Wednesday 30 September 2009

மகாத்மா காந்தி : சமாதானத்தின் யாத்திரீகர்.(video)




அக்டோபர் 2, இந்தியாவின் தந்தை மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்தநாள். இந்தியாவில் இந்த நாளில் ஏறக்குறைய எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவது, விடுமுறையும், கசாப்பு மற்றும் மதுக்கடைகளின் மூடல் தான்! (ஆனாலும் எல்லாம் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.) நானும் இந்தியாவில் இருந்த வரையில் அதே நிலைத்தான். ஆனால் நான் தற்போது வசிக்கும் இங்கிலாந்திற்கு வந்தப் பிறகு, நம் நாட்டின் விடுதலைப் போராட்டதையும், நம் போராட்டத் தலைவர்களயும் நினைக்காத நாளே இல்லை! ஏனென்றால்   இங்கு உள்ள  சூழ்நிலை அப்படி. ஏன், எல்லா இடத்திலேயும் அப்படித்தான். இந்தியாவையும் சேர்த்து!
மகாத்மாவைப்பற்றி நாம் சிறுவயது முதலே நாம் படித்து, அறிந்து வைத்திருக்கிறோம். நம்மில் பலருக்கு, என்னையும் சேர்த்து அவரின் சிலக் கொள்கைகளில் சில முரண்பாடுகள் இருந்தாலும் அவரே நம் தேசப்பிதா. அவரை அப்படி அழைக்கக்கூடாது என்றும் சிலர் கூறுவர். ஆனாலும் அவரைத் தவிர வேறு யாரயும் அந்த இடத்தில வைத்தப் பார்க்க முடியவில்லை என்பதே உண்மை! வேறு
 யாரவது உண்டா? No chance!
நாம் காண இருக்கும் இந்த காணொளி, ஒரு அருமையான ஆவணப் படம்.வெவ்வேறுக் கோணங்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. அரியப்புகைப்படங்கள், காணொளிகள் கொண்டது. எல்லோரும், குறிப்பாக இளைஞர்களும், மாணவர்களும் பார்க்கவேண்டிய ஒன்றாகும். பார்த்துவிட்டு அப்படியே போய்விடாமல், நீங்களும் உங்களின் மரியாதையை பின்னூட்டம் முலமாக செலுத்தவேண்டுகிறேன். நன்றி.

























Tuesday 29 September 2009

ப்ருஸ் லீ மாற்றிய உலகம்.[Updated]





ப்ருஸ் லீ... முப்பத்தி இரண்டே வருடம் வாழ்ந்து, வரலாறாகிப்போனவர். தற்காப்புக்கலை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவர். உலகில் அனேகமாக எல்லோராலும் அறியப்பட்டவர். ஆனாலும் அவரை பற்றி மீண்டும் மீண்டும் ஏதாவது செய்திகள் வந்துகொண்டே இருகின்றன.

அந்த வரிசையில் நான் சமிபத்தில் ஹிஸ்டரி சேனல் அருமையாக தயாரித்து வழங்கிய " How Bruce Lee Changed the World" என்ற புதிய ஆவணப்படத்தை காண நேர்ந்தது. இதுவரை பார்த்திராத அறிய போடோக்கள் , வீடியோ கிளிப்பிங்க்ஸ் போன்றவற்றுடன், அவருடன் பழகிய மனிதர்களின் பேட்டிகளோடு, மிகவும் நேர்த்தியாக படைத்துள்ளார்கள். அது உங்களின் பார்வைக்காக.
இது ஒன்றரை மணி நேர வீடியோ. ஆகவே நேரம் ஒதுக்கி தொடர்ந்து பார்த்தால்தான் அதன் தாக்கம் உங்களுக்கும் ஏற்படும்.

Saturday 26 September 2009

அர்னால்டின் உடற்கட்டு... (வீடியோ)

புகைப்படத்திற்கு பதில் ட்ரைலர்......



  • 'அர்நால்ட்' என்றால் 'கழுகின் சக்தி' என்றுப் பொருள்.' ஸ்வார்செனேகர்' என்றால் ஆஸ்திரிய மொழியில் 'கருப்பு ஏர் உழவன்' என்று பொருள் படுமாம்.

  • ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், ஆஸ்திரியா நாட்டில் 1947 ஆம் வருடம் பிறந்தவர்.

  • தாய் மொழி ஜேர்மன் மொழி. அமெரிக்கா வந்தப்போது ஆங்கிலம் அவருக்கு ஒரேக் களேபரம்.

  • அமெரிக்காவிற்கு வந்தது 1968 ஆம் வருடம், அதாவது 21 ஆம் வயதில்.
    அவரின் கண்டிப்பான தந்தை ஒரு போலீஸ் அதிகாரி.

  • சிறுவயதில் அவருக்கிருந்த மூன்று ஆசைகள்: அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும், நடிகராக ஆகவேண்டும்,கென்னடி குடும்பப் பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளவேண்டும். இந்த மூன்று லட்சியங்களையும் நிறைவேற்றிக்கொண்டார்.

    • இவரின் மனைவி கென்னடி குடும்பத்தின் வழிவந்த மரியா ஷிரிவர். இவர்களுக்கு நான்குப் பிள்ளைகள்.

  • 1968 இல் அமெரிக்கா வந்தாலும், 1983 இல் தான் அமெரிக்க குடிஉரிமைப் பெற்றார்.

  • 1997 இல் அவருக்கு பிறக்கும்போதே இருந்த இதய வால்வு கோளாறுக்கு, இதய அறுவைச் சிகிச்சை செய்துக் கொண்டார்.
    அதுமட்டுமல்லாது தன் தாடை எலும்பை பின்னோக்கி நகர்த்த, அறுவைச் சிகிச்சை செய்துக்கொண்டார்.

  • 13 முக்கிய ஆணழகு விருதுகளைப் பெற்றுள்ளார். 1 - மேற்கு ஐரோப்பா ஆணழகன், 7 - ஒலிம்பியஸ் ஆணழகன், 5 - உலக ஆணழகன்.

  • சிறு வயதில் அவர் வீட்டில் கழிவறை, தொலைப்பேசி மற்றும் குளிர்ப்பதனப் பெட்டி கிடையாது. அவர்கள் வீட்டில் குளிர்ப் பதனப்பெட்டி வாங்கிய நாளை தன் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத நாளாகக் கருதுகிறார்.

  • அவரின் மூன்றுப் படங்கள் 'Day' என்று முடியும். End of days, 6th day, Terminator 2: Judgementday.

  • 2004 இல் ஹவாய் தீவுகளில் விடுமுறைக்காக சென்றிருந்தப்போது, கடலில் மூழ்கித் தத்தளிதுக்கொண்டிருந்த ஒரு நபரைக் காப்பற்றி நிஜவாழ்விலும் ஹீரோவானார்.

  • ப்ருஸ் வில்லிஸ், சில்வெஸ்டார் ஸ்டாலோன், டெம்மி மூர், ஆகியோரோடு சேர்ந்து Planet Hollywood என்ற சங்கிலித் தொடர் ஹோட்டல்களைத் தொடங்கினார். பின்னேர் நல்ல லாபம் இல்லை என்றுக் கூறி வெளியேறிவிட்டார்.

  • 2003 மற்றும் 2006 வருடங்களில் தொடர்ந்து கலிபோர்னியாவின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • இவர் கலிபோர்னியாவின் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது நடிகர். முதலாமவர் ரொனால்ட் ரீகன்.

  • அவரின் முதல் வெற்றிப்படமான 'Cannon the Barbarian' படத்தில்(1982) அவர் உபயோகித்த வாள், இன்றும் அவரின் கவர்னர் அலுவலகத்தை அலங்கரிக்கிறது.
    • அங்கங்கே படித்தவைகளை தொகுத்து சில விவரங்களைப் பார்த்துவிட்டோம். இனி நாம் பார்க்கவிருப்பது அவரின் புகழ்பெற்ற 'Pumping Iron' காணொளியை.

