Saturday 15 May 2010

பாடல் எனும் Time Machine !


சில காலமாகவே உலகம் முழுவதும் Time Machine எனப்படும் கால இயந்திரத்தைப் பற்றி பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிகழ்க்காலத்திளிருந்து எதிர் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் நம்மி அழைத்துச் செல்லும் இயந்திரம் அது. ஆனால் அது உடனேடியாக சாத்தியப்படாது என்றும் கூறுகின்றனர். ஆனால் நம்மால் அப்படி பிரயாணிக்க முடியும்! ஆமாங்க ! என்னோடு வாங்க, நான் அழைத்துச் செல்லுகிறேன். நான் வழக்கமாக போய் வந்துக்கொண்டுத்த்தான் இருக்கிறேன்! வால்வு ரேடியோக்களும், ட்ரான்ஸ்சிஸ்டர்களும், ரெக்கார்ட் ப்ளேயர்களும், டேப் ரேக்காடர்களும் இருந்த காலத்திற்கு செல்லலாமா ?  அந்த நாட்களில், ரெக்கார்டிங் கடைகளில் தவமிருந்து ஆடியோ கேசட்டுகளை  வாங்கி வந்து நம்ம கேசட் பிளேயர்களில் பெருமையோடு போட்டு, கேட்டு  மகிழ்ந்த காலங்களுக்கு போகலாம் வாங்க. ( என்ன ஃப்ரீயா ஜெகன்! வாங்க போகலாம்!)

கண்களை மூடிக்கொண்டு நம்ம இளவயது நினைவுகளை அசைப்போடுங்கள்.... நிறைய உள்ளது ... சிலப் பாடல்கள் உங்களின் ரசிப்புக்கு....
எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் சுவை அதிகம் என்பதால், ஒரு சஸ்பேன்சுக்காக வெறும் பாடல்கள் மாத்திரம்.....
































.

Friday 14 May 2010

பாடல்கள் ஒரு கால இயந்திரம்...A Time Machine ! (1)


சில காலமாகவே உலகம் முழுவதும் Time Machine எனப்படும் கால இயந்திரத்தைப் பற்றி பரவலாக எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நிகழ்க்காலத்திளிருந்து எதிர் காலத்திற்கும், இறந்த காலத்திற்கும் நம்மி அழைத்துச் செல்லும் இயந்திரம் அது. ஆனால் அது உடனேடியாக சாத்தியப்படாது என்றும் கூறுகின்றனர். ஆனால் நம்மால் அப்படி பிரயாணிக்க முடியும்! ஆமாங்க ! என்னோடு வாங்க, நான் அழைத்துச் செல்லுகிறேன். நான் வழக்கமாக போய் வந்துக்கொண்டுத்த்தான் இருக்கிறேன்! வால்வு ரேடியோக்களும், ட்ரான்ஸ்சிஸ்டர்களும், ரெக்கார்ட் ப்ளேயர்களும், டேப் ரேக்காடர்களும் இருந்த காலத்திற்கு செல்லலாமா ?  அந்த நாட்களில், ரெக்கார்டிங் கடைகளில் தவமிருந்து ஆடியோ கேசட்டுகளை  வாங்கி வந்து நம்ம கேசட் பிளேயர்களில் பெருமையோடு போட்டு, கேட்டு  மகிழ்ந்த காலங்களுக்கு போகலாம் வாங்க. ( என்ன ஃப்ரீயா ஜெகன்! வாங்க போகலாம்!)

கண்களை மூடிக்கொண்டு நம்ம இளவயது நினைவுகளை அசைப்போடுங்கள்.... நிறைய உள்ளது ... சிலப் பாடல்கள் உங்களின் ரசிப்புக்கு....
எந்த விவரமும் இல்லாமல் இருந்தால், இன்னும் கொஞ்சம் சுவை அதிகம் என்பதால், ஒரு சஸ்பேன்சுக்காக வெறும் பாடல்கள் மாத்திரம்.....
































.

Saturday 8 May 2010

சாப்ளின் எனும் ஜீனியஸ்! (வீடியோ)







உலகம் முழுதும்,  சினிமா என்று எடுத்துக்கொண்டால், சிலரைத்தான் ஜீனியஸ் என்றுக் குறிப்பிட முடியம் . அந்த வகையில் உலகமே போற்றும் சார்லி ஸ்பென்சர் சாப்ளின் என்ற நகைச்சுவை மேதையும் ஒருவர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அவர், யாரோ சொல்லிக் கொடுத்து, யாரோ தயாரித்து , யாரோ இயக்கி படம் பண்ணியவரில்லை. அவர் படத்துக்கு அவரேத்தான் எல்லாம்.


சாப்ளின் என்றவுடன், அவரின் 'Little Tramp' எனப்படும், வீடு வாசலில்லா நாடோடிக் கதாப் பாத்திரத்தை நினைப்தாலே  மூக்குக்கு கீழே மட்டும் உள்ள மீசையும், கருப்புத்தொப்பியுடன், டைட்டான கொட்டுடன், தொளதொள என்று பெரிய அளவில் பேகி பேண்டும், கையில் மூங்கில் வாக்கிங் ஸ்டிக்கும், பெரிய சைஸ் காலணிகளும் தான் நினைவுக்கு வரும். இந்த சின்ன நாடோடி உருவத்தை வைத்துக்கொண்டு உலகையே சிரித்து மகிழ வைத்தவர், அன்றும் சரி இன்றும் சரி. இவை எல்லாம் வழக்கமாக எல்லோரும் சொல்லுவதுத்தான். நாமும் அரைத்த மாவையே அரைக்கவேன்டாம். துவைத்த ... சரி.. சரி ...  மேலே போகலாம் வாங்க.


சார்லி சாப்ளின் : சில பல தகவல்கள்.


