ரயான் ஒயிட். ( 6/12/71 - 8/4/90 ). அப்படி என்ன தெரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது இந்தச் இளைஞனைப் பற்றி ? ஆமாம். மனித நேயம் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் அறிந்துக்கொள்ளவேண்டிய ஒரு துயரப்பட்ட ஒரு ஜீவன் இவன். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல் தூதுவன் இவன்தான்! தவறே செய்யாமல், தனக்கேத் தெரியாமல், அக்கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, மனஉளைச்சலுக்கு ஆளாகி மரித்துப்போன அழகுச் சிறுவன் அவன். ஆனால் அந்த நோயையே தனக்கு கிடைத்த பேறாகக் கருதி, தன்னால் முடிந்த அளவிற்கு உலகிற்கு தொண்டு செய்து சாகாவரம் பெற்றவன். அதனால் மிகப் பிரபமானவர்களின் நட்பினைப் பெற்று, நம் மனதில் இப்போதும் புன்னகைப் பூக்கிறான். ( இப்போது உயிரோடு இருந்திருந்தால் 39 வயது ஆகி இருக்கும். அவன்.. இவன் .. என்று ஏகவசனத்தில் குறிப்பிடுவதால் தவறாக நினைக்கவேண்டாம். எனக்கென்னவோ அப்படி அழைப்பது இன்னும் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது என்றே கருதுகிறேன்.)
ரயான், அமெரிக்காவின் இன்டியானா மாநிலத்தின் கொவ்கேமா பகுதியில் பிறந்தவன். தந்தை ஹுபர்ட், தாய் ஜென்னி. பாவம் பிறக்கும் போதே 'ஹீமோபிலியா ' என்ற ரத்தம் உறைதலில் பிரச்சனையுள்ள குறைப்பாடால் பிறந்தவன். இந்தக்குறைப்பாடு உள்ளவர்களுக்கு சிறு அடிப்பட்டு ரத்தம் கசிந்தால், நிற்கவே நிற்காது! நார்மலான மனிதருக்கு ரத்தம் கசிந்தால், சில நிமிடங்களில் அடிப்பட்ட இடத்தில் ரத்தம் உறைந்து கசிவது நின்றுவிடும். ஆனால் ஹீமோபிலியா உள்ளவர்கள் கதி மிகவும் பரிதாபம். இந்த நிலை 20,000 - 34,000 ஆண்குழந்தைப் பிறப்புகளில் ஒரு குழந்தைக்கு ஏற்படும். இந்த நோய்க்கு தீர்வே இல்லை அந்தக்காலத்தில்.( இப்போது உள்ளதா என்று யாராவது கூறுங்களேன்) ஆனால் இவர்களின் ரத்தத்தில் குறைவாக உள்ள, ரத்தம் உறைதலுக்கு காரணமாகும் காரணிகளைக் கொண்ட ( coagulation factors - Factor VIII ) - வேறொரு மனிதரின் ரத்தத்தை செலுத்தினால் நிலைமைக் கொஞ்சம் சீராகும். இப்படி நடந்தப் போதுதான் யாரோ எய்ட்ஸ் நோய்க்கொண்ட ஒருவரின் ரத்தம் செலுதப்பட்டுவிட்டது. அந்தக் காலங்களில் இப்போது உள்ளதுப்போல் ரத்தப் பரிசோதனைகளில் தற்போதுள்ளதுப்போல இத்தனைக் கெடுபிடிகள் இல்லை. எய்ட்ஸ் பற்றிய அறிவோ, விழிப்புணர்வோ மிகவும் குறைவு.
இவை இப்படி இருக்க, 1984 இல் நுரையீரலைத் தாக்கும் நிமோனியாக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிதப்பட்டன் ரயான். மிகவும் மோசமான நிலையில், அவனுடைய நுரையீரலின் ஒரு பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற தீர்மானிக்கப்பட்டது. அப்போது நடைப்பெற்ற பரிசோதனைகள் மூலம்தான் ரயானுக்கு எய்ட்ஸ் நோய் இருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் வாழ்க்கைக்கு ஆறு மாதம் கெடு விதித்தனர். அப்போது, பள்ளிக்கு செல்ல முடியாத வகையில் அவன் உடல் நிலை இருந்தது. ஆனால் சிறிது நாட்கள் சென்றப்பின் உடல் நிலையில் கொஞ்சம் முன்னேற்றம் காணப்பட்டது. ஆகவே 1985 ஜூன் மாதத்தில் அவன் படித்துக்கொண்டிருந்த, 'ரசியாவில்லி' ஊரின் ' வெஸ்டேர்ன் மிடில் ஸ்கூல் ' பள்ளியில் அவனை மீண்டும் சேர்த்துக் கொள்ளவேண்டி விண்ணப்பம் வைக்கப் பட்டது. ஆனால் எய்ட்ஸ் நோய்பற்றிய அடிப்படை அறிவே இல்லாத நாட்களான அப்போது, அவனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது. அங்கு வேலை செய்த 50 ஆசிரியர்களும், படித்த 360 இல், 117 மாணவர்களின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டது. ஆகவே இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது.
