமாக பெண் ரசிகைகள் கதறி அழுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது அவரின் மரணத்தை நினைத்து என்ன நிலையில் இருந்திருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?


பாடகி மரியா கேரி, பாடகர் ஸ்டீவி வோண்டேர் , பாடகி ஜென்னிபெர் ஹட்சன், பாடகர் லியோனெல் ரிச்சி, கூடைப்பந்து சகாப்தம் மேஜிக் ஜான்சன்,நடிகை ப்ரூக் ஷில்ட்ஸ், போன்ற பல முக்கிய தலைகள் வந்து பாடல்களை பாடியும், கண்ணீர் மல்க நினைவுக் கூர்ந்தும் தங்கள் இறுதி மரியாதையை செலுத்தினர். ஜாக்சன் குடும்பத்தாரின் அஞ்சலி எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் மகள் பாரிஸ் ஜாக்சன் பேசும்போது கதறி அழுதது, கல் நெஞ்சினரயும் கரைய வைத்துவிட்டது. மொத்தத்தில் அவரை பிடிக்காத சிலரையும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வைத்துவிடும்.

இந்த வீடியோ க்கள் , அந்த நேரலை ஒளிபரப்பை காணத் தவறி வருந்துவோருக்கு இது ஒரு நல்ல வடிக்காலாக இருக்கும் என்று நம்புகிறேன்.




































Wednesday 1 July 2009

No Man's Land - உலகின் தலைச் சிறந்தப் படங்கள்.




2001 இல் வெளிவந்த இப்படம், 2002 ஆம் வருடத்திற்கான சிறந்த வேற்று மொழிக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதுமட்டுமல்லாது 26 சர்வதேச விருதுகளையும், 16 சர்வதேச விருதுக்கான பரிந்துரைகளும் பெற்று, உலகின் தலை சிறந்த படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது என்றால், அது மிகையாகது.


இப்படத்தின் இயக்குனர், இசைஅமைப்பாளர்,மற்றும் ஒலிப்பதிவாளரான டெனிஸ் தனோவிக், தற்போது போஸ்னியா என்றழைக்கப்படும், யூகோஸ்லாவிய நாட்டில் பிறந்தவர். திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். இயக்குனர் ஆவதற்கு முன், போஸ்னியா நாட்டின் ராணுவ கேமராமேனாக, பல போர் முனைகளை கண்டவர். அங்கு தான் கண்ட, கேட்ட அனுபவங்களை கோர்த்து, இந்த படத்தைப் படைத்துள்ளார்.


No Man's Land - இதன் அர்த்தம், இரண்டு எதிரி நாடுகளுக்கிடையே உள்ள, இருவருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலப்பரப்பு. இத்தகைய இடத்தில், இரு நாடுகளை சேர்ந்த ( போஸ்னியா & செர்பியா ) போர் வீரர்கள் இருவர் சிக்கிக் கொண்டு, அங்கு நடக்கும், வாழவா, சாவா?........, அன்பா. துவேஷாமா?........, நியாயமா, அநியாயமா?..போன்ற பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை, தத்ரூபமாக, மனம் நெகிழ வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


சிகி என்ற போஸ்னியா முஸ்லீம் போர் வீரன் செர்பியா வீரர்களோடு நடந்த சண்டையில், நண்பர்கள் கொல்லப்பட்டு, தானும் குண்டடிப்பட்டுயாருக்கும் சொந்தமில்லாத ' இடத்தில் உள்ள ஒரு பதுங்குகுழியில் அடைக்கலமாகிறான். அந்த நடப்பதை துப்பறிந்து வர, இரண்டு செர்பிய வீரர்கள் அனுப்பபடுகின்றனர். அதில் ஒருவன் நினோ. அவர்கள் வருவதைக்கண்ட சிகி ஒளிந்துக்கொளுகிறான். வந்தவர்களில் மற்றவன், அங்கு விழுந்து கிடந்த சிகியின் நண்பனான செராவை, இறந்துவிட்டதாக நினைய்த்துக்கொண்டு , அவன் உடம்புக்கடியில், உடலை அசைத்தால் வெடிக்கக்கூடிய கண்ணிவெடியை புதைத்து விடுகிறான். இதைகண்டு கோபமுற்று வெளியே வரும் சிகி, அந்த செர்பிய வீரனை சுட்டுக்கொல்லுகிறான். இந்த சமயத்தில் அவனின் நண்பனான செராவிர்க்கும் நினைவு வந்து விடுகிறது. இப்போது அந்த குழியில் போஸ்னிய வீரர்களான சிகி யும்,செராவும் மற்றும் செர்பிய வீரனான நிநோவும் உள்ளனர். வெளியே வர முற்பட்டால் இரண்டுப் பக்கமும் சுடுகிறார்கள். செராவை நகர விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


இதனிடையே ஒரு வெள்ளைக்கார ரிப்போட்டர் பெண்ணும், ஐ நா பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒரு பிரெஞ்சு வீரனும் கதையில் நுழைகிறார்கள். இப்படியாக அந்த மூவருக்கும் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை. படத்தின் மிக முக்கிய கட்சியே அதன் கிளைமாக்ஸ் காட்சித்தான். நம் இதயத்தை பாரமாக்கிவிடும் காட்சி அது.


அதன் ஆங்கில சப் டைட்டில் உள்ள வீடியோக்களை முடிந்தவரை அப்லோட் செய்துள்ளேன். வரவேற்ப்பு இருந்தால் மீதியும் செய்யப்படும். பார்த்து விட்டு கருத்துக்களை கூறுங்கள்.