  • படங்கள் எடுத்து கோடீஸ்வரரானப்போதும், ரொம்ப நாள் தான் தங்கியருந்த பழைய அழுக்கு ஹோட்டலை விட்டு வெளியே வரவில்லை.
  • பின்பு  ஹாலிவுடில் தன் ஸ்டுடியோ தச்சர்களை வைத்தே 'ப்ரிவர்லி ஹில்ஸ்' பகுதியில் பெரிய வீட்டைக் கட்டினார். அதன் பெயர் 'Break Away House'
  • வாழ்நாள் முழுவதும் அவருக்கு நான்கு பெண்டாட்டிகள்.  முதல் மனைவி மில்ட்ரெட் ஹேரிஸ், மணமகன்  29, மணமகள் 16, ஒரு ஆண் பிள்ளை, மூன்று நாட்கள் மட்டும் வாழ்ந்தது.
  • ரெண்டாவது   மனைவி லிட்டா க்ரே,  35 - 16 ... இரண்டு ஆண பிள்ளைகள்,
  • மூணாவது பவுலேட் கோட்டெர்ட்,  47 - 28 ... குழந்தைகள்    இல்லை,
  • நாலாவது ஓனா ஓ'னில், 54 - 18 ... மூன்று ஆண், ஐந்து பெண் பிள்ளைகள்
           இப்படி வாழ்வாங்கு வாழ்ந்தவர் சாப்ளின்!


  • சாப்ளின் போல் உருவம் படைத்தவர் - போட்டியில் இவரும் கலந்துக்கொண்டு, இரண்டாவதாகவோ, மூன்றாவதாகவோ வந்தார் என்றுக் கூறப்படுகிறது!
  • இங்கிலாந்தில் மேடை நாடகங்களில்  இருக்கும் போது ஸ்டேன் லாரல், இவருக்கு கீழ் பயிற்சியில் இருந்தவர்!
  • இருவரும் அமெரிக்கா வந்து, ஒன்றாகத் தங்கியருந்த ஹோட்டலில், சமைக்க அனுமதி இல்லை. அப்போது லாரல் சமைக்கும்போது சத்தம் வராமல் இருக்க, சாப்ளின் வயலின் வாசிப்பாராம்!
  • அந்த 'Tramp' எனப்படும் நாடோடிக் கதாப்பாத்திரத்தின் உருவத்தை வடிவமைக்க அவர் சுயமாக உபயோகித்தது அவரின் கைத்தடி ஒன்றுதான்! மற்ற உடமைகள் எல்லாம் நண்பர்களிடமிருந்து....! தொளதொளா பேன்ட்  Roscoe `Fatty` Arbuckle  சீனியர் நடிகரிடமிருத்தும், அவரின் மாமனாரிடமிருந்து அந்தத் தொப்பியும், Chester Conklin என்ற சக நடிகரின் கொட்டும், Ford Sterling  என்ற அமெரிக்க அந்தநாள் காமெடி நடிகரின் 14 சைஸ் ஷூ வும், சக நடிகர்  Mack Swain  வைத்திருந்த கருப்பு நிற கிரேப் பேப்பர், அந்த புகழ்ப்பெற்ற துண்டு மீசைக்கும் உதவியது.
  • அவரின் கைத்தடியும், தொப்பியும் 1987 ஆம் வருடம், 1,50,000 டாலர்களுக்கு ஏழாம் விடப்பட்டது.
  • இதுப் பரவாயில்லைங்க... அவர்  சுவிசர்லாந்தில்  1977 ஆம் வருடம் கிறிஸ்மஸ் தினத்தன்று இறந்து  அடக்கம் செய்யப்பட்டபின், மூன்று மாதம் கழித்து, அவரின் குடும்பத்தாரிடம் பணம் பிடுங்கவேண்டும் என்று எண்ணி, அவரின் பிணத்தை தோண்டி கடத்திப் போய்விட்டது. ஆனால் திட்டம் தோல்வியடைந்து, அந்த பிணந்திருடரகள் பிடிப்பட்டனர். அவரின் உடல் ஜெனிவா நகர் ஏரிக்கரையோரம் கைப்பற்றப்பட்டது! 'இறந்தாலும் ஆயிரம் பொன்'[ என்பது இதுதானா? வேறென்ன மறுபடியும் சிமென்ட் பூசி புதைக்கப்பட்டார்!
  •  அவர் இறந்தப் பிறகு உலகம் முழுதும் நிறைய நாடுகள் அவரின் நினைவாக தபால் தலைகள் வெளியிட்டன. நம்ம இந்தியா உட்பட! பார்க்கவேண்டும்மா ? நம்ம ஊர்க்காரர் திரு. சா. விஜயக்குமார் என்ற நண்பரின் வலைப்பூவுக்கு சென்றால் அத்தனை நாடுகளின் சாப்ளின் தபால் தலைகளையும் பார்க்கலாம். Chaplin's hats off to SA. VEJEYKUMMAR ! ( அவர்ப் பெயரை அப்படித்தான் அவர் எழுதி இருக்கிறார்) 
  • 'The Great Dictator' படத்தில் அவர் ஹிட்லரை நக்கலடித்து படம் பண்ணியதால், அந்தப்படம் ஜெர்மெனியில் தடை செய்யப்பட்டது. ஆனாலும் அந்தப்  படத்தை ஹிட்லர் பலமுறைப் பார்த்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதுப்பற்றி அவர் என்னக்  கருத்துக்கள் கூறினார் என்று தெரியவில்லை. 
  • சாப்ளின் ஒரு யூதர் இல்லை என்றாலும், அவர் ஹிட்லரின் ஹிட் லிஸ்டில் இருந்தார். அவருக்கு சமமாக லிஸ்டில் இருந்த இன்னொரு விஐபி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் !