1983 இல் அமெரிக்க மருத்துவக் கழகம் வெளியிட்ட ஓர் அறிக்கை, எய்ட்ஸ் பற்றிய அறியாமைக்கு அடித்தளமானது. அதிலே இந்த நோயாளிகள் தொட்ட எந்தப் பொருளைத் தொட்டாலும், நோயப்பரவும் என்று கூறப்பட்டிருந்தது. ஆகவே இது மக்களிடையே பீதியையும், அறியாமையையும் வளர்த்துவிட்டது. ரயான் அப்போது வீடுகளுக்கு நியுஸ் பேப்பர் போடும் பையனாகவும் வேலைப்பார்த்துவந்தான். அவனுக்கு நோய் இருப்பது தெரிந்ததும், மக்கள் அந்த பத்திரிக்கைச் சாந்தாவையே நிறுத்தி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பிறகு பல பிரபல மருத்துவர்கள் அறுதியிட்டு எய்ட்ஸ்இன் உண்மையானத் தாக்கம் என்னவென்பதைக் கூறியப்பின்னர், எட்டு மாதங்கள் வழக்காடியப்பின்னர் மீண்டும் பள்ளியில் அனுமதிக்கப்பட்டன. அவன் பள்ளிக்கு வந்த முதல் நாளில், பள்ளியில் மிகப் பெரும்பான் மாணவர்கள் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டனர்! அந்த நிலையில், ஒருப் பாவமும் அறியா அந்த இளைஞனின் மனம் என்னப் பாடுப்பட்டிருக்கும் என்பதை எண்ணும் போது மனம் கலங்குகிறது. அவன் வீதியில் நடந்து சென்றால் " We know you are queer!" ( நீ நடத்தைக் கேட்டவன் என்று எங்களுக்கு தெரியும் ) எனக் கூக்குரலிடுவார்களாம்! என்னப் பரிதாபமான நிலை? ரயான் குடும்பத்திற்கு மிகவும் உறுத்துணையாக இருந்த ' கொவ்கேமா திரிப்யுன் ' ( Kokomo Tribune ) பத்திரிகை ஆசிரியர்களும் கொலை மிரட்டல்களுக்கும், வசவுகளுக்கும் ஆளானார்கள். இதற்கு உச்சக்கட்டமாக வீட்டில் ரியானின் அறை ஜன்னல் துப்பாக்கி குண்டுகளால் தாக்கப்பட்டப்போது, அவன் குடும்பம் அந்த ஊரை விட்டு வெளியேறி, அதே மாநிலத்தில் சிசிரா என்ற ஊரில் குடியேறியது. பின்பு மருத்துவத் துறையில் நடந்த முன்னேற்றங்களால் பல உண்மையான விஷயங்கள் வெளிவந்த சமயத்தில், மீண்டும் அந்த ஊரின் ஹமில்டன் உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்த அன்று, பள்ளி தலைமை ஆசிரியராலும் மாணவர்களாலும் கைக்குலுக்கி வரவேற்கப்பட்டபோது, இதைப் படிக்கும் நம் மனம் நெகிழ்வதுப்போல், அவன் மனமும் நெகிழ்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
நடுநிலைப் பள்ளியில் படித்தப்போது தனிமைப் படுத்தப்பட்ட ரயான், பத்திரிக்கைகளாலும், தொலைக்காட்சிகளாலும் நாடு முழுவதும் பிரபலமானான்! அப்போது வளரத் தொடங்கிய எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்திய போஸ்டர்களுக்கு இவனே மாடலானான்! அது எத்தனைப் பெரிய விஷயம் என்பது ரொம்ப யோசித்தால்தான் விளங்கும். அதுவும் 1980 களில்! ( 'எப்படி இருந்த நான்.... இப்படி ....). நாடு முழுவதும் நடந்த விழிப்புணர்வு மற்றும் நிதித் திரட்டும் விழாக்களில் மிகவும் பிரபலமானவர்களோடு கலந்துக்கொண்டான்! தொலைக்காட்சி, வானொலிகளில் நடந்த விவாதங்களில் கலந்துக்கொண்டான்! அதனால் பலர் அவனின் நண்பர்களானார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் ஜனாதிபதி. ரீகனும் அவர் மனைவியும், பாப் இசை மன்னன் மைகேல் ஜாக்சன், பிரிட்டிஷ் பாடகர் சர். எல்டன் ஜான். போல மற்றும் பலர்.
