Tuesday, 16 June 2009

The Day of the Jackal - உலகின் தலைச் சிறந்தப் படங்கள்.


1995, நவம்பர் 4 ஆம் தேதி, இஸ்ரேலிய பிரதமர் இசாக் ராபின், டெல் அவிவ் நகரில், இகல் அமீர், என்ற இஸ்ரேலிய வாலிபனால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலைகாரனின் உடைமைகளை ஆராய்ந்த போது, எபிரேய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு புத்தகம் கிடைதத்து. அது பிரெட்ரிக் போர்சித் எழுதிய ' The day of the Jackal' என்ற நாவல். போர்சித் 1970 ஆம் வருடம், ரியுடேர்ஸ் செய்தி நிறுவனத்தின் நிருபராக பிரான்சில் பணியாற்றிய போது, தான் நேரில் கண்ட, சேகரித்த தகவல்களை கொண்டு, இந்த பிரசித்தி பெற்ற த்ரில் நாவலை படைத்தார். இந்த நாவலின் பின்னணி, 1962 இல் அல்ஜீரியா நாட்டின் விடுதலை போராட்டத்தின் போது, பிரான்சில் இருந்த OAS (Organization of the Secret Army) என்ற வலதுசாரி போராளி இயக்கம், அப்போதைய பிரெஞ்சு பிரதமரான 'சார்லஸ் தி கௌல்லே'வை கொல்ல நியமித்த பிரிட்டிஷ் 'கொலைஞ்சனான', நம் கதாநாயகன் 'ஜகல்- (Jakal ) என்ற கில்லாடியின் கொலை முயற்சியை பற்றிய கதை. இது 1972 ஆம் வருடத்திற்கான எட்கர் விருதினை ( சிறந்த மர்மக்கதை ) பெற்றது. மேலும் இன்றுவரை உலகின் புகழ்பெற்ற சிறந்த நாவல்கள் வரிசையில் தன் இடத்தை தக்கவைத்து உள்ளது. இந்த நாவல் 1973 ஆம் வருடம் பிரெட் ஜின்னேமன் (Fred Zinnemann)ஆல் திரைப்படமாக உருவாக்கப்பட்டது. அதில் கதாநாயகனாக எட்வர்ட் பாக்ஸ் (Edward Fox) நடித்துள்ளார் என்பதைவிட வாழ்ந்துள்ளார் எனபது பொருத்தமாக இருக்கும். இவர் நமக்கு நன்கு அறிமுகமானவர்தான். 'காந்தி' திரைப்படத்தில் ஜெனரல் டயர் காதாப்பதிரத்தில் நடித்தவர் இவர்தான்.

மற்றும் இதில் துப்பறியும் நிபுணர் லேபேல்ஆக நடித்துள்ள மைகேல் லோன்ச்டல் தன் பங்கை திறம்பட ஆற்றிஉள்ளார். படத்தின் பலமே அதன் நம்பகத்தன்மையும், நுணுக்கங்களும், சாதாரனத்தன்மையும், தொய்வில்லாத திரைக்கதையும் தான். கொலை திட்டத்தில் அவன் செய்யும் வொவ்வொரு செயல்திட்டமும் நுணுக்கமானவை. அவன் செய்யும் ஆள் மாறாட்ட குற்றம் இன்றும் இங்கிலாந்தில் 'The day of the Jackal fraud' என்று அழைக்கப்படுகிறது. மாற்ற ஹாலிவுட் படங்களை போல பறக்கும் கார்கள் கிடையாது, படபடக்கும் துப்பாகிகள் கிடையாது. பறந்து பறந்து தாக்கும், ஹெலிகாப்டரில் தொங்கும் நாயகத்தனமும் அறவே கிடையாது. நம் கண்முன்னே விரியும் கொலைதிட்டமும், மிகைப்படுத்தாத நடிப்பும் நம்மை படத்தோடு ஒன்றி, சீட் நுனியில் உட்காரவைதுவிடுகிறது.

படத்தின் ஒளிப்பதிவை குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஜீன் டோர்நிஎர் என்ற பிரெஞ்சு ஒளிப்பதிவாளர் பங்காற்றிஉள்ளார். ஏதோ காமெராவை மறைவிலிருந்து இயக்கியது போல அனைத்து காட்சிகளிலும் தத்ருபம். அதிலும் அந்த க்ளைமாக்ஸ் காட்ச்யில் அபாராம். இந்த விடுதலை நாள் கொண்டாட்ட பேரணி படபிடிப்பிற்க்கு, பிரெஞ்சு அரசாங்கம் அனைத்து போர் வீரர்கள்,தளவாடங்கள் அனைத்தையும் கொடுத்து உதவியது. அந்த படபிடிப்பில் கலந்துக்கொண்ட பிரான்ஸ் நாட்டு மக்கள் அதை உண்மை என்றே நினைத்துவிட்ட்னராம்.

சிறந்த எடிட்டிங்குக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது இந்தப்படம்.

மறுபடியும் இப்படம் 1997 இல் புருஸ் வில்லிஸ் , ரிசேர்ட் கேர் நடித்து The Jackal என்ற பெயரில் வந்தது. ஆனால் அது செய்த காரியம் என்னவென்றால், மக்களை மறுபடியும் பழைய the day of the Jackal ஐ பார்க்கவைததுதான்.

நானும் பார்த்தேன். நீங்களும் மீண்டும் பாருங்கள். இனி

இப்படத்திலிருந்து கடைசி கட்ட காட்சியை காண்போமா?

ஆனால் இப்படத்தை பார்க்காதவர்கள் உச்சகட்ட காட்சியை முழு படத்தில் காண்பது மிகவும் சிறந்தது. அதனால் தான் அதை இங்கு சேர்க்கவில்லை.

வருகைக்கு நன்றி. பின்னூட்டம் ப்ளீஸ்.



3 comments:

  1. நல்லா சொன்னிங்க டீட்டெய்லு..!
    நன்றி அறிமுகப்படுத்தியதற்கு...

    ReplyDelete
  2. settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முறை கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி கலை.
    நீங்கள் சொன்னபடி செய்தாகிவிட்டது. சாரி.

    ReplyDelete

ஊக்க உரைகள்