  • சார்லி சாப்ளினும் காந்தியடிகளும் லண்டனில் ஒரு முறை சந்தித்துக்கொண்டார்கள். வட்ட மேசை மாநாட்டுக்காக அவர் இங்கிலாந்து வந்திருந்த நேரம். அவருக்கு அளிக்கப்பட நட்சத்திர ஹோட்டல் வசதியை நிராகரித்துவிட்டு, முரில் லெஸ்டர் என்ற கிறிஸ்த்தவ சமாதான விரும்பி (pacifist) நடத்தும் Kingsley Hall Community Centre இல் தங்கி இருந்தபோது, சாப்ளின்னிடமிருந்து காந்தியை சந்திக்க விரும்பி விண்ணப்பித்து ஒரு தந்தி வந்ததாம். அதை வைத்துக்கொண்டு தந்தியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த காந்தியிடம் யாரோ ஒருவர், 'அவர் வெறும் ஒரு கோமாளி, அவரி சந்திப்பதால் எந்த பிரயோஜனமும் இல்லை' என்று கூறினாராம். அப்போது அங்கு வந்த முரில் ' பாபு , இந்த தந்தியில் உள்ள பெயரை உங்களுக்கு  தெர்யுமா? என்று கேட்டதற்கு காந்தியிடம் இருந்து 'இல்லை'(!) என்று பதில் வந்ததாம். அதற்க்கு முரில் ' அவர்தான் சார்லி சாப்ளின், உலகத்தில் அவரும் ஒரு ஹீரோ.அவரின் கலை உலக ஏழை உழைக்கும் மக்களின் வேரிலிருந்து வந்தது. அவரின் படங்களில் அவர்களை எப்போதும் கவுரவித்திருக்கிறார். உங்களைப்போலவே அவரும் ஏழைகளை  புரிந்து வைத்திருப்பவர். நீங்கள் கண்டிப்பாக அவரி சந்திக்கவேண்டும்' என்று கூறியதற்கு பின்னர் அந்த வரலாற்று சந்திப்பு நிகழ்ந்ததாம்.இது நடந்தது 21 செப்டெம்பர், 1931, லண்டனில் வாழ்ந்த இந்திய மருத்துவர் கட்டியால் என்பவரின் இல்லத்தில் நடந்தது! (படத்தின் வலது மூலையில் நின்ருக்கொண்டிருப்பது  இருப்பது யார் என்றுத் தெரிகிறதா?)
  • அவருக்கு 75 வயதாகும்போது அவரின் கடிசீப் பையனான கிறிஸ்டோபர் பிறந்தார்!
  • தன் வாழ்நாளில் பெரும்பகுதியை அமெரிக்காவில் சினிமாக்களை எடுத்து கழித்த சாப்ளின் ஒரு அமெரிக்க பிரஜை இல்லை! அதுவுமில்லாமல் கடைசியில் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்!
  • 1940 களில் ஜோன் பெரி என்ற நடிகையோடு தொடர்பு இருந்தது. பிறகு பிரிந்து விட்டனர். ஆனால் அதன் பிறகு சிலகாலம் கழித்து தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சாப்ளின்தான் தந்தை என்று வழக்குத் தொடர்ந்தார். மருத்துவ பரிசோதனையில் அவர் அந்தக் குழந்தைக்கு தோப்பனார் இல்லை என்று உறுதி செய்யப்பட்டும் கூட நீதிபதியால் நம்பத்தகாத ஆதாரம் என்று நிராகரிக்கப்பட்டு, யாரோ போட்ட கோலத்திற்கு அவர் வாரம்  £75 தண்டம் அழ வேண்டிஇருந்தது. அந்தக் காலத்தில் அது பெரிய அமவுண்ட்!
  • 131 விண் பாறைகளைக் கண்டுப்பிடித்த, ரஷிய பெண் வானவியலாலரான  Ms.Lyudmila Karachkina (தமிழில் படித்துக்கொள்ளவும்) தான் கண்டுப்பிடித்த ஒரு விண்பாறைக்கு , சாப்ளில் மேல் உள்ள அளவுக்கடந்த மரியாதையால் அதற்க்கு '3623 சாப்ளின்' என்றுப் பெயர் வைத்தார்.
  • கடைசி மனிவி ஒன்னவின் மகளான ஜெரால்டின் சாப்ளின், 1992 இல் சாளினின் வாழ்க்கை படமாக்கப்பட்டபோது, அந்தப்படத்தில் அவரின் தாயாக நடித்தார்!   
  • அவர் 500 க்கும் மேற்ப்பட்ட பாடல்களை இயற்றி இசை அமைத்துள்ளார். அதில் புகழ்ப்பெற்ற 'Smile' பாடலும் அடங்கும். அதை மைக்கேல் ஜாக்சன் பாடி கேளுங்கள்.
  •             அதேப்பாடல் ஜாக்சனின் இறுதிச் சடங்கின்போது, 
                அவரின் சகோதரர் 
                ஜெர்மைன்     ஜாக்சன் 
            மனமுருகப்பாடினார். அதைக்காண இங்கே...
  • முழுத் திரைக்கதை எழுதிக்கொண்டு படமெடுக்கும் பழக்கமெல்லாம் அவரிடம் கிடையாது. ஆனால் 100% திருப்தி ஏற்ப்படும் வரை படம் ரிலீசும் கிடையாது!
  • அவரின் கடைசிப் படமான ' A Countess from Hong Kong (1967) படம் வெளிவந்தப்பின்பே, அவரின் பழையப் படங்களுக்கு இசை சேர்த்தார்!
  • அவரின் ட்ரேட் மார்க் கதாப்பாத்திரம் 'Tramp' ஏறக்குறைய எழுபது துண்டு, மற்றும் முழுப் படங்களில் வலம் வந்தது!
  • அவர் விரும்பி விளையாடிய  விளையாட்டு... டென்னிஸ்!
  • மிகவும்  ஏழ்மை நிலையில், இங்கிலாந்தில், அவரின் தாய், சாப்ளினின்  துணிகளை விற்று விட்டு பணம் கொண்டுவர நிர்பந்திப்பாராம்!
  • மனநோய்க்கு ஆளான அவரின் தாயார் மருத்துவமனையில் அடிக்கடி சேர்க்கப்பட்டார். அதனால் மன வேதனைப்பட்ட சாப்ளின் அவரைப் பார்ப்பதையே தவிர்த்து வந்தாராம்.
  • ஹிட்லரைவிட நான்கு நாட்கள் பெரியவர் சாப்ளின்! 
  • அவர் கடைசியாக பர்ர்த்து ரசித்த படம் சில்வெஸ்டர் ஸ்டாலோன் நடித்த 'Rocky- (1976)'
  • அவர் மகளின் கூற்றுப்படி சாப்ளின், அவரின் கடைசிக் காலங்களில் வருங்காலத்தில் தான் மறக்கப்பட்டு விடுவோம் என்று வருந்தினாராம். அதனாலேயே விளம்பரங்களுக்கு தன் உருவத்தை பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தாராம். 