1990ஆம்ஆண்டுமார்ச் மாதத்தில்,அவன் படித்த பள்ளியின் பட்டமளிப்பு விழாவுக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு, மீண்டும் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான் ரயான். படிப்படியே உடல் நிலை மோசமாகி, கிறிஸ்தவர்களின் பண்டிகையான குருத்தோலை ஞாயிறன்று, அந்தப் பாவப்பட்ட உயிர், இந்தப் பாழும் உலகில் இருந்து விடைப்பெற்றது. சர். எல்டன் ஜான் , கடைசி நிமிடம் வரை கூடவே இருந்து பணிவிடை செய்தார். ரயானின் இறுதிச்சடங்கில் அவரி புகழ்ப்பெற்ற பாடலான ' Skyline Pigion ' என்றப் பாடலை உருக்கத்தொடுப் பாடி இறுதியஞ்சலி செலுத்தினார்.
மைகேல் ஜாக்சனின் முக்கியமான நண்பர்களில் ரயானும் ஒருவன். கொஞ்சகாலத்திலேயே இருவரின் நட்பும் நெருக்கமானது. ரியானின் விருப்பமான போர்ட் கம்பெனியின், சிவப்பு நிற முஸ்டங் காரை, அன்புப் பரிசாக வழங்கினார். ஜாக்சனின் இல்லமான நேவர்லாண்டுக்குள் எப்போதும் சென்றுவர அனுமதிப் பெற்றவர்களில் ரயானும் ஒருவன். ரயான் இறந்ததும், அவனுடைய இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட ஜாக்சன், தான் பரிசாக வழங்கிய கார் கல்லறைக்கு வெளியே நிற்பதுக் கண்டு, அதனுள் ஏறி அமர்ந்து, ஸ்டார்ட் செய்ததும், அவரின் பாடலான ' Man in the mirror ' என்றப் பாடல் ஒலித்ததுக் கேட்டு கண்கலங்கினார். மேலும் ரயான் இறக்கும் முன்பு அவன் கேட்ட கடைசிப் பாடலும் அதுவே என்றறிந்து மனம் கலங்கிப் போனார். தன்னுடைய Dangerous ஆல்பத்தில் ரயானின் நினைவாக 'Gone too soon ' என்ற உலகப்புகழ்ப் பாடலை சமர்ப்பணம் செய்தார் ஜாக்சன். இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால், ஜாக்சன் இறந்தப்போது, அவரின் இறுதிச்சடங்கில், இதேப்படலை பாடி கௌரவித்தார்கள். ABC தொலைகாட்சி நிறுவனம் ' The Ryan White Story ' என்ற வாழ்க்கைப் பதிவை 1989 ஆம் ஆண்டு ஒளிப்பரபியது.
தன் இளம் வயதில் தன்னையும் அறியாமல் கொடிய நோயினால் ஆட்கொள்ளப்பட்டு,
மக்களின் அறியாமையால் மன உளைச்சலுக்கும், துன்பத்துக்கும் ஆளாக்கப்பட்டும், இந்த உலகை நேசித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த இந்த ரயான் ஒயிட் என்ற அருமை மனிதனை, மனிதம் உள்ளவரை மறக்க முடியாது! இந்தப் பதிவு, நம்ம எல்லோரிடமும் போய்ச் சேர ஓட்டுப் போடுங்கள். நன்றி.
ரயானைப் பற்றி மேலும் அறிந்துக் கொள்ள பல வலைத் தளங்கள் உள்ளன. அவற்றில் சில....
http://www.malibufanclub.com/specials.ryanwhite.afp?afpcookie=3C2D7144AADA494ABFC3D6C99E629D16
http://www.michaeljackson.com/us/node/402340
http://www.wftv.com/video/19873344/index.html
http://www.digitaljournalist.org/issue0106/visions_yamasaki1.htm
ரயானுக்காக மைகேல் ஜாக்சன் எழுதிய பாடல்...
http://www.youtube.com/watch?v=ZjExllie9Fg
மைகேல் ஜாக்சன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் முன்னிலையில் ' Gone too soon ' என்றப் பாடலை ரயானின் நினைவாக உலகிற்கு அளித்த காணொளி.
மற்றும் சில காணொளிகள்.....
Watch CBS News Videos Online
No comments:
Post a Comment
ஊக்க உரைகள்