Friday 15 May 2009

Ben - Hur : The tale of Christ - உலகின் தலைச் சிறந்தப் படங்கள்.



நண்பர்களே, நான் பார்த்து ரசித்த, உலகின் மிகச்சிறந்த திரைப்படங்கள் சிலவற்றை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதில் முதலாவது Ben - Hur: The Tale of Christ என்ற படத்தை பற்றி பார்க்கலாம்.


1959 இல் வெளிவந்த பென்-ஹர், அந்த கால கட்டத்தில் 11 ஆஸ்கார் அள்ளிக்குவித்த, அருமையான, வரலாற்றுப்படம். அநேதமாக இப்படத்தை பார்க்காதவர்கள் இருக்க முடியாது. அவ்வளவு புகழ் பெற்ற திரைப்படம்.

1 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடக்கும் இந்த கதை, ஜெருசலேம் நகர், மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களை மையமாக கொண்டது. யூத ராஜ பரம்பரயை சேர்ந்த யூதா பென் ஹர் என்ற இளைஞனுக்கும், அவனது சிறுவயது நண்பனான மேசலா என்கிற ரோம இளைஞனுக்கும் இடையே நடக்கும் வன்மம்,விரோதம் மற்றும் பழிவாங்குதல் போன்றவற்றை,பிரமாண்டமாக ,காதல், கண்ணீர்,வீரம் கலந்து கொடுத்துள்ளார், பழம் பெரும் டைரக்டர் ஆன வில்லியம் வ்ய்லர். இவர் தன் வாழ்வில் 1920 - 1970 வரை 70 படங்களை இயக்கி உள்ளார்.
கதாநாயகனாக சார்ல்டன் ஹெஸ்டனும்,(Charlton Heston) வில்லன் மேசலாவாக ஸ்டீபன் பாய்டும் (Stephen Boid) கதாபாதிரதுக்காக பிறந்தவர்கள் போல நடித்திருந்தார்கள்.
இந்த படத்தில் நடித்து, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை தட்டிசென்றார்.2008 வரை வாழ்ந்த அவர் இதுவரை 128 படங்களில் நடித்துள்ளார். அவருடைய முக்கியமான படங்களாக,The ten Commandments(Moses), Planet of Apes, Julius Caesar (Mark Antony), The Omega Man, The Savage,three Musketeers, Earthquake போன்ற சிலவற்றை சொல்லலாம்.




  • இந்த படத்துக்காக 300 செட்கள் போடப்பட்டன.


  • இதற்காக பெரிய கப்பல் ஒன்று செய்யப்பட்டு, பெரிய குளத்தில் நீல சாயம் கரைக்கப்பட்டு, மிகவும் கஷ்டப்பட்டு பெநோவிஷின் கேமராவில் படமாக்கப்பட்டதாம். மிக தத்ருபமாக அமைந்த காட்சிகள் அவை.


  • இதில் மொத்தம் 78 பழகிய குதிரைகள் பயன்படுத்தப்பட்டன. அதிலும் அதில் வரும் ஏழு வெள்ளை குதிரைகள் சொல்வேனியாவில் இருந்து வரவழைக்கப்பட்டன.


  • படத்தின் விசஷமான இறுதில் வரும் ரதப்போட்டி, ரோம் நகரில் மிகப்பெரிய அரங்கம் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இதுவே அந்த காலத்தில் ஒரு சாதனையாக கருதப்பட்டது.


  • அந்த காட்சிக்காக 15,000 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

  • அப்போது மிகவும் விலைஉயர்ந்த, உலகத்தில் இருந்த சில 65 mm காமேராகளில் ஒன்று , அந்த ரத போட்டியில் பயன்படுத்தப்பட்டு, விபத்துக்குள்ளாகி பழுதுபட்டது.

  • MGM நிறுவனத்தின் சின்னமான கர்ஜனை செய்யும் சிங்கம், இந்த படத்திற்கும் மற்றும் ' Next voice you hear ' என்ற படத்திற்கும் மட்டும் கர்ஜனை செய்யாமல் அமைதியாக இருக்கும்.

  • இந்த படத்தின் கதையோடு கூடவே வரும், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை காட்சிகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஏசுவாக நடித்த Claude Heater இந்த படத்திற்கு பிறகு பேசப்படவில்லை.