] http://youtu.be/tMOkNJmnCj0
>சாப்ளினின்  மறக்கப்பட்ட வருடங்கள்..... வீடியோ கீழே....

Wednesday 5 May 2010

சிகப்பு விளக்கு சிறார்கள் (வீடியோ)

<div class="separator" style="clear: both; text-align: center;">

பிராத்தல்: ஆண்கள் தம் செக்ஸ் தேவைகளை,(மனைவியல்லாத) பெண்களிடம், பணம் கொடுத்து பூர்த்தி செய்துக்கொள்ளும் கட்டிடம் அல்லது இடம்!
சோனாகாச்சி! கொல்கொத்தா நகரின் மிகப்பெரிய சிவப்புவிளக்கு பகுதி. மகா நதி திரைப்படத்தில், கமலின் மகள் விபசாரத்தில் இருந்து மீட்கப்படும் காட்சி நினைவுக்கு வருகிறதா? அதே இடம் தான்!

இப்போது நாம் காணப்போகும் காணொளி 'Born into Brothels' என்ற பெயருடையது. நம்மில் நிறையப்பேர் ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும். 200
5 வருடத்தின் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கார்  விருதை தட்டிச்சென்றப் படம். அது மட்டுமல்லாது பல சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.  இதன் இயக்குனர்கள் சானா பிரிஸ்கி & ராஸ் கவுஃப்மேன்.  சோனாகாச்சி பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளைச் சுற்றி வரும் கேமராக் கவிதை! ஆனால் இந்தக் கவிதை நம்மை கண்கலங்கவைக்கும்... தடுமாறவைக்கும்.... நேழ்ச்சியுறவைக்கும் அதுமட்டுமல்லாது, புன்னகைக்கவும் வைக்கும்! என்னதான் நம்ம நாடு வளரும் நாடுகளிலேயே முன்னணி நாடு என்று சொன்னாலும், இதுப்போன்ற சமுதாயத்தின் கரும்பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. காணும்போது நம் மனது கஷ்டப்படுகிறது.


பிரிட்டனில் பிறந்து, நியூ யார்க் நகரில் வாழும் புகைப்படக் கலைஞரான சானா பிரிஸ்கி (Zana Briski) 1997 ஆம் வருடம், கொல்கத்தாவின் பாலியல் தொழிலாளிகளை புகைப்படமெடுக்க வந்தார். வந்தவர் அந்தப் பகுதியிலேயே தங்கி வாழ்ந்து வரும்போது, அங்கு அவரை 'சானா ஆண்ட்டி' என்று அன்போடு அழைத்து, அவரை  சுற்றி வந்த சிறுவர், சிறுமிகளிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதோடு நில்லாமல், அவர்களில் எட்டு பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'Point & shoot - 35 mm' கேமராக்களை வாங்கிக்கொடுத்து, அவர்களுக்கு அடிப்படை புகைப்பட தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதற்காக Kids with Cameras என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அவர்களின் படிப்பு மற்றும் பயிற்சி போன்றவற்றை  கவனித்துக்கொண்டார். அந்த பிள்ளைகளை வைத்து, கொல்கத்தா நகரின் தினசரி வாழ்கையை, மனிதர்களை புகைப்படங்களாக மாற்றினார். ஆஹா! அந்த சொப்புப்பெட்டிக் கேமராக்களில், அந்தக் குழந்தைகள் வடித்துள்ள வண்ணக் கலவைகளை , இன்றுள்ள லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராக்கள் கொடுக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்! இப்படி ,அதன் பின்னணியை, அந்த பிள்ளைகளின் அன்றாட வாழ்கையை , தன் சக இயக்குனரான ராஸ்  கவுஃப்மேனோடு (Ross Kouffman) சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த காணொளியை காவியமாகியுள்ளார்,
இந்த காணொளியை பார்த்தபிறகு, எவ்வளவு  கோபம் வந்தாலும், துரோகிகளையும், வேண்டாத  யாரையும் 'தே... பயல் ' என்று தீந்தமிழிலோ, அல்லது போம்ப டீசண்டாக ஆங்கிலத்திலேயோ, மறந்தும் திட்டக்கூடாது  என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி திட்டுவது அந்த பாவமறியா, அற்புத குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அவமானமாக, அநீதியாக  கருதுகிறேன்.

அந்த படைப்பைத்தான் இப்போது நாம் காணப்போகிறோம். ரெடியா நண்பர்களே. உங்களின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிதானமாக வந்தால் நல்லது.

சானா பிரிஸ்கியின் சோனாகாச்சி புகைப்படங்கள்.
சிறுவன் அவ்ஜீத் ஹல்தர் இன்று  (2008)..... [ காணொளியை பார்த்த பிறகு வந்தால்தான் புரியும்]



DivX  Player இருந்தால் இன்னும் சிறந்த  குவாலிட்டியில் காணலாம். முயன்றுப் பாருங்களேன்.
DivX Player டவுன்லோட் செய்ய இங்கே. for Windows , for Mac

Install This Version & DO NOT UPDATE

Tuesday 27 April 2010

ப்ருஸ் லீ : ஒரு போராளியின் பயணம்


[இதற்கு முந்தையப்  பதிவான ' ப்ருஸ் லீ மாற்றிய உலகம் ' என்ற பதிவைக் காண இங்கே செல்லவும்]

என்னதான் ஜாக்கி சானும், ஜெட் லீயும் இந்தக்காலத்து, 'மார்ஷியல் ஆர்ட்' எனப்படும் தற்காப்புக் கலை  ஹீரோக்களாக வலம் வந்தாலும், நான்கே படங்களில் நடித்து, ப்ருஸ் லீயைப்போல  இறவாப் புகழை யாரும் அடைய முடியாது.  ஒரு முறை மார்லன் பிராண்டோ கூறியதுப்போல, ஜேம்ஸ் டீன் , மர்லின் மன்றோ போல ப்ருஸ் லீ இளமையிலே  இறந்தாலும், அவரின் புகழ் இந்த சினிமா உள்ளவரை நிலைக்கும். அவர் ஒரு மாஸ்டர் !


