Wednesday 1 July 2009

No Man's Land - உலகின் தலைச் சிறந்தப் படங்கள்.




2001 இல் வெளிவந்த இப்படம், 2002 ஆம் வருடத்திற்கான சிறந்த வேற்று மொழிக்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. இதுமட்டுமல்லாது 26 சர்வதேச விருதுகளையும், 16 சர்வதேச விருதுக்கான பரிந்துரைகளும் பெற்று, உலகின் தலை சிறந்த படங்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது என்றால், அது மிகையாகது.


இப்படத்தின் இயக்குனர், இசைஅமைப்பாளர்,மற்றும் ஒலிப்பதிவாளரான டெனிஸ் தனோவிக், தற்போது போஸ்னியா என்றழைக்கப்படும், யூகோஸ்லாவிய நாட்டில் பிறந்தவர். திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். இயக்குனர் ஆவதற்கு முன், போஸ்னியா நாட்டின் ராணுவ கேமராமேனாக, பல போர் முனைகளை கண்டவர். அங்கு தான் கண்ட, கேட்ட அனுபவங்களை கோர்த்து, இந்த படத்தைப் படைத்துள்ளார்.


No Man's Land - இதன் அர்த்தம், இரண்டு எதிரி நாடுகளுக்கிடையே உள்ள, இருவருக்கும் சொந்தமில்லாத ஒரு நிலப்பரப்பு. இத்தகைய இடத்தில், இரு நாடுகளை சேர்ந்த ( போஸ்னியா & செர்பியா ) போர் வீரர்கள் இருவர் சிக்கிக் கொண்டு, அங்கு நடக்கும், வாழவா, சாவா?........, அன்பா. துவேஷாமா?........, நியாயமா, அநியாயமா?..போன்ற பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை, தத்ரூபமாக, மனம் நெகிழ வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.


சிகி என்ற போஸ்னியா முஸ்லீம் போர் வீரன் செர்பியா வீரர்களோடு நடந்த சண்டையில், நண்பர்கள் கொல்லப்பட்டு, தானும் குண்டடிப்பட்டுயாருக்கும் சொந்தமில்லாத ' இடத்தில் உள்ள ஒரு பதுங்குகுழியில் அடைக்கலமாகிறான். அந்த நடப்பதை துப்பறிந்து வர, இரண்டு செர்பிய வீரர்கள் அனுப்பபடுகின்றனர். அதில் ஒருவன் நினோ. அவர்கள் வருவதைக்கண்ட சிகி ஒளிந்துக்கொளுகிறான். வந்தவர்களில் மற்றவன், அங்கு விழுந்து கிடந்த சிகியின் நண்பனான செராவை, இறந்துவிட்டதாக நினைய்த்துக்கொண்டு , அவன் உடம்புக்கடியில், உடலை அசைத்தால் வெடிக்கக்கூடிய கண்ணிவெடியை புதைத்து விடுகிறான். இதைகண்டு கோபமுற்று வெளியே வரும் சிகி, அந்த செர்பிய வீரனை சுட்டுக்கொல்லுகிறான். இந்த சமயத்தில் அவனின் நண்பனான செராவிர்க்கும் நினைவு வந்து விடுகிறது. இப்போது அந்த குழியில் போஸ்னிய வீரர்களான சிகி யும்,செராவும் மற்றும் செர்பிய வீரனான நிநோவும் உள்ளனர். வெளியே வர முற்பட்டால் இரண்டுப் பக்கமும் சுடுகிறார்கள். செராவை நகர விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


இதனிடையே ஒரு வெள்ளைக்கார ரிப்போட்டர் பெண்ணும், ஐ நா பாதுகாப்புப் படையை சேர்ந்த ஒரு பிரெஞ்சு வீரனும் கதையில் நுழைகிறார்கள். இப்படியாக அந்த மூவருக்கும் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை. படத்தின் மிக முக்கிய கட்சியே அதன் கிளைமாக்ஸ் காட்சித்தான். நம் இதயத்தை பாரமாக்கிவிடும் காட்சி அது.


அதன் ஆங்கில சப் டைட்டில் உள்ள வீடியோக்களை முடிந்தவரை அப்லோட் செய்துள்ளேன். வரவேற்ப்பு இருந்தால் மீதியும் செய்யப்படும். பார்த்து விட்டு கருத்துக்களை கூறுங்கள்.
























No comments:

Post a Comment

ஊக்க உரைகள்