      வந்தவர்கள் நன்றாக வோட்டுப் போடுகிறார்கள்.நன்றி. பதிவைப் பற்றிய நிறைக் குறைகளைப்பற்றி ஏதாவது எழுதுங்கள். மீண்டும் சந்திப்போம்.

      [72 நிமிடங்களுக்குப் பிறகு வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம்- மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, ஒரு நிமிடம் கழித்து இணைத்து, மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடருங்கள்.]

      இப்போது மெயின் படம்......

      Monday 21 September 2009

      நேஷனல் ஜியாகரபிக்கின் அற்புதக்கணங்கள்.(வீடியோ)


      கடந்த நூறு வருடங்களைக் கடந்து, அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரைத் தலைமையகமாகக் கொண்டு, விஞ்ஞானம் மற்றும் கல்வித் துறையில், லாபநோக்கமற்ற சங்கமாக இயங்கிவரும் National Geographic Society யைப்பற்றி தெரியாதவர்கள் நிறையப்பேர் இருக்க முடியாது. மிதலில் மக்களிடையே அறிவியல் மற்றும் பூகோள விழிப்புணர்வை ஏற்ப்படுத்த உருவாகப்பட்டதுத்தான் இந்த இயக்கம். மஞ்சள் நிற, நீள்சதுர கட்டத்தைப் பார்த்தவுடன் நமக்கு அது 'NG' என்றுப் புரிந்துவிடுகிறது. மக்களின் மனதில் அவ்வளவு வேரூன்றி உள்ளது. பத்திரிக்கை, தொலைகாட்சி, ஆவணப் படங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல்,பல்வேறு அறிவியல், பூகோள ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் அருங்காட்சியகங்களும், கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளும் உலகம் முழுதும் மிகவும் பிரிசித்தம்.
      இந்த நிறுவனத்தின் புகைப்படங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை. உலகின் தலைச் சிறந்த புகைப்படக் கலைஞர்களும் , ஒளிப்பதிவாளர்களும் இந்த நிறுவனத்திற்காகப் பணிப்புரிகிறார்கள். தற்போது நாம் பார்க்கப்போவது, அவர்கள் எடுத்த காணொளிகளில் மிகச் சிறந்த காட்சிகளை அவர்களே தொகுத்து, ஒரு முழு படமாகத் தந்திருக்கிறார்கள். ஆகவே, fasten your seat belts .... hold on tight..... & get ready for the ride......!

      [ கண்டிப்பாக 72 நிமிடங்கள் கழித்து வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம் - மின் இணைப்பை ஒரு நிமிடம் துண்டித்துவிட்டு மறுபடியும் விட்ட இடத்தில் இருந்துத் தொடருங்கள். ]


      புனித மெக்கா: ஒரு பார்வை.(வீடியோ)


      மெக்கா! புனித நகரம். முகமது நபி அவர்களின் பிறப்பிடம். இறைவனால் மிகவும் நேசிக்கப்படும் இடம். இறை தூதர் இப்ராகிம் அல்-கலீல் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம். இஸ்லாமியர்களின் வாழ்வில் முக்கியப் பங்காற்றும் தலம். அவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெக்காவின் 'காபா' இருக்கும் திசையை நோக்கி, தினமும் ஐந்து முறை பிராதிக்கவேண்டும். அந்த வணக்கத்துக்குரிய காபா - 'இறைவனின் இல்லம்', ஆபிரகாமின் புதல்வர், இஸ்மாயில் அவர்களால் கட்டப்பட்டு, தங்க சரிகைகளால் வேயப்பட்ட கறுப்புத்துணியால் போர்த்தப்பட்டுள்ளது. இந்த மசூதிக்குள் மாத்திரம் அல்ல மெக்கா நகருக்குள் இஸ்லாமியர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள். மெக்காவுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்திரிகர்கள் காபாவை ஏழுமுறை சுற்றி வருவர். அங்குள்ள மூலைகல்லான கருப்புக்கல்லை தொடவோ முத்தமிடவோ செய்தால், அது அவர்களில் பெரும் பேறாக கருதப்படுகிறது. மெக்காவிற்கு செல்லும் புனித யாத்திரை இஸ்லாமியரின் ஐந்து நம்பிக்கைத் தூண்களில் ஒன்றாகும். அங்குள்ள ஜம் ஜம் என்ற கிணற்றில் உள்ள நீர் ஆசிர்வதிக்கப்பட்ட புனித நீராகக் கருதப்படுகிறது. அதற்க்கு நோய்களை குணமாக்கும் சக்தியும் இருப்பதாக நம்பப்படுகிறது.