1972 ஆம் ஆண்டு, கோல்டன் ஹார்வஸ்ட் ஃ பிலிம், சார்பாக தனுடைய நான்காவது படமான 'Game of Death' ஐ  படமாக்க துவங்கிவிட்டார். சில சண்டைக்காட்சிகள், அவரின் மாணவரான, கூடைப்பந்துப்புகழ், கரீம் அப்துல் ஜபாரை (உயரம் 7'2") வைத்தும் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், வார்னர் பிரதர்ஸ் அவரை 'எண்டர் தி டிராகன்' படத்தில் நடிக்க அழைத்தனர். சீன சினிமாவில் சிக்கிக்கிடந்த, அவரை உலக அளவில் பிரபலப்படுத்தும் என்பதை கணித்த ப்ருஸ் லீ, கேம் ஆப் டெத் ஐ கிடப்பில் போட்டுவிட்டு, சாகாவரம் பெற்ற, சரித்திரமாகப்போகும் அந்தப் படத்தை நடித்து முடித்தார். உலக சினிமா வரலாற்றில், இந்தப்படமும் வசூலில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. ஆனால் அதன் ரிலீஸ் தேதி 26 ஜூலை  1973 ஆம் வருடத்தில், ஆறு நாட்களுக்கு முன்பாக, திடீரென மர்மமான முறையில்  மரணமடைந்தார் அந்த சாதனைப் படத்தின் ஹீரோ! (ஏனோ மைகேல் ஜாக்சன் நினைவுக்கு வருகிறார் !)

'என்டர் தி டிராகன் ' படத்தின் இயக்குனர், ராபர்ட் க்லோசும், கோல்டன் ஹார்வஸ்ட் - ரேமன்ட் சோவும் சேர்ந்து ப்ருஸ்  லீயின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற முன்வந்தார்கள். உண்மையிலே ப்ருஸ் லீ சுமார் 100 நிமிடங்கள் வரை படமாக்கியிருந்தார். ஆனால் இயக்குனருக்கு கிடைத்ததோ வெறும் 15 நிமிட ஒரிஜினல் காட்சிகள் மட்டும்தான். ப்ருஸ் லீ போன்ற சுமாரான  முக அமைப்பு கொண்ட ஒரு நடிகரை வைத்து, ஒரிஜினல் கதையையும் மாற்றி ஒப்பெற்றிப் பார்த்தார். ஆனால் பருப்பு வேகவில்லை. சரியான வரவேற்பைப் பெறவில்லை. ரிலீஸ் வருடம் 1979.


இவை இப்படி இருக்க, 1999 இல், பே லோகன் என்ற கிழக்கு ஆசிய (ஹாங்காங் ) சினிமா ஆராய்ச்சியாளரும், திரைக்கதை கர்த்தா, மட்டும் தற்காப்புக்கலை நிபுணர், மிடியா ஏசியா நிறுவனத்தில், கொல்லைப்[புறத்தில் உள்ள வேண்டாத சாமான்களை கிளறிக்கொண்டு இருக்கும்போது, கோழி எச்சங்களுக்கு நடுவே ப்ருஸ் லீ படமாக்கிய ஒரிஜினல் Game of Death படத்தின் படச்சுருள் கிடைத்தது! அதைக்கொண்டு வார்னர் பிரதர்ஸ், ஜான் லிட்டில்  என்ற ப்ருஸ் லீயின் முக்கிய நண்பரும், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமானவரை வைத்து இந்த விவரணப் படமான  Bruce Lee: A Warrior's Journey யை தயாரித்தது. இதில் Game of Death திரைப்படத்தில் காணப்படாத ஒரிஜினல் ப்ருஸ் லீயின் சண்டைக் காட்சிகளையும் சேர்த்து, அவர்  வாழ்கையில் பங்குபெற்ற முக்கிய நபர்களின் பேட்டியோடு மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளனர். அதைத்தான் நாம் இப்போது காணப்போகிறோம் நண்பர்களே.  
Bruce Lee: A Warrior's Journey 



ஒரு களேபரமான பாடலுடன் கூடிய ப்ருஸ் லீ கிளிப்பிங்க்ஸ் .....




ப்ருஸ் லீயின் இருத் ஊர்வலத்தில் ஹாலிவூட் சூப்பர் ஸ்டார்களான ஸ்டீவ் மேக்வீனும், ஜேம்ஸ் கோபர்னும்.




இந்த புகழ்ப்பெற்ற  Kung Fu பாடலை கேட்டிருக்கிறீர்களா ? நம்ம 'குர்பானி - ஆப் ஜெசா கோயிமே' - Made in India புகழ் பிட்டு அப்பையா (Biddu Appaiyaa) இசை  அமைத்து கார்ல் டக்லாஸ் பாடியது....

வருகைக்கு  நன்றி , ஏதாவது எழுதிவிட்டுப் போங்க...



ஹாங்காங்கில் ப்ரூஸ்லீயின் சிலை...


Saturday 24 April 2010

ப்ராத்தலில் பிறந்தவர்கள் ! (வீடியோ)

<div class="separator" style="clear: both; text-align: center;">

பிராத்தல்: ஆண்கள் தம் செக்ஸ் தேவைகளை,(மனைவியல்லாத) பெண்களிடம், பணம் கொடுத்து பூர்த்தி செய்துக்கொள்ளும் கட்டிடம் அல்லது இடம்!
சோனாகாச்சி! கொல்கொத்தா நகரின் மிகப்பெரிய சிவப்புவிளக்கு பகுதி. மகா நதி திரைப்படத்தில், கமலின் மகள் விபசாரத்தில் இருந்து மீட்கப்படும் காட்சி நினைவுக்கு வருகிறதா? அதே இடம் தான்!