  • படப்பிடிப்பின் பொது ஒரு கை இல்லாத துணை நடிகர் ஒருவரையும் , கால் துண்டான ஒருவரையும் சமயோசிதமாக, இப்படத்தில் வரும் பிரம்மாண்டமான கப்பல் சண்டை காட்ச்யில் பயன்படுத்திக்கொண்டார்.

  • ஹாலிவுட் வரலாற்றில் வடிகானிடம் (Vatican) ஆமோதிப்பை ஒரே படம் இது தான்.

  • முடிவில் வரும் ரத போட்டியில் நடித்த முன்னணி ஸ்டண்ட் நடிகரான யாகிமா கொன்னுட் (Yakima Conutt) மிகவும் பிரபலமடய்ந்தார்.

  • இதில் வரும் பாலைவனக்காட்சிகள் லிபியா நாட்டில் படமாக்கப்பட்டன. ஆனால் இப்படத்தில் கிறிஸ்துவின் வரலாறும் வருகிறது என்று அரசாங்கத்துக்கு தெரிந்ததும், படபிடிப்பு குழுவினர் அந்நாட்டிலிருந்து வெளியேற்றபட்டனர்.

  • அந்த ரத காட்சி, பின்னணி இசை இல்லமால் வெறும் சப்தங்களை வைத்து காட்சிப்படுத்தப்பட்டது.

  • இயக்குனர் William Wylar , இப்படத்தின் ஒரிஜினலான Ben - Hur: The tale of Christ(1925) படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி, 34 வருடங்கள் கழித்து மீண்டும் இப்படத்தை இயக்கினார்.

  • இப்படத்தின் செட்கள் மாத்திரம் ஒன்றேகால் சதுர கிலோமீட்டர் (340 acres) பரப்பை ஆக்கிரமித்தது.

  • 15 மில்லியன் டாலர் செலவு செய்து ,75 மில்லியன் டாலர் லாபம் கண்டது Metro Goldwyn Mayer.

  • ஏப்ரல் 16,2009 அன்று MGM தன் 85 வது ஆண்டுவிழாவை கொண்டாடியது.

Thursday 14 May 2009

அமரர் நாகேஷின் மானசீக குரு ஜெர்ரி லூயிஸ்.





[ ஏற்கனவே வெளிவந்தப் பதிவு . அதன் தொடர்பு அறுந்ததால் மீண்டும் பதிப்பகப் படுகிறது, நமது நாகேஷிற்காக.]

திரு. நாகேஷ் அவர்களின் மானசீக குரு என்று அறியப்பட்ட திரு.ஜெர்ரி லுயீஸ், அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில், 16 மார்ச் 1926 பிறந்து, இன்னும் வாழும் சரித்திரம். இரண்டு முறை திருமணமாகி, ஏழு பிள்ளைகளின் தகப்பனார்.

அவரை பற்றி சில தகவல்கள்,
  • slaptic காமெடியீன் மன்னன் என்று கருதபடுபவர்.

  • ஒரு முறை உபயோக படுத்தின கோட் சுட்களையும், சாக்ஸ்களையும் திரும்பவும் போடமாட்டார். அவற்றை இல்லாதவருக்கு கொடுத்துவிடுவார்.

  • தசை சம்பந்தமான நோய்களின் ஆராய்ச்சிக்காக, நிதி வசூல் செய்தற்காக ,நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

  • இவரும் டீன் மார்டீனும் சேர்ந்து நடித்த காமெடி படங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை.

  • நடித்த படங்கள் 70.

  • டைரக்ட் செய்த படங்கள் 21.

  • எழுதிய படங்கள் 17.

  • தயாரித்த படங்கள் 15.

  • மற்றும் இசை, டிவீதொடர்கள் போன்றவற்றில் தன் திறமையை காண்பித்துள்ளார்.
அவருடைய சில படங்களை பார்க்கும்போது ஏனோ நம் நாகேஷ் மனதில் நிழலாடுகிறார். நீங்களும் பாருங்களேன்.







iptaccess="always" allowfullscreen="true" width="425" height="344">









https://www.youtube.com/watch?v=EuVVvEig2ic