      மெக்கா நகர் 2008 ஆம் வருடக் கணக்கின் படி 1.7 மில்லியன் மக்கள்தொகைக் கொண்டதாக இருந்தது. இது ஜெட்டா நகரில் இருந்து 73 கி மி, தொலைவில் அமைந்துள்ளது. இது சவூதி அரேபிய நாத்தி அரசாங்கத்தின் கீழ், மெக்கா நகராட்சியின் மேயரால் (அமின்) நிர்வாகிக்கப்படுகிறது.

      இந்த நகரைப் பற்றி முழுமையாக அறிந்துக்கொள்ள நேஷனல் ஜியாகரபி நிறுவனம் படைத்துள்ள 'Inside Mecca' என்ற அருமையான ஆவணப்படம் உறுதுணையாக இருக்கும். பார்த்துப் பரவசமடையுங்கள். நன்றி. அனைவருக்கும் புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்!



      Friday 18 September 2009

      திரைக்குப் பின்னால் - Saving Private Ryan.(Video)


      ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் -உலகின் தலைச் சிறந்த திடைப்பட இயக்குனர்களில் முதல் வரிசையில் நிற்பவர். இவருக்கு அஸ்கார் விருது அவருக்கு அல்வா சாப்பிடுவதைப் போல. நம்மவூர் இயக்குனர்கள் 'உலகத் தரம், உலகத் தரம்', என்றுக் கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால் அப்படிஎன்றால் என்னவென்று நாம் இவரின் படைப்புகளைப் பார்த்தால் தெரியும். அதிலும் இந்த 'Saving Private Ryan' என்றப் போர்க்காவியத்தை எல்லோரும் பார்த்திருப்போம் என்று நம்புகிறேன். இன்னும் பார்க்கவில்லை என்றால் கண்டிப்பாக பார்க்க கட்டளையிடப்படுகிறீர்கள் அன்பாக. இதுவரை எடுக்கப் பட்ட, யுத்தங்களைப் கதைக்களமாகக் கொண்டத் திரைப்படங்களிலேயே தலைச் சிறந்தது என்று எல்லோராலும் போற்றப் படும் படம் என்றால் அது மிகையாகது. ஒவ்வொரு காட்சியும் மிக நுட்பமாக செதுக்கியதுப் போல இயக்கியுள்ளார் ஸ்பீல்பெர்க். சமீபத்தில் அந்தப் படத்தின் 'behind the scene' வீடியோவை பார்க்க நேர்ந்தது. அதில் அவர் படமாக்கும் நேர்த்தியையும், அர்ப்பணிப்பையும் கண்டு வியந்துப் போனேன்! அதை உங்களுடனும் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். நீங்களும் பார்த்து அந்த ஒப்பற்ற படைப்பாளியை வாழ்த்துங்கள். வருகைக்கு நன்றி.




      Thursday 17 September 2009

      11/09 - இரட்டைக் கோபுர தொலைப்பேசித் துயரங்கள். (வீடியோ)