இப்போது நாம் காணப்போகும் காணொளி 'Born into Brothels' என்ற பெயருடையது. நம்மில் நிறையப்பேர் ஏற்கனவே பார்த்திருக்கக் கூடும். 200
5 வருடத்தின் சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கார்  விருதை தட்டிச்சென்றப் படம். அது மட்டுமல்லாது பல சர்வதேச விருதுகளை குவித்துள்ளது.  இதன் இயக்குனர்கள் சானா பிரிஸ்கி & ராஸ் கவுஃப்மேன்.  சோனாகாச்சி பகுதியில், பாலியல் தொழிலில் ஈடுப்படும் பெண்களுக்கு பிறந்த பிள்ளைகளைச் சுற்றி வரும் கேமராக் கவிதை! ஆனால் இந்தக் கவிதை நம்மை கண்கலங்கவைக்கும்... தடுமாறவைக்கும்.... நேழ்ச்சியுறவைக்கும் அதுமட்டுமல்லாது, புன்னகைக்கவும் வைக்கும்! என்னதான் நம்ம நாடு வளரும் நாடுகளிலேயே முன்னணி நாடு என்று சொன்னாலும், இதுப்போன்ற சமுதாயத்தின் கரும்பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது. காணும்போது நம் மனது கஷ்டப்படுகிறது.


பிரிட்டனில் பிறந்து, நியூ யார்க் நகரில் வாழும் புகைப்படக் கலைஞரான சானா பிரிஸ்கி (Zana Briski) 1997 ஆம் வருடம், கொல்கத்தாவின் பாலியல் தொழிலாளிகளை புகைப்படமெடுக்க வந்தார். வந்தவர் அந்தப் பகுதியிலேயே தங்கி வாழ்ந்து வரும்போது, அங்கு அவரை 'சானா ஆண்ட்டி' என்று அன்போடு அழைத்து, அவரை  சுற்றி வந்த சிறுவர், சிறுமிகளிடம் அவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. அதோடு நில்லாமல், அவர்களில் எட்டு பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'Point & shoot - 35 mm' கேமராக்களை வாங்கிக்கொடுத்து, அவர்களுக்கு அடிப்படை புகைப்பட தொழில் நுட்பத்தை கற்றுக் கொடுக்கவும் ஆரம்பித்தார். இதற்காக Kids with Cameras என்ற இயக்கத்தை ஆரம்பித்து, அவர்களின் படிப்பு மற்றும் பயிற்சி போன்றவற்றை  கவனித்துக்கொண்டார். அந்த பிள்ளைகளை வைத்து, கொல்கத்தா நகரின் தினசரி வாழ்கையை, மனிதர்களை புகைப்படங்களாக மாற்றினார். ஆஹா! அந்த சொப்புப்பெட்டிக் கேமராக்களில், அந்தக் குழந்தைகள் வடித்துள்ள வண்ணக் கலவைகளை , இன்றுள்ள லேட்டஸ்ட் டிஜிட்டல் கேமராக்கள் கொடுக்கமுடியுமா என்பது சந்தேகம்தான்! இப்படி ,அதன் பின்னணியை, அந்த பிள்ளைகளின் அன்றாட வாழ்கையை , தன் சக இயக்குனரான ராஸ்  கவுஃப்மேனோடு (Ross Kouffman) சேர்ந்து ஒரு சக்திவாய்ந்த காணொளியை காவியமாகியுள்ளார்,
இந்த காணொளியை பார்த்தபிறகு, எவ்வளவு  கோபம் வந்தாலும், துரோகிகளையும், வேண்டாத  யாரையும் 'தே... பயல் ' என்று தீந்தமிழிலோ, அல்லது போம்ப டீசண்டாக ஆங்கிலத்திலேயோ, மறந்தும் திட்டக்கூடாது  என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி திட்டுவது அந்த பாவமறியா, அற்புத குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அவமானமாக, அநீதியாக  கருதுகிறேன்.

அந்த படைப்பைத்தான் இப்போது நாம் காணப்போகிறோம். ரெடியா நண்பர்களே. உங்களின் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிதானமாக வந்தால் நல்லது.

சானா பிரிஸ்கியின் சோனாகாச்சி புகைப்படங்கள்.
சிறுவன் அவ்ஜீத் ஹல்தர் இன்று  (2008)..... [ காணொளியை பார்த்த பிறகு வந்தால்தான் புரியும்]



DivX  Player இருந்தால் இன்னும் சிறந்த  குவாலிட்டியில் காணலாம். முயன்றுப் பாருங்களேன்.
DivX Player டவுன்லோட் செய்ய இங்கே. for Windows , for Mac

Install This Version & DO NOT UPDATE

Wednesday 27 January 2010

என் கண்ணின் மணிகளுக்கு- திரு சிவக்குமார்.(வீடியோ)



திரு சிவக்குமார் அவர்களின் இந்த அருமையான சொற்ப்போழிவை வழங்கிய விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும், வலையேற்றம் செய்த techsatish குழுவுக்கும் நன்றிகள் பல.

என்ன ஒரு  அற்புதமான பேச்சு... வியக்கவைக்கும் ஞாபகச் சக்தி.... நல்லக் கருத்தை கூற வேண்டும் என்ற ஆர்வம்..., திரு. சிவக்குமார் அவர்களின் மற்றொருப் பரிமாணம்! அன்பு சிவக்குமார் அவர்களே, உங்களின் இந்த சிறந்தத் தொண்டுக்கு தலைவணங்குகிறோம்.

விஜய் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியை  காணத்தவறியவர்களுக்கு இந்தப் பதிவு உதவும் என்ற நம்பிக்கையில் வழங்கப்படுகிறது.
இந்த பதிவில் எழுத ஒன்றுமில்லை. கீழ் உள்ள வீடியோக்களை பார்த்தால் போதும், அதன் அருமைப் புரியும்.





















en kanin part 10 @ Yahoo! Video


Welcome Karthick KG!




Wednesday 13 January 2010

ரயான் ஒயிட்டும் பாப் இசை மன்னனும்,




ரயான் ஒயிட். ( 6/12/71 - 8/4/90 ). அப்படி என்ன தெரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது இந்தச் இளைஞனைப் பற்றி ? ஆமாம். மனித நேயம் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் அறிந்துக்கொள்ளவேண்டிய ஒரு துயரப்பட்ட ஒரு ஜீவன் இவன்.  எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் தூதுவன் இவன்தான்!  தவறே செய்யாமல், தனக்கேத் தெரியாமல், அக்கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகி மரித்துப்போன அழகுச் சிறுவன் அவன்.  ஆனால் அந்த நோயையே தனக்கு கிடைத்த பேறாகக் கருதி, தன்னால் முடிந்த அளவிற்கு உலகிற்கு தொண்டு செய்து சாகாவரம் பெற்றவன். அதனால் மிகப் பிரபமானவர்களின் நட்பினைப் பெற்று,  நம் மனதில் இப்போதும்  புன்னகைப் பூக்கிறான். ( இப்போது உயிரோடு இருந்திருந்தால் 39 வயது ஆகி இருக்கும். அவன்.. இவன் .. என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவதால் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அப்படி அழைப்பது இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே கருதுகிறேன்.)

