Monday 21 September 2009

நேஷனல் ஜியாகரபிக்கின் அற்புதக்கணங்கள்.(வீடியோ)


கடந்த நூறு வருடங்களைக் கடந்து, அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரைத் தலைமையகமாகக் கொண்டு, விஞ்ஞானம் மற்றும் கல்வித் துறையில், லாபநோக்கமற்ற சங்கமாக இயங்கிவரும் National Geographic Society யைப்பற்றி தெரியாதவர்கள் நிறையப்பேர் இருக்க முடியாது. மிதலில் மக்களிடையே அறிவியல் மற்றும் பூகோள விழிப்புணர்வை ஏற்ப்படுத்த உருவாகப்பட்டதுத்தான் இந்த இயக்கம். மஞ்சள் நிற, நீள்சதுர கட்டத்தைப் பார்த்தவுடன் நமக்கு அது 'NG' என்றுப் புரிந்துவிடுகிறது. மக்களின் மனதில் அவ்வளவு வேரூன்றி உள்ளது. பத்திரிக்கை, தொலைகாட்சி, ஆவணப் படங்கள் தயாரிப்பது மட்டுமல்லாமல்,பல்வேறு அறிவியல், பூகோள ஆராய்ச்சிகளுக்கு நிதி உதவி அளிப்பதிலும் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்த நிறுவனம் நிர்வகிக்கும் அருங்காட்சியகங்களும், கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த பொருட்களை விற்பனைச் செய்யும் கடைகளும் உலகம் முழுதும் மிகவும் பிரிசித்தம்.
இந்த நிறுவனத்தின் புகைப்படங்கள் மிகவும் புகழ்ப்பெற்றவை. உலகின் தலைச் சிறந்த புகைப்படக் கலைஞர்களும் , ஒளிப்பதிவாளர்களும் இந்த நிறுவனத்திற்காகப் பணிப்புரிகிறார்கள். தற்போது நாம் பார்க்கப்போவது, அவர்கள் எடுத்த காணொளிகளில் மிகச் சிறந்த காட்சிகளை அவர்களே தொகுத்து, ஒரு முழு படமாகத் தந்திருக்கிறார்கள். ஆகவே, fasten your seat belts .... hold on tight..... & get ready for the ride......!

[ கண்டிப்பாக 72 நிமிடங்கள் கழித்து வீடியோ நின்றுவிடும். அப்போது உங்கள் ரூட்டர் / மோடெம் - மின் இணைப்பை ஒரு நிமிடம் துண்டித்துவிட்டு மறுபடியும் விட்ட இடத்தில் இருந்துத் தொடருங்கள். ]


4 comments:

  1. வருகைக்கு நன்றி 'பாசிடிவ்' அந்தோனி முத்து.
    வாவ்! உங்களின் பெயரைச் சொல்லும்போதே உற்சாகம் பற்றிக்கொள்ளுகிறது! உங்களை தொடர்புக் கொண்டதில் மிகவும் மகிழ்சி. மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  2. அருமை, download link கிடைக்குமா?

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி சுப்பு.
    உங்களிடல் Real Player இருந்தால் 'right click' செய்து down lowd செய்துக் கொள்ளலாம். என்னிடம் மேம்பெர்ஷிப் இல்லை. நான் download செய்வதென்றால் அப்படித்தான் செய்வேன்.

    ReplyDelete

ஊக்க உரைகள்