[இதற்கு முந்தையப் பதிவான ' ப்ருஸ் லீ மாற்றிய உலகம் ' என்ற பதிவைக் காண இங்கே செல்லவும்]
என்னதான் ஜாக்கி சானும், ஜெட் லீயும் இந்தக்காலத்து, 'மார்ஷியல் ஆர்ட்' எனப்படும் தற்காப்புக் கலை ஹீரோக்களாக வலம் வந்தாலும், நான்கே படங்களில் நடித்து, ப்ருஸ் லீயைப்போல இறவாப் புகழை யாரும் அடைய முடியாது. ஒரு முறை மார்லன் பிராண்டோ கூறியதுப்போல, ஜேம்ஸ் டீன் , மர்லின் மன்றோ போல ப்ருஸ் லீ இளமையிலே இறந்தாலும், அவரின் புகழ் இந்த சினிமா உள்ளவரை நிலைக்கும். அவர் ஒரு மாஸ்டர் !
1972 ஆம் ஆண்டு, கோல்டன் ஹார்வஸ்ட் ஃ பிலிம், சார்பாக தனுடைய நான்காவது படமான 'Game of Death' ஐ படமாக்க துவங்கிவிட்டார். சில சண்டைக்காட்சிகள், அவரின் மாணவரான, கூடைப்பந்துப்புகழ், கரீம் அப்துல் ஜபாரை (உயரம் 7'2") வைத்தும் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், வார்னர் பிரதர்ஸ் அவரை 'எண்டர் தி டிராகன்' படத்தில் நடிக்க அழைத்தனர். சீன சினிமாவில் சிக்கிக்கிடந்த, அவரை உலக அளவில் பிரபலப்படுத்தும் என்பதை கணித்த ப்ருஸ் லீ, கேம் ஆப் டெத் ஐ கிடப்பில் போட்டுவிட்டு, சாகாவரம் பெற்ற, சரித்திரமாகப்போகும் அந்தப் படத்தை நடித்து முடித்தார். உலக சினிமா வரலாற்றில், இந்தப்படமும் வசூலில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது. ஆனால் அதன் ரிலீஸ் தேதி 26 ஜூலை 1973 ஆம் வருடத்தில், ஆறு நாட்களுக்கு முன்பாக, திடீரென மர்மமான முறையில் மரணமடைந்தார் அந்த சாதனைப் படத்தின் ஹீரோ! (ஏனோ மைகேல் ஜாக்சன் நினைவுக்கு வருகிறார் !)
'என்டர் தி டிராகன் ' படத்தின் இயக்குனர், ராபர்ட் க்லோசும், கோல்டன் ஹார்வஸ்ட் - ரேமன்ட் சோவும் சேர்ந்து ப்ருஸ் லீயின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற முன்வந்தார்கள். உண்மையிலே ப்ருஸ் லீ சுமார் 100 நிமிடங்கள் வரை படமாக்கியிருந்தார். ஆனால் இயக்குனருக்கு கிடைத்ததோ வெறும் 15 நிமிட ஒரிஜினல் காட்சிகள் மட்டும்தான். ப்ருஸ் லீ போன்ற சுமாரான முக அமைப்பு கொண்ட ஒரு நடிகரை வைத்து, ஒரிஜினல் கதையையும் மாற்றி ஒப்பெற்றிப் பார்த்தார். ஆனால் பருப்பு வேகவில்லை. சரியான வரவேற்பைப் பெறவில்லை. ரிலீஸ் வருடம் 1979.
இவை இப்படி இருக்க, 1999 இல், பே லோகன் என்ற கிழக்கு ஆசிய (ஹாங்காங் ) சினிமா ஆராய்ச்சியாளரும், திரைக்கதை கர்த்தா, மட்டும் தற்காப்புக்கலை நிபுணர், மிடியா ஏசியா நிறுவனத்தில், கொல்லைப்[புறத்தில் உள்ள வேண்டாத சாமான்களை கிளறிக்கொண்டு இருக்கும்போது, கோழி எச்சங்களுக்கு நடுவே ப்ருஸ் லீ படமாக்கிய ஒரிஜினல் Game of Death படத்தின் படச்சுருள் கிடைத்தது! அதைக்கொண்டு வார்னர் பிரதர்ஸ், ஜான் லிட்டில் என்ற ப்ருஸ் லீயின் முக்கிய நண்பரும், எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமானவரை வைத்து இந்த விவரணப் படமான Bruce Lee: A Warrior's Journey யை தயாரித்தது. இதில் Game of Death திரைப்படத்தில் காணப்படாத ஒரிஜினல் ப்ருஸ் லீயின் சண்டைக் காட்சிகளையும் சேர்த்து, அவர் வாழ்கையில் பங்குபெற்ற முக்கிய நபர்களின் பேட்டியோடு மிகச் சிறப்பாக பதிவு செய்துள்ளனர். அதைத்தான் நாம் இப்போது காணப்போகிறோம் நண்பர்களே.
Bruce Lee: A Warrior's Journey
ஒரு களேபரமான பாடலுடன் கூடிய ப்ருஸ் லீ கிளிப்பிங்க்ஸ் .....
ப்ருஸ் லீயின் இருத் ஊர்வலத்தில் ஹாலிவூட் சூப்பர் ஸ்டார்களான ஸ்டீவ் மேக்வீனும், ஜேம்ஸ் கோபர்னும்.
இந்த புகழ்ப்பெற்ற Kung Fu பாடலை கேட்டிருக்கிறீர்களா ? நம்ம 'குர்பானி - ஆப் ஜெசா கோயிமே' - Made in India புகழ் பிட்டு அப்பையா (Biddu Appaiyaa) இசை அமைத்து கார்ல் டக்லாஸ் பாடியது....
வருகைக்கு நன்றி , ஏதாவது எழுதிவிட்டுப் போங்க...
ஹாங்காங்கில் ப்ரூஸ்லீயின் சிலை...
எத்தனை ஹீரோ பார்த்தாலும் குங்பூ என்றால் ப்ருஸ் லீதாங்க.
ReplyDeleteசூப்பர் கட்டுரை.
சரியாகச் சொன்னீர்கள் சோமு !
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
SUPER...............
ReplyDeletenice. (but i thing he did 9 movies!)u r writing style is good.
ReplyDeletekeep it up!!
saravanan,.
kurumbalur