      ஆம். மீண்டும் ஒரு துயரமான காணொளி. சமீபத்தில் வெளிவந்த இந்த வீடியோவைப் பார்க்க நேர்ந்தது. 11/09/2001 அன்று அமெரிகாவின் இரட்டைக் கோபுரங்கள், தாக்கப்பட்டு தகர்க்கப்பட்ட நாளில், அந்த கோபுரங்களில் இருந்து தொலைப்பேசியில் தங்களது குடும்பத்தாரையும் நண்பர்களையும், அழைத்துப் பேசிய, துரதிஷ்ட மனிதர்களின் நினைவுகளை அலசும் வீடியோ இது. இனித் தான் பிழைக்க வாய்ப்பில்லை, மரணம் நிச்சயம் என்று தெரிந்துதும், ஒரு மனிதனுக்கு என்னென்ன மனதில் தோன்றிஇருக்கும்? இவ்வளவு பாதுகாப்பான, தொழில்நுட்பத்தில் தலைச்சிறந்த நாட்டில், எப்படியாவது தம்மை காப்பாற்றிவிடுவார்கள் என்று எத்தனைபேர் தைரியமாக இருந்திருப்பார்கள்? இதனைக் காலமாக தாம் வழிப்பட்டு வந்த கடவுள்கள் தம்மை காப்பற்றுவார்கள் என்று எத்தனைப் பேர் வேண்டிஇருப்பார்கள்? பாவம் அந்த அப்பாவிகள்.எல்லோரும் காணவேண்டிய காணொளி. (இவ்வளவு நடந்தும் ஒரே ஒரு ஹெலிகாப்டர் கூட அருகேயோ, கட்டிடத்தின் மேலேயோ செல்லவில்லை என்பது அமெரிக்காவிற்கு வினோதமாக இல்லையா?)
      இது ஒரு MEGAVIDEO அப்லோட். இது 72 நிமிடங்களுக்குப் பிறகு நின்றுவிடும். அப்போது நீங்கள் மோடத்தின்/இணையத்தள [MODEM/ INTERNET] மின் இணைப்பை அரை நிமிடம் அல்லது ஒருநிமிடம் துண்டித்துவிட்டு மீண்டும் தொடருங்கள். அதற்க்கு முன்பு எவ்வளவு நேரம் படம் ஓடிஉள்ளது என்று மனதில் கொண்டு, அதிலிருந்து மீண்டும் பாருங்கள். YOUTUBE வீடியோக்களில் பத்து நிமிடங்களுக்கு ஒரு வீடியோ என்று பார்ப்பதை விட megavideo சுலபமானது மற்றும் தரமானதால், இதில் முயற்சி செய்கிறேன். தங்களின் கருத்துக்களை மிகவும் ஆவலாக எதிர் பார்கிறேன். நன்றி



      எனக்கு பிடித்த பாடல்... அது உனக்கும் பிடிக்குமே...(ஹிந்தி)


      உங்களுக்கு 35 இல் இருந்து 45 வயது வரை இருக்குமா? அப்படிஎன்றால் கீழ் வரும் பாடல்கள் கண்டிப்பாக உங்களுக்கு மறந்திருக்காது. பாடல்களைக் கேட்டால் அந்த நாட்களின் இனிமையான நினைவுகள் உங்களை சுற்றி வரும். அந்த வயதுக்காரர்கள் மட்டுமல்லாது எல்லா வயதினரயும் கிறங்கவைக்கும் இனிமையானப் பாடல்கள். மொழித் தெரியாவிட்டாலும் நம் மனதோடு ஒன்றிவிடும் ராகங்கள். பரபரப்பான நம் ஓட்டத்தின் நடுவே கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யத்தான் இந்தப் பதிவு. எனக்குப் பிடித்த நிறையப் பாடல்களில் உங்களுடல் கொஞ்சம் பகிர்ந்துக் கொள்ளுகிறேன். கேட்டுவிட்டு எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்.






















































      Monday 14 September 2009

      "THIS IS IT !" - மைகேல் ஜாக்சனின் திரைப்படத்தின் ட்ரைலர்.


      சோனி நிறுவனம் தயாரித்து, அக்டோபர் 28 ஆம் தேதி உலகமெங்கும் இரண்டு வாரங்கள் மட்டுமே திரையிடப்படும், திரைபடத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது. இயக்கம் 'Highschool Musical' புகழ் கென்னி ஒடேகா.அது உங்களின் பார்வைக்கு......



      Friday 11 September 2009

      மைகேல் ஜாக்சனின் கடைசி ஆட்டமும் பாட்டும்(வீடியோ)


      யார் என்ன சொன்னாலும் அவர் ஒரு உலக மாகாக் கலைஞன்! அவர் கடைசியாக பாடி ஆடி ஒத்திகைப் பார்த்தது அவருடைய 'History' ஆல்பத்திலுள்ள ' They dont care about us' என்ற அருமையான பாடல். இதேப்பாடல் பல்வேறு பரிமாணங்களில் வெளிவந்துள்ளது. அவரின் நினைவாக அவைகளைப் பார்ப்போமா?