ரயான், அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தின் கொவ்கேமா பகுதியில் பிறந்தவன். தந்தை ஹுபர்ட், தாய் ஜென்னி. பாவம் பிறக்கும் போதே 'ஹீமோபிலியா ' என்ற ரத்தம் உறைதலில் பிரச்சனையுள்ள குறைப்பாடால் பிறந்தவன். இந்தக்குறைப்பாடு உள்ளவர்களுக்கு சிறு அடிப்பட்டு ரத்தம் கசிந்தால், நிற்கவே நிற்காது!  நார்மலான மனிதருக்கு ரத்தம் கசிந்தால், சில நிமிடங்களில் அடிப்பட்ட இடத்தில் ரத்தம் உறைந்து கசிவது நின்றுவிடும். ஆனால் ஹீமோபிலியா உள்ளவர்கள் கதி மிகவும் பரிதாபம்.  இந்த நிலை 20,000 - 34,000 ஆண்குழந்தைப் பிறப்புகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும்.  இந்த நோய்க்கு தீர்வே  இல்லை அந்தக்காலத்தில்.( இப்போது உள்ளதா என்று யாராவது கூறுங்களேன்) ஆனால் இவர்களின் ரத்தத்தில் குறைவாக உள்ள, ரத்தம் உறைதலுக்கு காரணமாகும் காரணிகளைக் கொண்ட ( coagulation factors - Factor VIII ) - வேறொரு மனிதரின் ரத்தத்தை செலுத்தினால் நிலைமைக் கொஞ்சம் சீராகும். இப்படி நடந்தப் போதுதான் யாரோ எய்ட்ஸ் நோய்க்கொண்ட ஒருவரின் ரத்தம் செலுதப்பட்டுவிட்டது. அந்தக் காலங்களில் இப்போது உள்ளதுப்போல் ரத்தப் பரிசோதனைகளில் தற்போதுள்ளதுப்போல இத்தனைக் கெடுபிடிகள் இல்லை. எய்ட்ஸ் பற்றிய அறிவோ, விழிப்புணர்வோ மிகவும் குறைவு.

இவை இப்படி இருக்க, 1984 இல் நுரையீரலைத் தாக்கும் நிமோனியாக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிதப்பட்டன் ரயான். மிகவும் மோசமான நிலையில், அவனுடைய நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற தீர்மானிக்கப்பட்டது. அப்போது நடைப்பெற்ற பரிசோதனைகள்  மூலம்தான் ரயானுக்கு எய்ட்ஸ் நோய் இருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் வாழ்க்கைக்கு ஆறு மாதம் கெடு விதித்தனர். அப்போது, பள்ளிக்கு செல்ல முடியாத வகையில் அவன் உடல் நிலை இருந்தது. ஆனால் சிறிது நாட்கள் சென்றப்பின் உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட்டது. ஆகவே 1985 ஜூன் மாதத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த, 'ரசியாவில்லி' ஊரின் ' வெஸ்டேர்ன் மிடில் ஸ்கூல் ' பள்ளியில் அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டி விண்ணப்பம் வைக்கப் பட்டது. ஆனால் எய்ட்ஸ் நோய்பற்றிய அடிப்படை அறிவே இல்லாத நாட்களான அப்போது, அவனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. அங்கு வேலை செய்த 50 ஆசிரியர்களும், படித்த 360 இல், 117 மாணவர்களின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. ஆகவே இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.

1983 இல் அமெரிக்க மருத்துவக் கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கை, எய்ட்ஸ் பற்றிய அறியாமைக்கு அடித்தளமானது. அதிலே இந்த நோயாளிகள் தொட்ட எந்தப் பொருளைத் தொட்டாலும், நோயப்பரவும் என்று கூறப்பட்டிருந்தது. ஆகவே இது மக்களிடையே பீதியையும், அறியாமையையும் வளர்த்துவிட்டது. ரயான் அப்போது வீடுகளுக்கு நியுஸ் பேப்பர் போடும் பையனாகவும் வேலைப்பார்த்துவந்தான். அவனுக்கு நோய் இருப்பது தெரிந்ததும், மக்கள் அந்த பத்திரிக்கைச் சாந்தாவையே நிறுத்தி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பிறகு பல பிரபல மருத்துவர்கள் அறுதியிட்டு எய்ட்ஸ்இன் உண்மையானத் தாக்கம் என்னவென்பதைக் கூறியப்பின்னர், எட்டு மாதங்கள்  வழக்காடியப்பின்னர் மீண்டும் பள்ளியில் அனுமதிக்கப்பட்டன. அவன் பள்ளிக்கு வந்த முதல் நாளில், பள்ளியில் மிகப் பெரும்பான் மாணவர்கள் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்! அந்த நிலையில், ஒருப் பாவமும் அறியா அந்த இளைஞனின் மனம் என்னப் பாடுப்பட்டிருக்கும் என்பதை எண்ணும் போது மனம் கலங்குகிறது. அவன் வீதியில் நடந்து சென்றால் " We know you are queer!" ( நீ நடத்தைக் கேட்டவன் என்று எங்களுக்கு தெரியும் ) எனக் கூக்குரலிடுவார்களாம்! என்னப் பரிதாபமான நிலை? ரயான் குடும்பத்திற்கு மிகவும் உறுத்துணையாக இருந்த ' கொவ்கேமா திரிப்யுன் ' ( Kokomo Tribune ) பத்திரிகை ஆசிரியர்களும் கொலை மிரட்டல்களுக்கும், வசவுகளுக்கும் ஆளானார்கள். இதற்கு உச்சக்கட்டமாக வீட்டில் ரியானின் அறை ஜன்னல் துப்பாக்கி குண்டுகளால் தாக்கப்பட்டப்போது, அவன் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறி, அதே மாநிலத்தில் சிசிரா என்ற ஊரில் குடியேறியது. பின்பு மருத்துவத் துறையில் நடந்த முன்னேற்றங்களால் பல உண்மையான விஷயங்கள் வெளிவந்த சமயத்தில்,  மீண்டும் அந்த ஊரின்  ஹமில்டன் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்த அன்று, பள்ளி தலைமை ஆசிரியராலும் மாணவர்களாலும் கைக்குலுக்கி வரவேற்கப்பட்டபோது, இதைப் படிக்கும் நம் மனம் நெகிழ்வதுப்போல், அவன் மனமும் நெகிழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