      ( HQ வீடியோக்கள் பெரியதாக இருப்பதால், படத்தின் மீது 'double click' செய்து, You Tube தளத்தில் சென்றுப் பார்த்தால், படம் முழுமையாகத் தெரியும்)











      பின் வரும் Earth Song என்ற பாடலில் அவரின் சமூகப் பிரக்ஞை வெளிப்பட்டுள்ளது. அவர் உயிரோடு இருக்கும்போது எப்படியோ தெரியவில்லை... ஆனால் இப்போது இப்பாடலை காண்போரின் கண்கள் நிச்சயம் கலங்கும்.



      அவரின் மறைவு எத்தனைப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுப் போகப்போகத்தான் தெரியும்.
      We really miss you Michael !

      Tuesday 8 September 2009

      அமெரிக்காவை மாற்றிய 102 நிமிடங்கள் ! (வீடியோ)


      2001 ஆம் வருடம், செப்டம்பர் மாதம், 11 ஆம் தேதி மாலை இந்திய நேரம், எங்கு இருந்தோம் என்று நம்மில் பலப்பேருக்கு ஞாபகம் இருக்கும். இதேப்போல உலகில் அனைத்து நாடுகளில் வசிக்கும், கொஞ்சமாவது விவரம் தெரிந்தவர்கள், அந்த நாளை மறந்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் மனித வரலாற்றிலேயே, எல்லோரும் பார்த்துக்கொண்டு இருக்கும் போது இப்படிப்பட்ட பயங்கரம் நடந்தது இல்லை! சிலர் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு பயங்கரத்தை கூறுவார்கள். இல்லை என்று கூறவில்லை. ஆனால் அது உலக மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கும்போது நடக்கவில்லை. அது அறிவிக்கப்பட்ட போர் தீவிரவாதம் ! இது அறிவிக்கப்படாத தீவிரவாதப் போர்! ஆனால் எல்லாவற்றிலும் அப்பாவிப் பொதுமக்கள்தான் பலியாக்கப்பட்டனர்! எண்ணிக்கைத்தான் வித்தியாசம்.

      இரண்டு நாட்களுக்கு முன் சேனல் 4 தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அருமையான விவரணப் படம் ' 102 Minutes that Changed Amreica ' பார்த்தேன். இது போன வருடமே வெளிவந்திருந்தாலும், நான் இப்போதுதான் பார்த்தேன். ஏற்கனேவே அந்தத் தாக்குதலைப் பற்றி பல வீடியோக்களைப் பார்த்திருந்தாலும், இந்தப் படம் என்னை ரொம்பவே பாதித்தது. ஆகவே இப்படத்தை ஏற்கனவே பார்க்காதவர்களுக்காக இந்தப் பதிவு போட விரும்பினேன்.

      11/09/01 அன்று நாம் நியூ யார்க் நகரில், காலை 8.48 am முதல், சுமார் 102 நிமிடங்கள், சம்பவம் நடந்த இடத்தில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கீழ் உள்ள வீடியோக்களைப் பாருங்கள். கண்டிப்பாக அதன் தாகத்தை உணர்வீர்கள்! வீடியோவைத் தயாரித்தவர்கள் ஒரே ஒரு வார்த்தைக் கூட பின்னணியில் பேசவில்லை! எல்லாம் தத்ரூபமான, ஒலி, ஒலிப்பதிவுகள்! யார்யாரோ எடுத்த வீடியோக்களை எல்லாம் தொகுத்து, இப்படி ஒரு படைப்பைக் கொடுக்க முடியுமா என்று ஆச்சர்யப் படவைக்கிறது இந்த டாகுமெண்டரி! இதுவரை காணாத காட்சிகள் நிறைய உண்டு. சரி, நீங்கள் பார்க்க ஆரம்பியுங்கள்.