நடுநிலைப் பள்ளியில் படித்தப்போது தனிமைப் படுத்தப்பட்ட ரயான், பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் நாடு முழுவதும் பிரபலமானான்! அப்போது வளரத் தொடங்கிய எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்திய போஸ்டர்களுக்கு இவனே மாடலானான்! அது எத்தனைப் பெரிய விஷயம் என்பது  ரொம்ப யோசித்தால்தான் விளங்கும். அதுவும் 1980 களில்! ( 'எப்படி இருந்த நான்.... இப்படி ....). நாடு முழுவதும் நடந்த விழிப்புணர்வு மற்றும் நிதித் திரட்டும் விழாக்களில் மிகவும் பிரபலமானவர்களோடு கலந்துக்கொண்டான்! தொலைக்காட்சி, வானொலிகளில் நடந்த விவாதங்களில் கலந்துக்கொண்டான்! அதனால் பலர் அவனின் நண்பர்களானார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் ஜனாதிபதி. ரீகனும் அவர் மனைவியும், பாப் இசை மன்னன் மைகேல் ஜாக்சன், பிரிட்டிஷ் பாடகர் சர். எல்டன் ஜான். போல மற்றும் பலர்.

1990ஆம்ஆண்டுமார்ச் மாதத்தில்,அவன் படித்த பள்ளியின் பட்டமளிப்பு விழாவுக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு, மீண்டும் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் ரயான். படிப்படியே உடல் நிலை மோசமாகி, கிறிஸ்தவர்களின் பண்டிகையான குருத்தோலை ஞாயிறன்று, அந்தப் பாவப்பட்ட உயிர், இந்தப் பாழும் உலகில் இருந்து விடைப்பெற்றது. சர். எல்டன் ஜான் , கடைசி நிமிடம் வரை கூடவே இருந்து பணிவிடை செய்தார். ரயானின் இறுதிச்சடங்கில் அவரி புகழ்ப்பெற்ற பாடலான ' Skyline Pigion ' என்றப் பாடலை உருக்கத்தொடுப் பாடி இறுதியஞ்சலி செலுத்தினார்.

மைகேல் ஜாக்சனின் முக்கியமான நண்பர்களில் ரயானும் ஒருவன். கொஞ்சகாலத்திலேயே இருவரின் நட்பும் நெருக்கமானது. ரியானின் விருப்பமான போர்ட் கம்பெனியின், சிவப்பு நிற முஸ்டங் காரை, அன்புப் பரிசாக வழங்கினார். ஜாக்சனின் இல்லமான நேவர்லாண்டுக்குள் எப்போதும் சென்றுவர அனுமதிப் பெற்றவர்களில் ரயானும் ஒருவன். ரயான் இறந்ததும், அவனுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட ஜாக்சன், தான் பரிசாக வழங்கிய கார் கல்லறைக்கு வெளியே நிற்பதுக் கண்டு, அதனுள் ஏறி அமர்ந்து, ஸ்டார்ட் செய்ததும், அவரின் பாடலான ' Man in the mirror ' என்றப் பாடல் ஒலித்ததுக் கேட்டு கண்கலங்கினார். மேலும் ரயான் இறக்கும் முன்பு அவன் கேட்ட கடைசிப் பாடலும் அதுவே என்றறிந்து மனம் கலங்கிப் போனார்.  தன்னுடைய Dangerous ஆல்பத்தில் ரயானின் நினைவாக 'Gone too soon ' என்ற உலகப்புகழ்ப் பாடலை சமர்ப்பணம் செய்தார் ஜாக்சன். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ஜாக்சன் இறந்தப்போது, அவரின் இறுதிச்சடங்கில், இதேப்படலை பாடி கௌரவித்தார்கள்.  ABC தொலைகாட்சி நிறுவனம் ' The Ryan White Story ' என்ற வாழ்க்கைப் பதிவை 1989 ஆம் ஆண்டு  ஒளிப்பரபியது.
தன் இளம் வயதில் தன்னையும் அறியாமல்  கொடிய நோயினால் ஆட்கொள்ளப்பட்டு,
மக்களின் அறியாமையால் மன உளைச்சலுக்கும், துன்பத்துக்கும் ஆளாக்கப்பட்டும், இந்த உலகை நேசித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த இந்த ரயான்   ஒயிட் என்ற அருமை மனிதனை, மனிதம் உள்ளவரை மறக்க முடியாது! இந்தப் பதிவு, நம்ம எல்லோரிடமும்  போய்ச் சேர ஓட்டுப் போடுங்கள். நன்றி.
ரயானைப் பற்றி மேலும்  அறிந்துக் கொள்ள பல வலைத் தளங்கள் உள்ளன. அவற்றில் சில....

http://www.malibufanclub.com/specials.ryanwhite.afp?afpcookie=3C2D7144AADA494ABFC3D6C99E629D16

http://www.michaeljackson.com/us/node/402340

http://www.wftv.com/video/19873344/index.html

http://www.digitaljournalist.org/issue0106/visions_yamasaki1.htm



ரயானுக்காக மைகேல் ஜாக்சன் எழுதிய பாடல்...

http://www.youtube.com/watch?v=ZjExllie9Fg

மைகேல் ஜாக்சன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் முன்னிலையில் ' Gone too soon ' என்றப் பாடலை ரயானின் நினைவாக உலகிற்கு  அளித்த காணொளி.




மற்றும் சில காணொளிகள்.....


Watch CBS News Videos Online